#814 - *ஆவியின் கனிகள் எத்தனை?* 9 என்று கலாத்தியரில் உள்ளது...
வெளி. 22.1,2 வசனத்தை மையப்படுத்தி 12
ஆவியின் கனிகள் என்று குறிப்பிடுகின்றனர் எது சரி? ஜிவ விருட்சத்திற்கு பாயும் நீரை பரிசுத்த ஆவிக்கு ஒப்பிட்டு.. நம்மிலும் தேவ ஆவியானவர் உள்ளதால் ஆவியின் கனிகள் 12 ஆகும்
என்கிறார் எது சரி?
*பதில்*
கனிகள்
என்று வேதத்தில் குறிப்பிடுவதன் நோக்கம் – பலன்கள்.
அதாவது
ஆவியினால் பிறந்த ஒருவனுடைய வெளிப்படையான காரியங்களின் மூலம் மற்றவர் எப்படி பிரயோஜனப்படுகிறார்கள்
என்பது ஒரு மரத்தின் கனியை புசிப்பதற்கு ஒப்பாக பேசப்படுகிறது.
அது
போல – பரிசுத்த ஆவியினால் பிறந்தவர்கள் தங்களின் விசுவாச வாழ்க்கையின் மூலமாகவும்
தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் போதும் வெளிப்பாட்டை
மற்ற ஜனங்கள் பார்க்கும் கனியானது / பழம் / மற்றவர்களுக்கு பிரயோஜனமானது :
அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு,
நற்குணம், விசுவாசம், சாந்தம்,
இச்சையடக்கம் என்பவைகள்.
அதோடு
நின்று விடாமல் – “இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை” என்றும்
பவுல் சொல்வதையும் கவனிக்க வேண்டும். (கலா. 5:22-23)
அன்பும்
சந்தோஷமும் சமாதானமும் தன்னிடத்தில் இருக்கிறது என்று தன்னைத்தானே ஒருவர் ஏமாற்றிக்கொள்ளலாம்..
நீடியபொறுமை, சாந்தம் என்ற இந்த இரண்டும் – பெரிய சவால்கள் தான் இந்த அவசர காலத்தில் !!
*வெளி.
22:1-2ஐ குறித்து*:
வெளிப்படுத்தல்
புத்தகத்தில் உள்ளவற்றை – நாம் அப்படியே அர்த்தங்கொள்ளமுடியாது. அவை *குறியீடுகளால்
நிறைந்தவை*. அந்தக் *குறியீடுகளை நாம் வெளிப்படுத்தி புரிந்து கொள்ளல்
அவசியம்*.
பன்னிரண்டு
விதமான கனிகள் அல்ல.
ஒரே
மரத்தில் பன்னிரண்டு வகையான பழங்கள் உள்ளன என்ற எண்ணமும் அல்ல, ஏனென்றால் அது யோவான்
பயன்படுத்தும் மொழியில் அவ்வாறாக குறிக்கப்படவில்லை. “பன்னிரண்டு கனிகளை உற்பத்தி
செய்வது” - ποιοῦν καρποὺς poα poioun
karpous ddeka.
அதாவது
மரம் வருடத்தின் ஒவ்வொரு மாதமும் தன் கனியைத் தருகிறது.
இதனால்
பன்னிரண்டு அறுவடைகள் வருடத்தில் இருந்தன.
வழக்கமாக
ஒரு மரம் ஒரு பருவத்தில் காய்ப்பது போல அல்ல,
ஆனால் இது தொடர்ந்து பழங்களைத் தந்தது - இது ஒவ்வொரு மாதமும்
தாங்கியது.
அதாவது
மரம் ஒருபோதும் தரிசாக இல்லாமல் தன் கனிகளை எப்போதும் எல்லா மாதமும் / ஏராளமானதை தருகிறது
என்று பொருள்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக