புதன், 1 ஏப்ரல், 2020

#830 - திருமணம், விவாகரத்து மற்றும் மறுமணத்தை குறித்து விளக்கவும்.

#830 - *திருமணம், விவாகரத்து மற்றும் மறுமணத்தை குறித்து விளக்கவும்*.

*பதில்*
பலருக்கு இந்த பதிவு முகச்சுளிவை தரும்.

அநேகருக்கு திருமணம் – விவாகரத்து – மறுமணம் என்பது இப்போது வெகு சுலபமாகிவிட்டது.

அநேக கிறிஸ்தவர்களும், ஊழியர்களுமே இதற்கு பலியாகி உள்ளது மிகவும் வேதனைக்குறியது. மனந்திரும்ப இன்றும் காலம் உள்ளது என்பதை மனதில் கொண்டால் – நித்தியம் சுகமாகும்.

1)
*திருமணம்*:
தேவனுடைய திட்டத்திற்கு கீழ்படியவும் கடைபிடிக்கவும் மீறாமலும் இருக்கவும் ஆணுக்கு பெண் துணை அவசியம் – ஆதி. 2:17-18

சந்ததி வளரும்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் – ஆதி. 1:28, ஆதி. 9:1, ஆதி. 9:7.

கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள் – சங். 128:3-4, ஏசா. 51:2

திருமண உறவில் நுழையும் போது, இருவரும் உடன்படிக்கை ஒப்பந்தத்தில் நுழைகிறார்கள்; அந்த ஒப்பந்தம் தேவனால் சாட்சியாகவும் சீல் வைக்கப்பட்டுள்ளது – எசே. 16:8, மல். 2:14.

திருமணம் செய்ய மறுப்பது இரட்சிப்பிற்கு உகந்ததல்ல – 1தீமோ. 2:15, 1கொரி. 7:2, 1கொரி. 7:9, நீதி. 5:18-19

திருமணம் செய்து கொள்பவன் கர்த்தரால் தயையை பெற்றக்கொள்கிறான் – நீதி. 18:22, 19:14

திருமணம் செய்து கொள்பவர் – தேவனுடைய சுதந்திரத்தை இனாமாக பெற்றுக்கொள்கிறார்கள் – சங். 127:4

கட்டாயம் திருமணம் செய்யவேண்டும் என்பதல்ல – திருமணம் செய்வது பரிசுத்த வாழ்க்கையை வாழ ஏதுவாக்கும். வீண் வைராக்கியத்தினாலும் கவுரவத்தினாலும் தவறான கொள்கையினாலும் தீயவரின் பரிந்துரைத்தலின் பேரில் உள்ள பற்றுதலினாலும் - பரம இரட்சிப்பை இழந்து விடவேண்டாம் – 1கொரி. 7:28, 1தீமோ. 5:14.

விவாகம் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்துபவர்கள் – விசுவாசத்தை விட்டு விலகினவர்கள், பிசாசின் உபதேசக்காரர்கள், தேவனுக்கு விரோதமாக சொல்பவர்கள் – 1தீமோ. 4:1-2

2)
*விவாகரத்து*:
திருமணம் என்பது – தேவன் இணைத்தது. அதை பிரிப்பதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது – மத். 19:6

திருமணம் என்பது வாழ்நாள் முழுவதும் உள்ள அர்ப்பணிப்பு. ஒரு திருமண உடன்படிக்கை செய்யப்பட்டவுடன், மரணம் அல்லது பாலியல் துரோகம் இல்லாமல் பிரிவதற்க வேதத்தில் இடமில்லை - ரோமர் 7:2, மத். 5:32, 19:9, 1கொரி. 7:39

மனக்கடினத்தின் நிமித்தம் – மோசே விவாகரத்திற்கு இடங்கொடுத்தார் – மத். 19:8

*கிறிஸ்துவின் கட்டளைப்படி*:
வேசித்தனத்தில் கண்டுபிடிக்கப்பட்டாலொழிய மனைவியை விவாகரத்து செய்வதற்கு எந்த கணவனுக்கும் அனுமிதியில்லை – மத். 5:32, மத். 19:9

தன் மனைவியை சகல தீங்கினின்றும் பாதுகாக்க கணவனுக்கு முழு பொறுப்பு உள்ளது -  எபே. 5:27

*பவுல் கொரிந்தியருக்கு எழுதியதை கவனியுங்கள்*:
விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப்பிரிந்து போகக்கூடாது.

பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது.

மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்.

அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள்.

என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன.

ஆகிலும், அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.

மனைவியானவளே, நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? 1கொரி. 7:10-16

தேவன் நமக்கு எவரை நியமித்திருக்கிறாரோ – அதில் நாம் நிலைத்திருக்க வேண்டும் !!

1கொரி. 7:17 தேவன் *அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ*, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம்பண்ணுகிறேன்.

1கொரி. 7:20 *அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன்*.

லூக்கா 16:18 தன் *மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான்*, புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான்.

3)
*மறுமணம்*:
திருமண உடன்படிக்கை உள்ளார்ந்த பொறுப்புகளைக் கொண்டுள்ளது. ஒரு நபர் திருமண உறவில் ஈடுபடும்போது, அவர் அல்லது அவள் இந்த உறவின் சில கடமைகளை ஏற்றுக்கொள்கிறார்கள் -1கொரி. 7:3-5; எபே. 5:22, 1தீமோ. 5:8.  
வேதத்தில் அங்கீகரிக்கப்படாத விவாகரத்தில் ஈடுபடுவதன் மூலம் ஒரு திருமணத்தை மீறி, தேவனுடைய திட்டத்தை உடைத்து பரிசுத்தமான பொறுப்புகளிலிருந்து வெளிப்படுத்துவதாகும்.

கணவனும் மனைவியும் பிரிவதன் மூலம் ஒருவருக்கொருவர் பாவகணக்கை வருவித்துக்கொள்கிறார்கள் – 1கொரி. 7:5

*மனைவியோ கணவனோ உயிரோடிருக்கும் போது வேறொருவரை மறுமணம் செய்பவர்கள் – விபசாரம் செய்கிறார்கள்* – 1கொரி. 7:39, 1கொரி. 7:11, ரோ. 7:3, லூக்கா 16:18, மாற்கு 10:11, 12

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக