#660 - *அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக்
குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள
சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; விளக்கவும்*
*பதில்*
தன்
கணவரின் இன்னொரு மனைவியான அன்னாளின் சக்காளத்தியான பென்னினாள் பார்வைக்கு அன்னாள் மிக
அற்பமாக எண்ணப்பட்டாள் –
1சாமு. 1:2, 6
சக்காளத்தி
தன்னை அற்பமாக எண்ணினதுமல்லாமல் துக்கப்படுத்துவாள், விசனப்படுத்துவாள், மனமடிவாக்குவாள் –
1சாமு. 1:6, 7
தனக்கு
பிள்ளையில்லாததினால் எப்போதும் அழுகையும் பட்டினியாகவும் சிறுமைபடுத்தப்பட்டும், மறக்கப்பட்டவளாய், சஞ்சலத்தோடும் விசாரத்திலும்
கிலேசத்திலும் இருந்தாள் அன்னாள் –
1சாமு. 1:8, 16.
மற்றவர்கள்
தன்னை பேலியாளின் மகளாக நினைக்கிறார்களோ என்ற அச்சம் ஏற்படும் அளவிற்கு மனக்கிலேசம்
இருந்தது –
1சாமு. 1:16
இப்பேற்பட்ட
ஒரு கவலையில் ஆழ்ந்திருந்த ஒரு மலடியின் வயிற்றில் தன் விண்ணப்பத்திற்கு
செவிசாய்த்து தேவன் ஒரு ஆண் பிள்ளையை கொடுத்தபோது – *கட்டுக்கடங்கா மகிழ்ச்சி கரை
புரண்டு ஓடிய வேளையில் தேவனை துதித்து ஜெபித்த ஜெபம்* இது (1சாமு. 2:1-10) – வார்த்தைகளை கவனிக்கவும்
– எவ்வளவு
அற்புதமான அநுபவ ஜெபம் என்று:
என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது;
என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய
இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.
கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை;
எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை.
இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து
புறப்படவேண்டாம்; கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ?
பலவான்களின் வில் முறிந்தது; தள்ளாடினவர்களோ பலத்தினால் இடைகட்டப்பட்டார்கள்.
திருப்தியாயிருந்தவர்கள் அப்பத்துக்காக கூலிவேலை செய்கிறார்கள்; பசியாயிருந்தவர்களோ இனிப்பசியாயிரார்கள்;
மலடியாயிருந்தவள் ஏழு பெற்றாள்; அநேகம் பிள்ளைகளைப்
பெற்றவளோ பலட்சயப்பட்டாள்.
கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து
ஏறவும்பண்ணுகிறவர்.
கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்;
அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்.
*அவர்
சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து,
எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப்
பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும்
பண்ணுகிறார்*; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்;
அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.
அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மௌனமாவார்கள்;
பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை.
கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள்
நொறுக்கப்படுவார்கள்; வானத்திலிருந்து
அவர்கள்மேல் முழங்குவார்; கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை
நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து,
தாம் அபிஷேகம்பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள்.
சிறியவன் என்றும்
புழுதியில் இருந்தவர் என்றும் அன்னாள் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் தான் பிள்ளை
பெறுவதற்கு முன்னதாக பட்ட வேதனைகளை குறிப்பிடுகிறார் - சக்காளத்தி தன்னை அற்பமாக எண்ணினது, துக்கப்படுத்தினது, விசனப்படுத்தினது, மனமடிவாக்கினது, எப்போதும் அழுதது பட்டினியாக
கிடந்தது, சிறுமைபடுத்தப்பட்டது, மற்றவர்களால் உதாசீனப்படுத்தப்பட்டது, சஞ்சலப்பட்டது, விசாரத்திலும் கிலேசத்திலும்
இருந்தது, தன்னை
பேலியாளின் மகளாக மற்றவர்கள் நினைக்கிறார்களோ என்ற அச்சம் ஏற்படும் அளவிற்கு மனக்கிலேசம்
இருந்தது போன்ற சிறுமையிலும் புழுதியிலும் கிடந்த நிலைமையை மாற்றின காரியத்தை
நினைவு கூர்ந்த ஜெபம் இது.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக