Jebam seithu muditha piragu intha vasanathai neraiya per sollugiraargale.. Naamum sollalama.
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, என் முழு
உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே, கர்த்தரை
ஸ்தோத்திரி, அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. சங்கீதம் 103:1-2
*பதில்*
சங்கீதம்
மாறி மாறி வாசிப்பது ஜெபம் முடிந்ததும் இந்த 2வசனங்களை உச்சரிப்பது என்ற இந்த
பழக்கம் கிறிஸ்தவ மதத்தினர் மத்தியில் எப்போது துவங்கப்பட்டது என்ற குறிப்பை காணமுடியவில்லை.
ஆமேன்
என்று கூடியிருந்தவர் அனைவரும் சொன்னாலும் :
இந்த
2 வசனங்களையோ அல்லது ஆசீர்வாதம் என்று ஒருவர் தன் பங்கிற்கு ஒருவரியை உரக்க சொல்லாவிட்டால்
கண் விழிகளை திறக்கமாட்டாத வண்ணம் இந்த பழக்கம் அநேகரை கட்டிப்போட்டிருக்கிறது.
நகை
கடையில் காசு கொடுத்து வாங்கிய நகையை சரியாக நமக்கு அடைத்து கொடுத்தார்களா என்பதை
கடைசியில் சோதிப்பதை விட கடைக்காரர் இனாமாக கொடுக்கும் ஒரு கைப்பை அல்லது ஒரு இலவச
கடிகாரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அந்தளவிற்கு இந்த கடைசி வசன
உச்சரிப்புகள் அல்லது ஆசீர்வாத வார்த்தைகள் இவ்வளவு நேரம் ஏறெடுத்த ஜெபத்தை மிஞ்சி
நிற்கிறது.
அர்ப்பணிப்பான
இந்த வசன பகுதிகளை உணர்வோடும் அர்த்தத்தோடும் ஜெபத்தின் கடைசியில் மாத்திரம் அல்ல
வாழ்க்கையில் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு அற்புதமான சொற்றொடர்
இந்த வசன பகுதிகள்.
பாரம்பரியமான
பழக்கத்திற்கு அடிமையாகாமல் உணர்வுள்ளவர்களாக நடந்து கொள்வது அவசியமானது. கொலோ.
3:24
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக