புதன், 1 ஏப்ரல், 2020

#826 - 1 சாமுவேல் 6:1 கர்த்தரின் பெட்டி பெலிஸ்தியர் தேசத்தில் 7 மாதம் எப்படி இருந்தது?

#826 - *2 சாமுவேல் 6:6-8 - தேவனுடைய பெட்டி கீழே விழக்கூடாது என்று தொட்ட ஊசாவையே தேவன் அடித்தார். 1 சாமுவேல் 6:1 கர்த்தரின் பெட்டி பெலிஸ்தியர் தேசத்தில் 7  மாதம் எப்படி இருந்தது?*

*பதில்*
தேவனுடைய பெட்டி இஸ்ரவேலரின் பாளையத்தில் வந்தது என்று அறிந்ததுமே அலரினார்கள் பெலிஸ்தியர்கள். 1சாமு. 4:7-8

மகத்துவமுள்ளவர் என்று அறிந்தும் தேவனுடைய பெட்டியை தங்கள் தேசத்திற்கு எடுத்து வந்தார்கள்.

ஆனால் – அவர்கள் தேவனுடைய பெட்டியை வைத்திருந்த அத்தனை நாட்களும் வாதிக்கப்பட்டார்கள். சம்பவங்கள் கீழே:

1)
1சாமு. 5:2-4 பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, தாகோனின் கோவிலிலே கொண்டுவந்து, தாகோனண்டையிலே வைத்தார்கள்.

அஸ்தோத் ஊரார் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் *தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தது*; அப்பொழுது அவர்கள் தாகோனை எடுத்து, அதை அதின் ஸ்தானத்திலே திரும்பவும் நிறுத்தினார்கள்.

அவர்கள் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் *தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைபட்டுக் கிடந்தது*; தாகோனுக்கு உடல்மாத்திரம் மீதியாயிருந்தது.

2)
1சாமு. 5:6 அஸ்தோத் ஊராரைப் பாழாக்கும்படிக்கு *கர்த்தருடைய கை அவர்கள்மேல் பாரமாயிருந்தது*; அவர் அஸ்தோத்தின் *ஜனங்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார்*.

3)
1சாமு. 5:8-9 பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் அழைப்பித்து, தங்களண்டையிலே கூடிவரச் செய்து: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நாம் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை காத் பட்டணமட்டும் எடுத்துச் சுற்றிக்கொண்டு போகவேண்டும் என்றார்கள்; அப்படியே இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனார்கள்.
அதை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனபின்பு, *கர்த்தருடைய கை அந்தப் பட்டணத்தின்மேல் மகா உக்கிரமாக இறங்கிற்று*; அந்தப் பட்டணத்தின் மனுஷருக்குள், சிறியவர் துவக்கிப் பெரியவர்மட்டும், மூலவியாதியை உண்டாக்கி, அவர்களை வாதித்தார்.

4)
1சாமு. 5:10 அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி *எக்ரோனுக்கு வருகிறபோது, எக்ரோன் ஊரார்: எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோட*, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்களண்டைக்குச் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள்.

5)
1சாமு. 5:11-12 அவர்கள் பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் கூடிவரும்படி அழைத்து: இஸ்ரவேலின் தேவன் எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோடாதபடிக்கு, அவருடைய பெட்டியை அதின் ஸ்தானத்திற்குத் திரும்ப அனுப்பிவிடுங்கள் என்றார்கள்; அந்தப் *பட்டணமெங்கும் சாவு மும்முரமாயிருந்தது*; தேவனுடைய கை அங்கே மகா பாரமாயிருந்தது. செத்துப்போகாதிருந்தவர்கள் மூலவியாதியினால் வாதிக்கப்பட்டதினால், *அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வானபரியந்தம் எழும்பிற்று*. 

இப்படி கர்த்தருடைய பெட்டி 7 மாதம் அவர்கள் வசம் இருந்தது !! 1சாமு. 6:1

*இதில் நம்முடைய பாடம் என்ன*?
1-தேவனுடைய வார்த்தைக்கு சரியான (தகுதியில்லாத) வகையில் உடன்படாத போது அவர்களை தேவன் வாதித்தார் !!!

2-வாதை/கஷ்டம்/வியாதி/துன்பம் வந்த போது ஜனங்கள் தங்களின் தவறை உணர்ந்தார்கள் !!! 1சாமு. 6:2

3-தவறை சரிசெய்து கொள்ளும்படியான நடவடிக்கைகளை எடுத்தார்கள் !!! 1சாமு. 6:4

4-மீறினதிலிருந்து விலகினார்கள் !!! 1சாமு. 6:13-21

5-தவறை திருத்திக்கொண்டாலும், ஜீவனுள்ள தேவன் வல்லமையுள்ளவர் என்று அறிந்த போதும் - தங்கள் விக்கிரக வணக்கத்தை விட்டு ஜீவனுள்ள தேவனிடத்திற்கு திரும்பவில்லை !!!

*ஜீவனுள்ள தேவன் என்பதை இன்றும் சுவாசத்தை பெற்றிருக்கிற நாம் உணர்ந்து – அவரையே பற்றிக்கொண்டு, பாவங்களை விட்டு ஓய்ந்து வசனத்தை ஏற்றுக்கொண்டு இயேசுவினிடமாய் மனந்திரும்பி அவருடைய கட்டளைக்கு ஞானஸ்நானத்தில் கீழ்படிந்து பிதாவாகிய தேவனை தொழுது கொள்ளும்படி உண்மையான கிறிஸ்தவத்தில் திரும்ப வேண்டும்.

*எத்தனை முறை எடுத்துக்கூறினாலும் – தங்கள் தவறான கொள்கையையும் கற்பனை காவியங்களையும் மனித வழிபாட்டுகளையும் சுய உபதேசங்களையும் விட்டு கிறிஸ்தவ மதத்தினர் கிறிஸ்தவ மார்க்கத்திற்கு / புதிய ஏற்பாட்டு சத்தியத்திற்கு திரும்ப வேண்டும்.

*தவறான நடக்கைகளிலிருந்தும் வேதத்திற்கு விரோதமான சகல பழக்கவழக்கங்களிலிருந்தும் விடுபட்டு அப்போஸ்தல உபதேசத்திற்கு திரும்பவேண்டும்.

*வேதத்தில் இல்லாத குழந்தை ஞானஸ்நானம்,
கிறிஸ்தவத்தில் இல்லாத இசைக்கருவிகளுடன் கூடிய தொழுகை,
துணிகரமான - பயமும் அச்சமுமின்றி தொழுகையில் கூச்சலும் ஆட்டமும் குதித்தலையும் விட்டு,
மொழி பெயர்க்க ஆளில்லாத பட்சத்தில் சபையில் அந்நிய பாஷையில் பேசாமல் சொந்த மொழியில் மாத்திரம் பேசுதல்,
வாரத்தின் முதல் நாளில் அப்பம் பிட்குதல்,
ஆவியின் கனிகளான நற்பண்புகளை சொந்த வாழ்க்கையில் மீட்டு எடுத்தல் போன்றவைகளை கடைபிடிக்கும்படி சத்தியத்திற்கு திரும்ப இந்த சம்பங்கள் நம்மை நிணைப்பூட்டுகிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக