#819 - *பேதுருவும் யோவானும் படிப்பறிவில்லாதவர்களானபோது எப்படி நிருபங்களை எழுதினார்கள்?*
*பதில்*
அப். 4:13ல் பேதுருவும் யோவானும் … படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் மற்றவர்கள் ஆச்சரியப்பட்டதை காண்கிறோம்.
ஆனால் இதே போன்றதோர் குற்றச்சாட்டை இயேசுவின் மீதும் அந்த ஜனம் வைத்ததை நாம் அறியவேண்டும்.
யோ. 7:15 - “அப்பொழுது யூதர்கள்: இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள்”.
அதாவது – அவர்கள் பார்வையில்,
தாங்கள் பயிற்சியளித்ததைப் போன்று அவர்கள் பயிலவில்லை என்றால், அந்த நபர் படிக்காதவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு !!
இயேசு கிறிஸ்து 12வது வயதில் எருசலேம் தேவாலயத்தில் போதகர்கள் நடுவில் விவாதித்ததும், தன் சொந்த ஊரில் வந்து ஏசாயா சுருளை வாசித்ததும் சான்று – லூக்கா 4:20, லூக்கா 2:46
பவுல் ஒரு பாரம்பரிய யூதக் கல்வியைக் கொண்டிருந்தார், அவருடைய காலத்தின் மிகவும் பிரபலமான ஆசிரியர்களில் ஒருவரால் கற்பிக்கப்பட்டார் - அப். 22:3
பவுலுடன் ஒப்பிடும் போது பேதுரு மற்றும் யோவானின் கல்வி முறையானது குறைவாக இருந்திருக்கலாம். ஆனால் கிறிஸ்துவுடன் பேசும்போது அவரை அடையாளம் காணும் அளவிற்கு அல்லது அவர் மேசியா என்று பிரமாணங்களில் சொல்லப்பட்டிருப்பதை அறியப்படும் அளவிற்கு அவர்களுக்கு கல்வி இருந்திருக்கிறது.
ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று."(1 கொரி. 1:20-21).
கிறிஸ்துவோடு இருந்த காலங்களில் இன்னும் அதிகமாக அவர்கள் பயின்றிருக்கலாம். இல்லையென்றால் பவுலைப்போல ஒரு எழுத்தாளனை வைத்து எழுதும் அளவிற்கு பத்மு தீவில் யோவானுக்கு வாய்ப்பு இருந்திருக்காதே !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக