வெள்ளி, 6 டிசம்பர், 2019

#654 - யோவான் 6:53-58 இந்த கடினமான உபதேசம் ஆனாலும் எனக்கு விளங்கப்படுத்துங்கள்

#654 - *யோவான் 6:53-58  இந்த கடினமான உபதேசம் ஆனாலும் எனக்கு விளங்கப்படுத்துங்கள்*.

யோவான் 6:53-58 அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.  என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.  ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.

இந்த கடினமான உபதேசம் ஆனாலும் எனக்கு விளங்கப் படுத்துங்கள்

*பதில்*
அவருடைய மாம்சத்தை சாப்பிட வேண்டும் என்று இயேசு சொன்னவுடன் யூதர்கள் அதிர்ந்து தான் போனார்கள் யோ. 6:52

இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைகள் அவருடைய வழக்கம் போல் அவருடைய அறிக்கையை இன்னும் வலுவான மொழியில் மீண்டும் வலியுறுத்துகிறார்.

சமாரிய பெண்ணுக்கு ஜீவதண்ணீரை தருவேன் என்ற போது அவள் உம்மிடத்தில் அள்ளிக்கொடுக்க வாலி இல்லையே என்று கேட்டதும் (யோ. 4:11) மீண்டும் பிறக்க வேண்டும் என்று நிக்கோதேமுவிடம் இயேசு சொன்ன போது இவ்வளவு வளர்ந்த பின் எப்படி மறுபடியும் பிறப்பது என்று அவர் கேட்டதும் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நாம் எப்போதும் மிக ஆழமாக யோசித்து அறிந்து கொள்ள வேண்டிய அவசியமுள்ளது என்பதை வலியுறுத்துகிறது. (யோ. 3:3-5)

அவருடைய மாம்சத்தை சாப்பிட வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அவருடைய இரத்தத்தை குடிக்க வேண்டும் என்றும் இங்கு சொல்கிறார் !!

சிலுவையின் பாடம் கற்காதவர்களுக்கு இது ஒரு திடுக்கிடும் கூற்று.

இந்த வசனங்களை முன்னிட்டு கத்தோலிக்கர்கள் அப்பமும் திராட்சரசமும் கர்த்தருடைய பந்தியின் ஜெபத்தில் அப்பம் கிறிஸ்துவின் மாம்சமாகவும் திராட்சை ரசம் இரத்தமாகவும் மாற்றப்படுகின்றன என்று நம்புகிறார்கள்.

வாதத்திற்கு அர்த்தங்கொள்வதானால் வழக்கமாக ஒரு மிருகம் இறந்த பிறகுதான் அதன் மாம்சத்தை சாப்பிட முடியும்.

ஆனால் இயேசு கிறிஸ்து சொல்வதோ ஜீவ அப்பம் (ஜீவ மாம்சம்). இறந்த சதை அல்ல. அப்படியானால், அது உண்மையில் சாப்பிடப்படுவதில்லை, ஆனால் வேறுவிதமாக கையகப்படுத்தப்படுகிறது.

இதனால் தேவனுடைய குமாரனின் ஜீவனுள்ள மாம்சம் அதில் பங்கெடுப்பவர்களின் வாழ்வாதாரமாகவும், வாழ்க்கையாகவும் மாறுகிறது.

சிலுவை மரணத்தில் அவர் நம் பாவங்களைக் கழுவ தனது இரத்தத்தை சிந்தினார் (1பேதுரு 2:24); அவருடைய உயிர்த்தெழுதல் மற்றும் பரத்திற்கு ஏறின போது அவரது மகிமைப்படுத்தப்பட்ட மாம்சம் எழுப்பப்பட்டு பரலோகத்திற்கு ஏறியது. (அப் 1:9, 1கொரி. 15:51, 46, 50)

அப்படியானால், ஒருவர் தனது மாம்சத்தையும் இரத்தத்தையும் எவ்வாறு சாப்பிடுவார்?

சிலுவையில் அறையப்பட்ட தேவ குமாரனை நம்புகிறவன் (ஏற்றுக்கொள்கிறவன்) அவருடைய பாடுகளுக்கு பங்கெடுக்கிறான்(பிலி. 3:10), மனந்திரும்புதலால் அவருடன் சிலுவையில் அறையப்படுகிறான், அவருடைய மரணத்தில் புதைக்கப்படுகிறான், புதிய ஜீவனோடு உயிர்த்தெழுதலின் சாயலில் எழுப்பப்படுகிறான் (ரோ. 6: 1-8).

63 வது வசனத்தில் உயிர்ப்பிக்கக்கூடிய மாமிசம் அல்ல, ஆனால் ஆவியும் கிறிஸ்துவின் வார்த்தைகளும் ஆவியும் ஜீவனும் உடையவை என்று காட்டப்பட்டுள்ளது.

எபிரெயர் 4: 12, தேவனுடைய வார்த்தை ஜீவனுள்ளது என்றும் வல்லமையுள்ளது என்றும் கூறப்படுகிறது.

கிறிஸ்துவின் வார்த்தைகளை கையகப்படுத்துவதன் மூலமும், சிலுவையில் அறையப்பட்ட மற்றும் உயிர்த்தெழுந்த இரட்சகரின் மீதான நம்பிக்கையினாலும், அவருடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி விருப்பத்தையும் வாழ்க்கையையும் இணைத்துக்கொள்வதன் மூலம், நாம் ஜீவனுள்ளவர்களாய் இருக்கிறோம்.

கிறிஸ்து இராப்போஜனத்தில், அப்பத்தையும் திராட்சரசத்தையும் சீடர்களுக்குக் கொடுத்தபோது, ​​அவர்கள் அவருடைய மாம்சத்தை சாப்பிட்டு, அவருடைய இரத்தத்தை பானம் பண்ணினார்கள் என்று ஒப்பிட்டு சொல்லப்படுவது நமக்கு நேரடியான விளக்கத்தை தருகிறது மத் 6:26, 28

இந்த பந்தியின் போது அவர் அங்கு அவர் இருந்ததை கவனிக்கவும். ஒரு உயிருள்ள மனிதர் - அவரது உடல் இன்னும் உயிருடன் இருக்கிறது, அவருடைய இரத்தம் அவரது நரம்புகளில் இன்னும் பாய்கிறது கொண்டிருக்கிறதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவின் சரீரமானது – நம் பாவங்களுக்காக சிலுவையில் பலியாக்கப்பட்டது. 1கொரி. 11:24, 1கொரி. 5:7-8

கிறிஸ்துவின் இரத்தமானது – பழைய உடன்படிக்கையை முடிவுக்கு கொண்டுவந்து – புதிய உடன்படிக்கையை அமலுக்கு கொண்டு வந்தது. 1கொரி. 11:25, ரோ. 10:4, லூக்கா 22:20, எபி. 9:15-20

அப்பத்தை ஒருவர் – கர்த்தருடைய பந்தியில் எடுக்கும் போது – தான் பாவத்திற்கு மரித்திருக்கிறேன் என்றும் தான் புதிய உடன்படிக்கையில் இருக்கிறேன் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் – மாறாக அப்பத்திலும் இரசத்திலும் பங்கெடுத்து விட்டு இன்னமும் நியாயபிரமாணம் (பழைய உடன்படிக்கை) அவசியம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் – அது அபாத்திரமாக (உணர்வில்லாமல்/அறிவில்லாமல்/தகுதியில்லாமல்) எடுப்பதாகும் – 1கொரி. 11:27

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக