#666 - *பாவத்தின் சம்பளம் மரணம். ஆனா ஏன் இறந்த பின் இளைப்பாறுகிறார் என்று சொல்கிறார்கள்? எல்லாம்
மரணம் தானே?*
*பதில்*
மரணம்
என்பது இரண்டு வகைப்படுகிறது.
1-
சரீர மரணம்
2-
ஆன்மீக மரணம்.
பழத்தை
சாப்பிடும் நாளில் சாகவே சாவாய் என்று தேவன் ஆதாமிடம் சொன்னார் (ஆதி. 2:17).
சாப்பிடாதே
என்று தேவன் சொன்ன கட்டளையை மீறினது பாவம்.
பாவத்தின்
சம்பளம் மரணம் (ரோ. 6:23)
அந்த
பழத்தை சாப்பிட்ட போது அவர்கள் (சரீரத்தில்) மரிக்கவில்லை ஆனால் தேவனுடைய சந்நிதியை
(ஏதேன் தோட்டத்தை) விட்டு துரத்திவிடப்பட்டார்கள். ஆதி. 3:24
சரீர
மரணத்தின் போது, ஆவியும்
ஆத்துமாவும் சரீரமும் பிரிக்கப்படுகிறது. சரீரம் மண்ணில் புதைக்கப்படுகிறது / எரிக்கப்படுகிறது
/ சிதைந்துவிடுகிறது. ஆதி. 3:19, சங்.
104:29, சங்.
146:4, பிர.
3:20, பிர.
12:7
ஆவி
தேவனிடத்திற்கு போய்விடும்
- சங். 104:29, சங்.
146:4, பிர.
3:20, பிர.
12:7
ஆத்துமா
கிறிஸ்துவின் வருகை வரைக்கும் ஒரு தற்காலிகமான இடத்தில் தங்கியிருக்கும். நன்மை செய்தவர்கள்
இளைப்பறுவார்கள். எபி. 4:1-3, 4:9-10
தீமை
செய்தவர்கள் / இரட்சிக்கப்படாதவர்கள் / தேவ வார்த்தைக்கு கீழ்படியாதவர்கள் /
வேதத்தின் படி நடக்காதவர்கள் பாதாளத்திற்கு செல்வார்கள். எபி. 3:18, எபி. 4:5, யூதா 1:6
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் – அவரவர் தன் தன் பங்கை அடைந்து நித்திய வாழ்வான மோட்சத்திற்கும்
அல்லது நித்திய அவியாத வேதனை நிறைந்த அக்கினியிலும் அனுப்பப்படுவார்கள். வெளி. 20:13, 2தெச. 1:7
இறந்தவர்
தேவனுக்கு உகந்தவராகவும் பரதீசில் இருப்பார் என்ற நம்பிக்கையிலும் – அடக்க வேளையில் இளைப்பாறுகிறார்
என்று சொல்வது வழக்கம்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக