இரட்சிப்பு என்றால் மீட்பு என்பது தமிழ் அர்த்தம்.
விழுந்த இடத்திலிருந்து தூக்கப்படுவது மீட்பு.
அகப்பட்ட இடத்திலிருந்து விடுதலையாவது மீட்பு.
மனிதர்களின் இரட்சிப்பு என்பது அவர்களின் விழுந்த நிலையிலிருந்து வெளியேறுவது மீட்பு.
எதில் விழுந்தார்கள் / எதில் இடறினார்கள் என்பது தான் பிரச்சனை.
தேவனுடைய வார்த்தையை மீறுவது தவறு. 1யோ. 3:4
கேள்வி ஏறக்குறைய அபத்தமானது என்று தோன்றலாம்.
ஆனால் இதை குறித்து நன்கு அறிந்து புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது.
தேவனுக்கு விரோதமாக செயல்படும்போது அவரது பிரசன்னத்தை இழந்து விடுகிறோம் – ஏசா. 59:2
பிரச்சனையிலிருந்து வெளியே வர தேவன் ஒரு தீர்வை வைத்திருக்கிறார்.
ஆம், தேவன் தீர்வுக்கானும்படியாக மனிதனுக்கு வழிகாட்டுதலையும், வழிமுறைகளையும் வழங்கியுள்ளார்.
மீறுதல் என்பது தவறு அல்லது பாவம்.
பாவம் கொண்ட எந்த மனுஷனும் பரிசுத்தமுள்ள தேவனுக்கு முன்னதாக நிற்க முடியாமல், பாவமானது பிளவை ஏற்படுத்திவிடுகிறது.
அந்த பிளவிற்கான பிரச்சனையின் தீர்வு “இயேசுவின் இரத்தமே”.
அந்த தீர்வை அணுகுவதற்கான வழியை அறிய தேவன் தம்முடைய வார்த்தையின் மூலம் நமக்கு வழிகாட்டுகிறார்.
பாவம் வந்த போது தேவன் விலகிவிட்டார் என்றும் அவர் பின்னர் குணமாக்குவார் என்றும் பார்க்கிறோம். எரே.33:5-7
தேவன் குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அமைதியையும் உண்மையையும் வெளிப்படுத்துகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும். ஏசா. 57: 17-19
கிறிஸ்துவின் மூலமே நாம் குணமடைகிறோம் - 1 பேதுரு 2:24
*பாவம் என்பது அசுத்தம். அது சுத்திகரிக்கப்பட வேண்டும், கழுவப்பட வேண்டும் அல்லது பரிசுத்தப்படுத்தப்பட வேண்டும். அதை எவ்வாறு செய்வது*?
இயேசுவின் இரத்தம் எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துகிறது - I யோவான் 1: 7
அவர் தம்முடைய இரத்தத்தினால் நம்மைக் கழுவினார் - வெளி. 1: 5-6
தேவனுடைய வார்த்தை சுத்தப்படுத்துகிறது - யோவான் 15:3
அது பரிசுத்தப்படுத்துகிறது - யோவான் 17:17
வார்த்தைக்கு கீழ்படிவதன் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது - 1 பேதுரு 1:22-23
வார்த்தையை நிமித்தம் தண்ணீரில் கழுவ வேண்டும் - எபேசியர் 5: 25-27
இது வெளிப்புற சுத்திகரிப்பு அல்ல, உள்ளார்ந்த சுத்திகரிப்பு - 1 பேதுரு 3:21
*பாவத்தில் இருந்து இரட்சிக்கப்பட / மீட்கப்படவேண்டியது அவசியம்*.
இயேசுவின் இரத்தத்தின் மூலம் நமக்கு மீட்பு இருக்கிறது - எபேசியர் 1: 7; கொலோ. 1: 13-14
நற்கிரியைகளுக்காக வைராக்கியமாக இருக்கும்படி இயேசு நம்மை தன் இரத்தத்தால் வாங்கினார் - தீத்து 2: 13-14
கீழ்ப்படிதலால் நாம் பாவத்திலிருந்து விடுபடுகிறோம் - ரோமர் 6: 16-18
சத்தியம் நம்மை விடுவிக்கிறது - யோவான் 8:32
இது சுதந்திரத்தின் விதி / சுயாதீனப்பிரமாணம் என்று அழைக்கப்படுகிறது - யாக்கோபு 1:25
*பாவம் ஒரு கடன், அது செலுத்தப்பட வேண்டும் அல்லது மன்னிக்கப்பட வேண்டும்*
பாவத்தை மறைப்பதால் அது இன்னும் பெரிதுபடுகிறது - சங்கீதம் 32: 1-5
நாம் ஒப்புக்கொண்டால், நம் கடனை மன்னிப்பார் – 1 யோவான் 1: 9
இயேசுவின் இரத்தம் பாவத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது - மத்தேயு 26:28
பாவம் நம்மை தேவனிடமிருந்து பிரிக்கிறது. ஏசாயா 59: 1-2, யாக். 4: 4
தேவனுடைய பிரிவிலிருந்து கிறிஸ்துவின் மூலம் ஒப்புரவாக்கப்பட்டோம் - கொலோசெயர் 1: 19-23
கிறிஸ்துவாலேயே அந்த ஒப்புரவு ஏற்பட்டது - ரோமர் 5: 10-11
பாவம் செய்பவர் (ஆத்துமாவில்) மரித்தவர்கள் - எசேக்கியேல் 18:20
பாவம் மரணத்தை சம்பாதிக்கிறது - ரோமர் 6:23
நாம் இந்த உலகத்தில் பிறந்தோம், ஆனால் பாவம் நம்மைக் கொல்கிறது; மீண்டும் வாழ நாம் மீண்டும் பிறக்க வேண்டும் - யோவான் 3: 3-5
பாவத்தினால் மரித்தோம், ஆனால் தேவ குமாரன் மூலமாக உயிர்ப்பிக்கப்படுகிறோம் - எபேசியர் 2: 1-7, 1 பேதுரு 1: 22-23
ஞானஸ்நானத்தில் கிறிஸ்துவின் மரணத்தோடு ஐக்கியப்படுவதன் மூலம் மறுபடியும் உயிரோடு பிறக்கிறோம் - ரோமர் 6: 3-11
பாவிகளைக் காப்பாற்றவே (இரட்சிக்கவே) இயேசு வந்தார் – 1 தீமோத்தேயு 1:15
வார்த்தையின் மூலம் பாவத்தின் அசுத்தத்தை விட்டு விடுவதன் மூலம், நம்முடைய ஆத்துமா இரட்சிக்கப்படுகிறது - யாக்கோபு 1: 21-22
இரட்சிக்கப்பட நாம் விசுவாசிக்க வேண்டும் - அப்போஸ்தலர் 16: 30-31
ஆனால் விசுவாசத்தால் மட்டுமே இரட்சிக்கப்பட முடியாது - யாக்கோபு 2: 14,17-20, 24
விசுவாசித்து அறிக்கையிட்டு ஞானஸ்நானப்படுவதால் இரட்சிக்கப்படுகிறோம் - ரோமர் 10: 9-10
கிறிஸ்துவின் கட்டளைப்படி ஞானஸ்நானத்தின் மூலம் இரட்சிக்கப்படுகிறோம் – 1 பேதுரு 3:21
*எதிலிருந்து காப்பாற்றப்பட்டோம்*?
பொல்லாத உலகத்திலிருந்து காப்பாற்றப்பட்டோம் - அப். 2:40
*இரட்சிக்கப்பட்டதற்கான பலன்கள்*
1-நித்திய ஜீவன் : அழிந்து போவது இரட்சிக்கப்படுவதற்கு எதிரானது - 1கொரி. 1:18, யோ. 3: 14-16
2-நீதிப்படுத்தப்பட்டது / நியாயப்படுத்தப்பட்டது :
கிறிஸ்துவின் இரத்தத்தால் தேவ கோபத்திலிருந்து நாம் இரட்சிக்கப்பட்டோம். ரோமர் 5: 9-10, ரோமர் 3: 24-26
3- ஓப்புரவாக்கப்பட்டோம் :
இயேசுவின் இரத்தம் நம்மைக் இரட்சித்ததோடுமல்லாமல் தேவனோடு நம்மை ஒப்புரவாக்குகிறது - ரோமர் 5: 9-11, கொலோசெயர் 1: 19-23
4-பாவ மன்னிப்பு :
நம்மைக் இரட்சிப்பதற்காக இயேசுவின் இரத்தம் சிந்தப்பட்டது. அந்த க்ஷனம் வரைக்குமான பாவத்தை தேவன் மன்னிக்கிறார். ரோமர் 5: 9, மத்தேயு 26:28, ரோமர் 3:25, எபேசியர் 1:7, கொலோசெயர் 1:14; 1 பேதுரு 1: 18-19
5-பரிசுத்தப்படுத்தப்பட்டது :
இயேசு தம் இரத்தத்தினாலே பரிசுத்தப்படுத்தினார் - எபிரெயர் 13:12, வெளி. 1:5
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் வெண்மையாக்கப்பட்டது - வெளி 7:14
அவருடைய இரத்தம் எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துகிறது – 1யோ. 1: 6-7
*பாவத்தில் இருந்துக்கொண்டே நாம் சத்தியத்தை நாட முடியாது* கலா. 2:17
பாவம் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் ஒரு தடையை உருவாக்குகிறது என்பதால் *பாவத்தில் இருக்கும்போது அல்லது பாவம் செய்துக்கொண்டே எந்த ஒருவரும் தேவனோடு நிலைத்திருக்க முடியாது* - 1யோ. 3: 4-6
*இரட்சிப்பு நிரந்தரமா*?
நம் இரட்சிப்பு என்பது தேவனோடு நாம் இருக்கும் வரை மட்டுமே - எபி. 3:6, 14
நாம் அவ்வாறு இல்லாவிட்டால் பின்நிலைமை மோசமாகும் - 2பேதுரு 2:20
நித்திய ஜீவனை நாம் பற்றிக்கொண்டிருக்க வேண்டும் – 1தீமோ. 6: 9-12
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக