#683 - *மாம்சம் புசிக்கிறதும்,
மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது,
தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும்
செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும். - விளக்கவும்*
*பதில்*
ரோ. 14:21-23 மாம்சம் புசிக்கிறதும்,
மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது,
தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும்
செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.
வ22-
உனக்கு விசுவாசமிருந்தால் அது தேவனுக்கு முன்பாக
உன்மட்டும் இருக்கட்டும். நல்லதென்று நிச்சயித்த காரியத்தில் தன்னைக்
குற்றவாளியாக்காதவன் பாக்கியவான்.
வ23- ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால்,
ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.
எப்படியாயினும்
மற்றவரை ஆதாயப்படுத்த வேண்டும் என்று எதையும் செய்ய அனுமதியில்லை.
எதை
செய்தாலும் – கர்த்தருடைய கட்டளைக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பதை மறுபடியும்
இந்த வசனம் நமக்கு உறுதிபடுத்துகிறது.
வேறொரு
தமிழாக்கம் இந்த வசனத்தை மிக அழகாக மொழி பெயர்த்திருக்கிறது.
நீ
மாமிசம் உண்பதும், மது குடிப்பதும்,
உனது சகோதரனையோ சகோதரியையோ பாவத்தில் விழச் செய்யுமானால் அவற்றைச் செய்யாமல் இருப்பது
நல்லது. உன் சகோதரனையோ சகோதரியையோ பாவத்தில் விழச் செய்யும் எதனையும் செய்யாமல் இருப்பாயாக.
மது
பானம் பண்ணுவது இரகசியமாக இருக்கலாம் என்று 22ம் வசனம் சொல்வதாக நினைத்து
விடகூடாது. பலவிதமான மதுபானத்தை குறித்து வேதத்தில் பார்க்க முடியும். போதையூட்டப்பட்டவை
போதையற்றவை என்று இரு வகை படுகிறது. எந்த சூழ்நிலையிலும் போதையூட்டப்பட்ட மதுபானம்
தடைசெய்யப்பட்டது தான் – எபே 5:18
புசித்தலோ
குடித்தலோ எதுவும் நம் சகோதரனின் விசுவாச வாழ்வை குலைத்து விடாமல் வாழ்வதே எந்த
கிறிஸ்தவனுக்கும் அவசியம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக