#815 - *ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் நமக்கு சொந்தமானது என்றால் என்ன என்று
விளக்கவும்*
*பதில்* நீங்கள்
கேட்பது ஆதியாகமம் 12ம் அதிகாரம் முதல் 3வசனங்களின் அடிப்படையில் என்று நான்
நினைப்பது சரியானால் – கீழே உள்ள பதில் அதற்கு சரியானது என்று நம்புகிறேன்.
ஆதி.
12:1 கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன்
தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக்
காண்பிக்கும் தேசத்துக்குப் போ.
ஆதி..
12:2 நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி,
உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப்
பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
ஆதி..
12:3 உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்;
பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
*வாக்குறுதியின்
கூறுகள்*:
ஆதியாகமம்
12: 1-3-ன் சொற்களை விவரிக்கும்போது,
அவை பெரும்பாலும் ஒன்றோடொன்று தொடர்புடைய 3 வாக்குறுதிகளைக்
கொண்டிருப்பதாகப் பேசுகிறோம்.
தேவன் ஆபிரகாமுக்கு அளித்த பல வாக்குறுதிகளை வகைப்படுத்த இது ஒரு சிறந்த வழியாகும்.
வாக்குறுதியை
இரு மடங்கு வாக்குறுதியாகப் புரிந்துகொள்வது சிறந்தது என்று வேத வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்:
1)
சரீரப்பிரகாரமான ஆசீர்வாதமாக வழங்கப்பட்ட வாக்குறுதி - ஒரு தேசம் & நிலம்;
மற்றும்
2)
ஆத்துமாவிற்கான / நித்திய வாழ்விற்கான ஆசீர்வாதமாக வழங்கப்பட்ட வாக்குறுதி - ஒரு வித்து
/ சந்ததி
ஆபிரகாமுக்கும்
அவருடைய பிள்ளைகளுக்கும் கடவுள் அளித்த வாக்குறுதிகளின் உள்ளடக்கம்:
ஒரு
பெரிய தேசம் – ஆதி. 22:17 - நான்
உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை
வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே
பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின்
வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்...
ஆபிராமின்
பிள்ளைகளை ஒரு சிறந்த தேசமாக மாற்றுவதாக அவர் உறுதியளித்தார்.
அவருடைய
வீட்டிலுள்ள எல்லா ஆண்களுக்கும் விருத்தசேதனம் செய்வதற்கான சிறப்பு உடன்படிக்கை
வழங்கப்பட்டது - ஆதி. 17:1-14;
மலடியாக
இருந்த அவரது மனைவி சாராள் – ஆபிரகாமின் 100வது வயதில் அவருக்கு ஒரு மகனைப்
பெற்றார் – ஆதி. 21:1-7.
பின்னர், அந்த மகன், ஈசாக்கு, தனது தந்தையின் மக்களிடமிருந்து ஒரு
மனைவியை தெரிந்தெடுத்துக்கொண்டார் (ஆதி. 24);
ஈசாக்கின்
"வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட" மகன் யாக்கோபு தன் தாயின் மக்களிடமிருந்து
ஒரு மனைவியை எடுத்துக் கொண்டான் (28:1-4).
கானானியர்களின்
ஸ்திரீகளையோ, அல்லது அவர்கள் வாழ்ந்த பிற தேசங்களிலிருந்தோ எந்த ஸ்திரீகளையும் திருமணம்
செய்யக்கூடாது என்று இருவருக்கும் எச்சரிக்கையாக சொல்லப்பட்டிருந்தது. ஆதி. 24:3,4,
37, 28:1, 28:6
வரவிருக்கும்
தலைமுறைகள் முழுவதும் அவர்களோடே கலவக்கூடாது என்ற ஒரு எச்சரிக்கையும்
கொடுக்கப்பட்டது. உபா. 7:3
தெளிவாக, இது ஒரு சந்ததியாக
பிரித்தெடுக்கப்பட்டது - கடவுளின் நோக்கங்களுக்கு ஒரு சிறப்பு வழியில் சேவை செய்ய
வேண்டிய ஒரு இனத்தின் “கட்டமைப்பு” என்று சொல்லலாம்.
பின்னர்
இஸ்ரேல் தேசம் என்று அழைக்கப்பட்டது,
(யாக்கோபுவை இஸ்ரேல் என்று கடவுள் அழைத்தார்).
சீனாயில்
சட்டத்தை வழங்குவதன் மூலம் இஸ்ரேல் கடவுளின் தேசமாக மாறியது. ஏனெனில் அவர்கள்
தங்கள் சொந்த "அரசியலமைப்பை" பெற்றனர்.
மேலும்
தேவன் தம்முடைய கட்டளைகளின் மூலம் அவர்களைப் பிரித்தார்.
1.
கானானின் “வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத்தின்” தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு
முன்பு மோசே, “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைப் பெருகப்பண்ணினார்; இதோ, இந்நாளில் நீங்கள் வானத்து
நட்சத்திரங்களைப்போலத் திரளாயிருக்கிறீர்கள்“ என்றார் (உபாகமம் 1:10)
2.
பிற்காலத்தில் இஸ்ரேல் கடவுளின் விசேஷ ஜனமாக அடையாளம் காணப்படுகிறது. அவருடைய
சொந்த மேற்பார்வையில் ஒரு பெரிய தேசம். 2சாமு. 7:23
*கானான் தேசம்*:
தேவன் வழிநடத்திய தேசத்தில்
ஆபிரகாம் நுழைந்த பிறகு, தேசத்தைப்
பற்றிய அவருடைய நோக்கங்களை தேவன் மீண்டும் வலியுறுத்தினார்: ஆதி. 13:14-15
தேவன் ஆபிரகாமுக்கு
வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத்திற்கு உறுதியான எல்லைகளை வழங்கினார்: ஆதி. 15:18-21
*வித்து/சந்ததி*:
ஆதி. 22:18
வசனத்தின்படி: "நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்
என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்"
இதன் அர்த்தத்தை நமக்கு
தகுந்தாற்போல் யூகிக்கும் அளவிற்கு நம்மை வேதம் விட்டுவிடவில்லை. மாறாக நேரடியாக பவுல் எழுதுகிறார், “ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள்பண்ணப்பட்டன;
சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே” என்றார். (கலாத்தியர் 3:16).
பவுலின் இந்த
துல்லியமான இலக்கண முக்கியத்துவமானது, “சகல
தேசமும் ஆபிரகாமிற்குள் ஆசீர்வதிக்கப்படும்” என்ற அந்த ஆசீர்வாதமானது - ஒரு தேசமாக
இஸ்ரவேலை சார்ந்ததோ, அல்லது யூதர்கள் என்ற ஒரு மக்களை
சார்ந்ததோ அல்லாமல் ஆபிரகாமின் சந்ததியினரில் வந்தவரான இயேசு கிறிஸ்துவின் மீது
தங்கியிருந்தது என்பதை தெளிவுபடுத்துகிறது.
மேலும், கிறிஸ்துவில் உள்ள இந்த “ஆசீர்வாதம்” என்பது
சரீரபிரகாரமானது அல்ல ஆனால் ஆத்தும ஆசீர்வாதம்.
பேதுரு பேசினார், “நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்;
உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்
என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய
முன்னோர்களோடேபண்ணின உடன்படிக்கைக்கும் புத்திரராயிருக்கிறீர்கள். அவர்
உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை
ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்" அப். 3:25-26.
இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு
அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக்
கட்டளையிடுவேன் என்று திருவுளம் பற்றினார். என்பதை பவுல்
தெரிவித்தார் – அப். 13:34
*வாக்குறுதிகளின்
நிறைவேற்றம்*:
ஆதியாகமம் 12ல் ஆபிராமுக்கு
தேவன் அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றிய விதத்தை நாம் புரிந்துகொள்வது மிக
முக்கியம்.
பல தவறான கோட்பாடுகள், குறிப்பாக ஆயிரவருட அரசாட்சி என்ற தவறான போதனைகள்,
இந்த வாக்குறுதிகளின் தவறான விளக்கத்தில் வேர்களைக் கொண்டுள்ளன,
மற்றும் அவற்றின் சரியான நிறைவேற்றத்தை அங்கீகரிக்கத் தவறியது
என்பதை நாம் உணரவேண்டும்.
தாவீதின்
சிம்மாசனத்தில் ஆயிரம் ஆண்டு ஆட்சியைத் தொடங்குவதற்கு இயேசு இந்த பூமிக்குத் திரும்புவார்
என்று ஆயிரவருட அரசாட்சியை போதிப்பவர்கள் சொல்கிறார்கள்.
என்னுடைய இராஜ்ஜியமானது
இந்த பூமிக்குரியது அல்ல என்று மிகத் தெளிவாக கிறிஸ்து கூறினதை நினைவில்
கொள்ளுங்கள் – யோ 18:36
வசனத்தை கவனமாக பரிசீலிக்கும்
போது - ஆபிரகாமுக்கு தேவன் அளித்த வாக்குறுதிகளின் ஒவ்வொரு கூறுகளையும் *நிறைவேற்றியிருப்பதைக்*
கவனிக்க முடியும்.
இந்த வாக்குறுதிகளின் உண்மை
அம்சங்களானது பாவங்களிலிருந்து மீட்டு எடுக்கப்ட வேண்டிய எல்லா மனிதர்களுக்கும் இரட்சிப்பின்
மிக முக்கியமான நித்திய நோக்கத்திற்கான வழிமுறையாகும்.
ஆபிரகாமின் பிள்ளைகளை
ஒரு சிறந்த தேசமாக மாற்றுவதற்கான வாக்குறுதியை தேவன் நிறைவேற்றினார் என்பதை மேலே
படித்தோம்.
இந்த சிறப்பு
உடன்படிக்கை உறவானது சீனாயில் கொடுக்கப்பட்ட சட்டத்தால் இயக்கப்பட்டது.
மோசே கூறினார்… “ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; ஜனங்களின் கண்களுக்கு முன்பாகவும் இதுவே
உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்; அவர்கள் இந்தக்
கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும்
விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள். நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம்
தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச்
சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப்
பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது? இந்நாளில் நான்
உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள
கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதியும் எது? என்றார் (உபா. 4:6-8)
தேவன் அவர்களுக்கு வாக்குறுதியளித்த
*எல்லா நிலங்களையும் (தேசத்தையும்) ஏற்கனவே கொடுத்து விட்டார்* என்பதையும்
இக்கால ஆயிரவருடஆட்சி போதனையாளர்களின் போதனையானது வேதாகம வசனத்தின்படி இனியும்
நிறைவேற வேண்டியுள்ளது என்ற அவர்கள் கூற்று தவறு என்பதை தெள்ளத்தெளிவாக நாம்
காணமுடியும். வசனத்தை காண்க:
*யோசுவா 21: 43-45* :
யோசு.
21:43 இந்தப்பிரகாரமாகக் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு
ஆணையிட்ட தேசத்தையெல்லாம் கொடுத்தார்; அவர்கள்
அவைகளைச் சுதந்தரித்துக்கொண்டு, அவைகளிலே குடியிருந்தார்கள்.
யோசு.
21:44 கர்த்தர் அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்டபடியெல்லாம் அவர்களைச் சுற்றிலும்
யுத்தமில்லாமல் இளைப்பாறப்பண்ணினார்; அவர்களுடைய
எல்லாச் சத்துருக்களிலும் ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கவில்லை; அவர்கள் சத்துருக்களையெல்லாம் கர்த்தர் அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.
யோசு. 21:45 கர்த்தர் இஸ்ரவேல்
குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.
ஆகையால், கர்த்தர் தம் பிதாக்களுக்குக் கொடுப்பதாக சத்தியம்
செய்த அனைத்து காரியத்திலும் ஒரு வார்த்தைக் கூட தோல்வியடையவில்லை. *அனைத்தும்
நிறைவேறின*.
நிலத்தை
தக்கவைத்துக்கொள்வது அவர்கள் தேவ வார்த்தைக்கு கீழ்படிதலை பொறுத்து இருந்தது –
யோசுவா 23:11-16
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக