#822 - *உங்களுக்கான தேவதூதர் என்றால்?* இந்தச்
சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை
எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்று மத் 18:10ல் சொல்லப்பட்ட
வசனத்தில் அவர்களுக்கான தூதர் என்று எழுதியிருக்கிறதே அதைப்பற்றிய விளக்கம் please (#820ஐ தொடர்ந்து வந்த கேள்வி)
*பதில்*
அவர்களுக்குரிய
தேவதூதர்கள் பிதாவின் சமூகத்தில் எப்போதும் உள்ள தரிசனத்தின் நோக்கம் என்ன என்பதன்
முழு கருத்து இங்கே வெளிப்படுத்தப்படவில்லை என்பதை கவனியுங்கள்.
தேவதூதர்கள்
தேவனுடைய கட்டளைபடி தேவனுடைய மக்களுக்கான சேவையை செய்கிறார்கள் என்று நாம்
அறிந்தாலும் அவர்கள் என்ன செய்கிறார்கள்,
எப்படி செய்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடப்படவில்லை.
நம்மைச்சுற்றி
நடக்கும் தற்செயல் நிகழ்வுகள் / காரியங்களை தேவதூதர் மூலமாக செயல்படுத்தப்படுகின்றன
என்பதை குறிப்பிட முடியுமா என்று அடிக்கடி ஆச்சரியப்படுகிறேன். அதே வேளையில் எபிரெயர்
1:14ல் சொல்லப்பட்டவைகளுக்கும் இதற்கும் தொடர்பு உண்டா என்பதும் நிரூபிக்க முடியாதவை.
மத்தேயு
18:10 என்பது தேவதூதர்கள் சிறியவர்களைக் கவனித்து வருவதாகவும், தீமை நடக்கும்போது,
தேவதூதர்கள் தங்கள் சார்பாக கடவுளிடம் நேரடியாக வேண்டுகோள்
விடுக்கவும் முடியும் என்பதையும் நமக்கு எச்சரிக்கிறது. தேவதூதர்கள் எல்லா
தீங்கும் நடக்காமல் தடுக்கிறார்கள் என்று இயேசு சொல்லவில்லை; அப்படியிருக்குமாயின், நமக்கு எச்சரிப்பின் செய்தி
அவசியமில்லாமல் இருந்திருக்குமே !!
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக