*பதில்*
இந்த
விஷயத்தை பொருத்தமட்டில் மாற்கு 3ம் அதிகாரத்தில் நமக்கு சில குறிப்பு
விடப்பட்டிருக்கிறது.
இயேசுவானவர்
தான் தேவனுடைய குமாரன் என்பதை நிரூபிக்க அற்புதங்களைச் செய்தார் (யோ. 20:30-31).
இந்த
அற்புதங்களை கண்ட எவரும் அவற்றை மறுக்க முடியவில்லை.
அவர்கள்
இந்த அற்புதங்களை தேவனுடைய வல்லமை என்றோ அல்லது பிசாசின் வல்லமை என்றோ கூறமுடியும்.
அற்புதங்கள்
தேவனுடைய வல்லமையின்படி என்று கூறும் பட்சத்தில், இயேசு தேவனிடமிருந்து வந்தவர் என்று ஓப்புக்கொள்ள
வேண்டும்.
ஆனால்
- கிறிஸ்துவின் தெய்வத்துத்தை நிராகரித்து,
பிசாசின் வல்லமையினால் என்று வேதபாரகர்கள் கூறினர் (மாற்கு 3:22).
எனவே, தேவன் கிறிஸ்துவுக்குள்
ஏற்படுத்தின மன்னிப்பை பெறுவதற்கான ஒரே வழிமுறையை நிராகரித்தார்கள்.
ஈராயிரம்
ஆண்டுகளுக்கு பின்னர் இருக்கும் நாம் - இன்றைய காலங்களில் ஆவிக்கு விரோதமான தூஷணம்
என்பது என்னவாக அல்லது எப்படி ஒருவர் செயல்படமுடியும்?
புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட / எழுதப்பட்டிருக்கும் "இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களைச் – அவர் தேவன் என்றும் தேவ ஆவியால் அதை
செய்தார் என்றும் நம்பாத பட்சத்தில் தேவதூஷணத்திற்கு ஆளாக நேரிடுகிறது.
“கிறிஸ்து”
அசுத்த ஆவியை உடையவர் என்று அவர்கள் சொன்னதால் இயேசு *இப்படி* சொன்னார் – மாற்கு
3:29-30
இயேசு
தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்து,
மனந்திரும்பி, பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம்
எடுக்கும் போது – *சகல பாவத்தையும் மன்னிக்க அவர் வல்லவராயிருக்கிறார்* – 1யோ. 1:7
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக