#652
*கேள்வி*
ஆதாம்
படைக்கப்பட்டு 6ஆம் நாள் தான் ஏவாள் படைக்கப்பட்டாள்.
ஏனென்றால்
ஆதி 1:26-31 ஆதி 2:7-22 நான் ஏற்றுக் கொண்டது, படைப்புகளின் முடிவு ஏவாள்.
அதிலும்
முற்றிலும் முழுமையாகவும் படைக்கப்பட்ட ஏவாள் எப்படியும் ஆதாமின் குணாதிசயங்களை கொண்டுள்ளவள்
தானே. இப்படி இருக்க ……! வேதாகமத்தில் உள்ள அனைத்து வசனங்களையும் ஆராய்ந்து பார்க்காமல், அப்படியே
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் போதிக்கப்பட்டுள்ளேன்.
வேதவசனங்களை
ஆராய்ந்து பார்த்தால் அது பாவமா? அதை அப்படியே ஏற்றுக் கொள்வதா நல்லது?
தேவன்
கூறும் சகலமும் மனிதர்களின் நன்மைக்கே என்று, மௌனமாய் இருப்பதா கிறிஸ்தவர்களுக்கு நல்லது?
தயவுசெய்து
விளக்கம் தாருங்கள்.
*பதில்*
ஆதாம்
தேவ வார்த்தையை மீறாமல் இருக்க உதவும்படி ஏற்ற துணையாக ஏவாள் (பெண்)
படைக்கப்பட்டாள் – ஆதி 2:17-18
ஆணுக்கு
அடிமையாக பெண் படைக்கப்படவில்லை ஆனால் பெண்ணுக்கு தலையாக ஆண் வைக்கப்பட்டிருக்கிறான்
– 1கொரி 11:3
திருமணம்
ஆகாத பெண்ணுக்கு தகப்பனும் (எண் 30)
திருமண்ம்
ஆனவருக்கு புருஷனும் தலையாக இருக்கிறார்கள் – எபே 5:24
வேதத்தில்
உள்ளவைகளை ஆராய்ந்து பார்க்கும் போது நற்குணசாலியாக வளர முடியும் – அப் 17:11
வேதாகமத்தில்
முற்பிதாக்களின் காலம், மோசேயின் காலம் &
இயேசு கிறிஸ்துவின் காலம் என்று 3 காலங்கள் உள்ளது. நாம்
கிறிஸ்துவின் காலத்தில் இருக்கிறோம். வேதாகமத்தில் உள்ள சட்டதிட்டங்களை படிக்கும்
போது எந்த காலத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டது என்று பகுத்துப்படிக்காமல்
இருந்தால் தேவனுக்கு முன்னதாக உத்தமமாக நிற்க முடியாது – 2தீமோ 2:15
*Eddy Joel*, PhD
Preacher –
The Churches of Christ
Teacher – World
Bible School
+968
93215440 / joelsilsbee@gmail.com
*
கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில்
இணைய:
அணைத்து
கேள்வி பதிலையும் காண joelsilsbee
blogspot என்று Google செய்யவும்.
**
வீடியோ செய்திகளுக்கு YouTube
Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக