#686 - *கர்த்தர்
வீட்டை கட்டாராகில் கட்டுகிறவன் பிரயாசம் விருதா
விளக்கம்
தாருங்கள்*
*பதில்*
சங்.
127:1ம் வசனத்தில் நீங்கள் கேட்ட வாக்கியத்தை காண முடிகிறது.
படிப்பு
வராததாலேயோ அல்லது பணம் செலவிட வழியில்லாமலோ பைபிள் காலேஜ்ல சேர்ந்து பாஸ்டர் பட்டம்
இலகுவாக பெற்றுக்கொண்டு “ஆரோனைப் போல அழைக்கப்படாவிட்டால் யாரும் இந்த கணமான ஊழியத்திற்கு
வருவதில்லை” என்று தங்கள் ஊழியரைக் குறித்தோ அல்லது தங்களை குறித்தோ மார்தட்டிக் கொள்பவர்கள் – அந்த வசனம் ஊழியர்களை
அல்ல இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறதென்று எப்படி
அறியாமல் இருக்கிறார்களோ (எபி. 5:5) – இந்த சங். 127:1ம் வசனமும் ஒரு பொிய திருப்புமுனை
வசனம் என்று நாம் அறியவேண்டும்.
வீடு
என்று இந்த வசனம் குறிப்பிட்டாலும் – வீட்டை மாத்திரம் அல்லாமல் சபையை அல்லது
குடும்பத்தை இந்த பெய்த் என்ற மூல வார்த்தை குறிப்பிடுகிறது.
வீட்டை,
குடும்பத்தை, சபையை, கட்டிடத்தை, மாளிகையை என்று பல வகைப்படுத்துகிறது இந்த பெய்த்
என்ற வார்த்தை.
1. கர்த்தருடைய
ஆலயத்தை கட்டியெழுப்புதல்
2. எந்தவொரு
சாதாரண வீட்டையும், அல்லது வசிக்கும் இடத்தையும் கட்டுவது.
3. ஏராளமான
சந்ததிகளைப் பெறுவது - இந்த அர்த்தத்தில் இது எகிப்திய மருத்துவச்சிகள் பற்றி பேசப்பட
வேண்டும்; அவர்கள் கர்த்தருக்குப் பயந்ததால், அவர் அவர்களுக்கு வீடுகளைக் கட்டினார்.
யாத்.
1: 21 இல் உள்ள குறிப்பைக்
காண்க.
மேலும் தேவனுடைய அநுக்கிரகம் இல்லாமல் எந்த குடும்பமும் கட்டப்படுவதில்லை. எவ்வளவு
முயற்சி செய்தாலும் பிள்ளையை பெற்றெடுப்பது தேவனுடைய கிருபை அதே பாடல் வசனம் சொல்கிறது
– சங். 127:3
அவருடைய ஆசீர்வாதம்
நமக்கு இல்லையென்றால், ஒரு வாசஸ்தலத்தை வசதியாக அமைக்க முடியாது.
அவருடைய ஆசீர்வாதம்
நம் பிள்ளைகளுக்கு இல்லையென்றால், வீடு (குடும்பம்) கட்டமைக்கப்படலாம், ஆனால் அது தேவனுடைய வீடு என்பதற்குப் பதிலாக, தேவனில்லாத சத்தியமற்ற
வீடாக இருக்கும்.
மற்றபடி
சொந்த பிரயாசம் அணைத்தும் விருதா என்கிறார். விருதா என்றால் வேஸ்ட் அல்லது வீண்
என்று பொருள்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக