#661 - *இயேசு பிறந்த நாளோ, மாதமோ வேதாகமத்தில் கொடுக்கப்படாவிட்டாலும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கொண்டாடுகிறோம். கிறிஸ்துமஸ் தாத்தா, பவனி, மற்றும் கிறிஸ்துமஸ் குடில் போன்ற பொருட்கள் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா இல்லையா அதற்கு விளக்கம் கொடுங்க ஐயா*
*பதில்*
டிசம்பர் மாதம் வந்ததும் இந்த வார்த்தை அநேகர் மனதில் ஓட ஆரம்பிக்கும்.
இந்த மாதத்தில் வானிலை குளிர்ச்சியடைகிறது, பனி பொழியத் தொடங்குகிறது, சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் அவற்றின் சந்தைப்படுத்தல் ஆகியவற்றால் தொடர்ந்து தாக்கப்படுகிறோம்.
ஒருபுறம் கிறிஸ்துமஸில் கிறிஸ்துவை முன்னிலைபடுத்துங்கள் என்ற வலியுறுத்தலும் மறுபுறம் தவறானது என்ற வலியுறுத்தல்களும் மக்கள் எதிர்கொள்கின்றனர்.
கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்துமஸ் தொடர்பான வேதவசனங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதைக் கருத்தில் கொள்வது பொருத்தமானது.
நாம் வேதவசனங்களைத் திறக்கும்போது, மத்தேயு 1-2 மற்றும் லூக்கா 1-2 ஆகியவற்றில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய விளக்கத்தை பழைய தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனங்களின்படி காண்கிறோம்.
யோசேப்பு மற்றும் மரியாளுடன் மேய்ப்பர்களும் முன்னனையும் இருக்கிறது.
சாஸ்திரிகளும் (மத். 2:1) இருக்கிறார்கள்.
ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, அவர்களின் எண்ணிக்கை எத்தனை என்று குறிப்பிடப்படவில்லை.
மேலும் மிக ஆர்வத்துடன் நாம் கவனித்தோம் என்றால், எந்த ஆண்டு எந்த தேதி அல்லது எந்த நேரம் என்று கூட குறிப்பிடப்படவில்லை.
நிச்சயமான காரியம் என்னவென்றால் - இயேசு பிறந்தார் என்ற உண்மையை வேதவசனங்கள் தெரிவிக்கின்றன. அவருடைய பிறப்பு தீர்க்கதரிசனத்தை எவ்வாறு நிறைவேற்றியது என்பதை நிரூபிக்கிறது, ஆனால் நிகழ்வு எப்போது நடந்தது என்பது பற்றி முற்றிலும் வேதம் அமைதியாக இருக்கிறது.
இயேசு எப்போது பிறந்தார் என்பது யாருக்கும் துல்லியமாகத் தெரியாது. யூதேயாவின் பெத்லகேமில் கிமு 6-4 க்கு இடையில் பிறந்தது உண்மை; சம்பவத்தின் விவரங்களை அடிப்படையாகக் கொண்ட சிறந்த மதிப்பீடுகள் அவரது பிறப்பு வசந்த காலத்தில் அல்லது இலையுதிர்காலத்தில் இருப்பதை சுட்டிக்காட்டும்.
*டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது எப்படி?*
சத்துர்னாலியா என்ற பண்டிகையை ரோமனியர்கள் டிசம்பர் 17-25 க்கு இடையில் எந்தவிதமான / கட்டுபாடற்ற சட்ட வரையறையுமின்றி அறிமுகப்படுத்தினர்.
இந்த காலகட்டத்தில், ரோமானிய நீதிமன்றங்கள் மூடப்பட்டன, வார இறுதி கொண்டாட்டத்தின் போது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக அல்லது மக்களை காயப்படுத்தியதற்காக யாரும் தண்டிக்கப்படக்கூடாது என்று ரோமானிய சட்டம் கட்டளையிட்டது.
பண்டைய கிரேக்க எழுத்தாளரும் கவிஞரும் வரலாற்றாசிரியருமான லூசியன் (சதுர்னாலியா என்ற தலைப்பில்) திருவிழா தனது காலத்தில் கடைபிடிக்கப்படுவதை விவரிக்கிறார்.
பரவலான போதை;
நிர்வாணமாகப் பாடும்போது வீடு வீடாகச் செல்வது;
கற்பழிப்பு மற்றும் பிற பாலியல் உரிமம்;
மற்றும் மனித வடிவ பிஸ்கட்டுகளை உட்கொள்வது (கிறிஸ்துமஸ் காலங்களில் இன்னமும் பெரும்பாலான ஜெர்மன் பேக்கரிகளில் தயாரிக்கப்படுகிறது) போன்றவை கடைபிடிக்கப்பட்டது.
4 ஆம் நூற்றாண்டில், கத்தோலிக்கம் இந்த சதுர்னாலியா என்ற திருவிழாவை அங்கீகரித்து தங்கள் மத தலைவர்கள் மற்றவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதில் வெற்றிபெற்றனர்.
ஆனால், சதுர்னாலியாவிற்கும் கிறிஸ்தவத்திற்கும் சம்பிந்தம் இல்லையே என்ற கேள்வி எழுந்த போது - டிசம்பர் 25 ஆம் தேதி , சதுர்னாலியா பண்டிகையின் இறுதி நாளான டிசம்பர் 25ம் தேதியை இயேசுவின் பிறந்த நாள் என்று கத்தோலிக்க தலைவர்கள் அறிவித்து இதற்கு தீர்வுகண்டனர்.
*கிறிஸ்துமஸ் மரத்தின் தோற்றம்*
ஆரம்பகால கத்தோலிக்கர்கள் கிறிஸ்து பிறந்த தினமாக சதுர்னாலியா பண்டிகையை இணைத்ததன் பலனாக பெறும் திரளான மற்ற மதத்தினரை கத்தோலிக்கராக மாற்றமுடிந்ததால் ஆஷீரா என்ற பிரிவினரின் மரங்களின் வழிபாட்டு பண்டிகையை இதோடு இணைத்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர்.
அந்த ஆஷீரா பிரிவினர் நீண்ட காலமாக காட்டில் உள்ள மரங்களை வணங்கும் பழக்கம் கொண்டவர்கள். அவற்றை தங்கள் வீடுகளுக்குள் கொண்டு வந்து அலங்கரித்தனர்.
*சாண்டா கிளாஸின் தோற்றம்*
கி.பி 280 இல் துருக்கியில் பிறந்த நிக்கோலஸ் என்ற மனிதரை கொண்டு துவங்கியது. அவரை புனிதராக சமுதாயம் அங்கீகரித்திருந்தது. ஆக இந்த புனித நிக்கோலஸ் தனது பரம்பரைச் செல்வங்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டு, ஏழை மற்றும் நோயுற்றவர்களுக்கு உதவுவதற்காக கிராமப்புறங்களில் பயணம் செய்தார். குழந்தைகள் மற்றும் மாலுமிகளின் பாதுகாவலர் என்று அறியப்பட்டார்.
செயின்ட் நிக்கோலஸ் சில காலங்களிலேயே அமெரிக்க பிரபலமான கலாச்சாரத்தில் நியூயார்க்கில் பேசப்பட்டார். டச்சு குடும்பங்கள் "செயின்ட் நிகோலாஸ்" அல்லது "சின்டர் கிளாஸ்" இறந்ததை ஆண்டு விழாவாக நினைவு கூற கூடினர்.
1822 ஆம் ஆண்டில், எபிஸ்கோபல் மந்திரி கிளெமென்ட் கிளார்க் மூர் ஒரு கிறிஸ்துமஸ் கவிதை ஒன்றை எழுதினார். இது "செயின்ட் நிக்கோலஸிலிருந்து ஒரு வருகையின் கணக்கு" என்ற பெயரில் எழுதப்பட்டது. இது இன்று மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது: "கிறிஸ்மஸுக்கு முந்தைய இரவு" என்று இந்த கவிதை சாண்டா கிளாஸை சித்தரித்தது பொம்மைகளை வழங்க கலைமான் வண்டி சவாரியில் வீட்டிலிருந்து வீட்டிற்கு பறக்கும் ஜாலி மனிதனாக சித்தரித்தது.
1881 ஆம் ஆண்டில் அரசியல் கார்ட்டூனிஸ்ட் தாமஸ் நாஸ்ட் மூரின் கவிதையை வரைந்தபோது, இன்று நமக்குத் தெரிந்த பழைய செயிண்ட் நிக்கின் உருவத்தை உருவாக்க சாண்டா கிளாஸின் வெள்ளை நிற தாடி மற்றும் பொம்மை சாக்குகளுடன் ஒரு ஜாலியான மனிதராக உருவகப்படுத்தப்பட்டது.
ஆக, டிசம்பர் 25க்கும் கிறிஸ்துவிற்கும் சம்பந்தமேயில்லை என்பது வேத நிகழ்வுகளின் அடிப்படையிலும் கிறிஸ்துமஸ் என்ற பண்டிகையின் மூலஆதாரமும் தெளிவாக விளக்குகிறது. லூக்கா 2:8, 2:3
கிறிஸ்துவின் பிறந்த நாளை கொண்டாடியதாக வேதத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
படிக்க கொஞ்சம் கஷ்டமானாலும் – இது தான் உண்மை.
*கிறிஸ்துவை நினைக்கிறோம் என்ற நினைவில் கிறிஸ்துவிற்கு விரோதமாக செயல்படக்கூடாது*.
* அட்டை படத்தில் வரும் மூன்று சாஸ்திரிகள் – வேதாகமத்தில் இல்லை !!
* அட்டை படத்தில் இருப்பது போல் மூன்று சாஸ்திரிகளோடு + பிறந்த குழந்தை + மாட்டு தொழுவம் - வேதாகமத்தில் இல்லை !!
இந்த வேதாகமத்திற்கு விரோதமான பண்டிகையிலிருந்து விலகியிருப்பது ஆசீர்வாதம்.
வேறெந்த நாளிலும் வெளியே வராத அநேகர் - அந்த நாளிலாகிலும் சபைக்கு போகவேண்டும் என்று கூட்டத்திற்கு வருகிறவர்களை உதாசீனபடுத்தாமல் – அன்று சத்தியத்தை சரியாக எடுத்து சொல்லி அவர்களை வழிநடத்த பிரயோஜன படுத்திக்கொள்ள முற்படவேண்டும்....
கிறிஸ்துமஸ் என்ற பெயரில் - இயேசுவை விட்டுவிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் மரம், 3 சாஸ்திரிகள் பின்னாடி உலகமே போய்க்கொண்டு இருக்கிறது. இவைகளை வேதாகமத்தில் எங்கேயும் காண முடியவில்லை.
*வேதாகமத்தில் இல்லாததை கடை பிடித்தல் தண்டனையை வருவிக்கும்*.
பாவிகளை இரட்சிக்க வந்த இயேசுவின் பிறந்த நாள் என்று சொல்லி, அன்று;
சாராய கடைகளும், பிராந்தி வியாபாரமும்;
விபசார விடுதிகளும் களைக்கட்டுகிறது - வேதனையிலும் வேதனை.
பாவத்தை விட்டு – மீட்பரை பற்றிகொள்ளவேண்டும்.
தேவனுக்கு கீழ்படிவதை காட்டிலும் மனுஷனுக்கு கீழ்படிவது உத்தமமாய் இருக்குமோ? அப் 5:29
டிசம்பர் 25க்கும் கிறிஸ்துவிற்கும் சம்பந்தமேயில்லை என்பது வேத நிகழ்வுகளின் அடிப்படையிலும் கிறிஸ்துமஸ் என்ற பண்டிகையின் மூலஆதாரமும் தெளிவாக விளக்குகிறது. லூக்கா 2:8, 2:3
கிறிஸ்துவின் பிறந்த நாளை கொண்டாடியதாக வேதத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
கிறிஸ்துவின் இறந்த நாளை நினைவு கூறும்படி கிறிஸ்து நமக்கு கட்டளையிட்டிருக்கிறார்.
மேலும்,
வேதத்திற்கு மாறான கொள்கையையுடைய கத்தோலிக்கர்கள், துவக்கத்தில் :
மேரி க்ரைஸ்ட் மாஸ் (Mary Christ Mass) என்று துவங்கினார்கள்.
மேரி குறிக்கப்படுவதால் கத்தோலிக்கரல்லாதவர்கள் கொண்டாடுவதில்லை என்று "மேரியை” மெர்ரி ஆக்கினார்கள் (~Mary~Merry Christ Mas).
Maryயின் பெயர் (மரியாள்) எடுக்கப்பட்டுவிட்டதால், கத்தோலிக்கர் அல்லாதர மற்ற கிறிஸ்தவ மதத்தினர் கொண்டாட ஆரம்பித்தனர்.
கிறிஸ்தவ மதத்தினர் அல்லாத மற்ற மதத்தினரையும் இந்த வியாபாரத்தில் உள்ளே இழுக்க வேண்டும் என்று வியாபாரிகள் விரும்பியதால், (Christ) க்ரைஸ்ட்ஐயும் எடுத்துப்போட்டு அந்த இடத்தில் எக்ஸ் போட்டார்கள். (Mary Christ X-Mas).
ஆகவே, அவர்களது இந்த பணவேட்கையான பண்டிகையில்
கடைசியில் மேரியும் இல்லை;
கிறிஸ்துவும் இல்லை;
– வெறும் களியாட்டும் குத்தாட்டமுமாகி – X-Mas ஆகிவிட்டது.....
எக்ஸ் என்றால் – ஒன்றுமில்லாத கூட்டம் !!!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக