திங்கள், 17 பிப்ரவரி, 2020

#760 - அவர்களுக்கு நன்மையுண்டாக நான் என் கண்களை அவர்கள்மேல் வைத்து, அவர்களை இந்த தேசத்துக்குத் திரும்பிவரப்பண்ணி, அவர்களைக்கட்டுவேன், அவர்களை இடிக்கமாட்டேன், அவர்களை நாட்டுவேன், அவர்களைப் பிடுங்கமாட்டேன் - விளக்கவும்

#760 - *அவர்களுக்கு நன்மையுண்டாக நான் என் கண்களை அவர்கள்மேல் வைத்து, அவர்களை இந்த தேசத்துக்குத் திரும்பிவரப்பண்ணி, அவர்களைக்கட்டுவேன், அவர்களை இடிக்கமாட்டேன், அவர்களை நாட்டுவேன், அவர்களைப் பிடுங்கமாட்டேன். எரே. 24:6. நான் கர்த்தர் என்று அறியும், இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்; … எரே 24:7 - “இந்த வசனத்தை விளக்கவும்”

*பதில்*
எரேமியாவிற்கு ஒரு தரிசனத்தை கர்த்தர் கொடுத்து அதை விளக்குகிறார். எரே. 24:1

மிக நேர்த்தியான முதல் அறுப்புக்கொத்ததான அத்திப்பழங்களும்  கெட்ட அத்திப்பழங்களையும் கொண்டுள்ள ஒரு கூடையை தரிசனத்தில் பார்க்கிறார் எரேமியா தீர்க்கதரிசி. எரே. 24:2

கல்தேயர் தேசத்துக்குச் சிறைப்பட்டுப் போகவிட்ட யூதரை நல்ல அத்திப்பழங்களுக்கு ஒப்பிடுகிறார்.  எரே. 24:5

புசிக்கத்தகாத கெட்ட அத்திப்பழங்களைத் சிதேக்கியா என்கிற யூதாவின் ராஜாவையும் அவனுடைய பிரபுக்களையும் ஒப்பிடுகிறார். எரே. 24:8

நீங்கள் குறிப்பிட்ட 6ம் வசனம் கல்தேயர் தேசத்துக்கு சிறைப்பட்டுப்போன யூதர்களுக்கு தேவன் இறங்கும் செயலை குறிக்கிறது.

நீதிமானின் மேல் கரிசனையுள்ள நம் தேவனின் கிருபையை எவ்வளவு அழகாக இந்த வசனம் நமக்கு காண்பிக்கிறது !!

அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து அவர் சட்டப்படி நாம் நடக்கும் போது எந்த தொல்லைகள் அடிமைத்தனத்திலிருந்தும் நம்மை மீட்டெடுக்க அவர் வல்லவராக இருக்கிறார் என்பதை இந்த வசனத்தின் மூலம் நாம் அறியமுடிகிறது.

கர்த்தர் என்றால் – ஆண்டவர், இராஜா, ஆளுகிறவர், சர்வ அதிகாரமும் உள்ளவர், சர்வ வல்லமையும் உள்ளவர் என்று பொருள்.

தேவ ஜனம் தான் தொழுது கொள்ளும் தேவன் எவ்வளவு மகத்துவமானவர் என்று அறியாமல் மனிதர்களுக்கும் விக்கிரகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து தேவ மகிமையை இழந்து அடிமைத்தனத்திற்குள் கடந்து சென்றார்கள். எசே. 11:19-20

நாம் இப்போது பெற்றிருக்கும் வகையில் அந்த காலத்தில் முழுமையான வேதாகமம் அவர்கள் கையில் இல்லை. தீர்க்கதரிசிகள் / பெற்றோர்கள் / உறவினர்கள் / பொியவர்கள் மூலமாகவோ  தேவாலயத்திலும் ஜெப ஆலயங்களிலும் வைக்கப்பட்டிருக்கும் தோல் சுருளையோ படித்து தான் அவர்கள் தேவனுடைய வல்லமையை அறிந்து கொண்டிருந்த நாட்கள் அது.

இப்போது சகல வசதியும் இருந்தும் கரங்களிலேயே வேத வசனம் கோர்வையாக / அதிகாரங்களாக / வசனங்களாக சொந்த தாய்மொழியிலேயே ஆதி முதல் வெளிபடுத்தல் வரை இருந்தும் பகுத்துப்படிக்க மனமில்லாமல் கர்த்தருடைய கட்டளைக்கு மீறி நடந்து கொண்டிருக்கும் மோசமான காலகட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உண்மையான தேவனையும் கர்த்தருடைய கட்டளையையும் கடைபிடிக்க பிரியமில்லாமல் தங்களுக்கு பிரியமான மேடை பேச்சாளர்களையும் தங்களுக்கு இஷ்டமான கிறிஸ்தவ வியாபாரிகளையும் தேவ பாஷை என்று சொல்லிக்கொண்டு உளருபவர்களையும் சேர்ந்து வலம் வருபவர்களின் இருதயம் அவர்களையே சார்ந்து பற்றிக்கொண்டிருக்கும்படி தேவனே அவர்களை  விட்டிருக்கிறார் என்பதை அறிந்து சொந்த ஆத்துமாவை நரகத்திற்கு தப்பி ஓடவேண்டும் !!

மேடைக்கு மேடை ஊமையனும் குருடரும் முடவரும் சுகம் பெறுவதாக சொல்கிறார்கள் ...   அற்புதங்கள் நடக்கிறது என்கிறார்கள் !!

ஒரு செய்தி தாளிலும் இன்னும் வெளிவராதது ஆச்சரியமே !!

அற்புதங்கள் செய்யும் தேவன் நம் தேவன்
ஆனால் இவர்கள் செய்வது உண்மையா பொய்யா என்பதை அறிவது அவரவர் வெளிச்சம்..

அனைவரும் கர்த்ததை அண்டியிருக்க வேண்டும் என்று அவர் சகல நன்மையையும் நமக்கு செய்கிறார். ஆனால் கர்த்தரை அறிவதும் அறியாமல் விடுவதும் கீழ்படிவதும் உதாசீனப்படுத்துவதும் அவரவர் விருப்பம் !!

ஆனால் வேதம் இப்படியாக எச்சரிக்கிறது :

அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி *சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்*, கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் *அங்கிகரியாமற்போனபடியால்* அப்படி நடக்கும்.  ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் *பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்*.  2தெச. 2:9-12

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக