செவ்வாய், 10 டிசம்பர், 2019

#664 - சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. - 1 கொரிந்தியர் 1:18

#664 - *சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.  - 1 கொரிந்தியர் 1:18 - விளக்கவும்*

*பதில்*
நம் நாட்டில் கொலை செய்யப்பட வேண்டிய குற்றவாளியை தூக்கு கயிற்றில் தொங்க விட்டு மரணத்தை ஏற்படுத்துவது போல ரோம அரசாங்கத்தில் கொலை செய்யப்பட வேண்டிய ஒரு குற்றவாளியை சிலுவையில் அறைவார்கள் (மாற்கு 15:14)

நம் நாட்டில் இவ்வாறு தண்டனை நிறைவேற்றப்பட்ட ஒரு குற்றவாளியை குறித்து யாராவது மேடையேறி தூக்கிலிடப்பட்டவர் ஒரு புனிதர், நல்லவர், தவறாக நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை வழங்கி விட்டது என்று யாராவது சொல்ல முடியுமா?

இயேசு எந்த குற்றமுமே செய்யவில்லை என்றும் யூதர்கள் இவரை பொறாமையினாலே தான் குற்றப்படுத்துகிறார்கள் என்று அறிந்திருந்தும் தன் பதவியை காப்பாற்றிக்கொள்ளவும் ஜனங்களை பிரியப்படுத்தவும் அதிகாரியான பிலாத்து இயேசுவை சிலுவையில் ஏற்றுவதற்கு யூதர்களிடம் ஒப்புக்கொடுத்துவிட்டார் (மத் 27:17, 19, லூக்கா 23:22, யோ 19:12)

கிறிஸ்து, தான் சொன்னபடி 3ம் நாளில் உயிர்த்தெழுந்தார். 50ம் நாளில் சபை ஸ்தாபிக்கப்படுகிறது. இவர்கள் குற்றவாளி என்று யாரை நினைத்து சிலுவையில் மரண தண்டனை கொடுப்பதாக நினைத்து ஏற்றினார்களோ அந்த இயேசுவை தேவன் இந்த ஜனங்களின் இரட்சிப்பிற்கான பாவ நிவாரண பலியாக ஏற்படுத்தியிருக்கிறார் என்ற செய்தியை அப்போஸ்தலர்கள் சொல்ல ஆரம்பித்தனர் அப் 2:36, அப் 4:11-12, அப் 5:30-31, 1யோ2:2, எபே 5:2, ரோ 8:3)

அதை கேட்டவர்களுக்கு கேலியாக இருந்தது. ஆனால் அதை விசுவாசித்தவர்களுக்கோ நித்திய ஜீவன் கிடைக்கப்பெற்றார்கள்.

இயேசுகிறிஸ்துவினாலன்றி நமக்கு இந்த பூலோகத்தில் வேறு இரட்சகர் இல்லை (அப் 4:12)

அவர் மூலமாக மாத்திரமே நாம் பரலோகம் செல்ல முடியும் (யோ 14:6, யோ 14:2)

ஆகவே சிலுவையில் ஏற்றப்பட்ட கிறிஸ்து நம் பாவங்களுக்காக மரித்தார் என்றும் நம் பாவங்களுக்காக அவர் தன் முழு இரத்தத்தையும் சிந்தினார் என்றும் விசுவாசித்து அவர் தான் இரட்சகர் என்பதை உணர்ந்து கொடுக்கப்பட்ட கட்டளையாகிய ஞானஸ்நானத்தை எடுத்துக்கொண்டு முடிவு பரியந்தம் அவர் கட்டளையில் நிலைத்து நிற்பவர்களுக்கு அது தேவ பெலனாயிருக்கிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக