#650 - *மத்.
6:12 எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
இந்த
வார்த்தையை திருச்சபையில் இப்படி சொல்லுவது ஏன்?
எங்களுக்கு
விரோதமாய் குற்றம் செய்தவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் குற்றங்களை எங்களுக்கு
மன்னியும் என்று கூறுவது சரியான முறையாகுமா?
இதில்
வரும் கடன் என்பது குற்றம் என்பதையா குறிக்கிறது
*பதில்*
யோவான்
தன் சீஷருக்கு ஜெபிக்க கற்று கொடுத்தது போல தங்களுக்கும் ஜெபிக்க கற்றுக்கொடுக்க
வேண்டும் என்று இயேசுவின் சீஷர்கள் வந்து கேட்டனர்.
அவர்
ஜெபிப்பதை கேட்ட சீஷர்களுக்கு தாங்கள் ஜெபிக்கும் முறையில் குறை இருப்பதை உணர்ந்து
இவ்வாறு கேட்டிருக்க வாய்ப்பு உள்ளது – லூக். 11:1
ஒஃபிலேடஸ்
என்ற கிரேக்க வார்த்தைக்கு கடன் என்று தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
ஒஃபிலேடஸ்
என்றால் – மீறினவர்கள் / வாக்கு மீறினவர்கள் / தவறு செய்தவர்கள் / குறிப்பாக தேவ
ஒழுக்கத்தில் நடக்கமால் மீறி நடந்தவர்கள் என்று பொருள்.
தமிழ்
வசனத்தில் (மத். 6:12)ல் சொல்லப்படும் கடன் என்பது பணம் திருப்பிதராதவர்களை
குறிக்கும் கடன் அல்ல.
தேவனிடத்தில்
பணம் எதையுமே நாம் கடனாக வாங்கவில்லையே இந்த வார்த்தையை அப்படியே புரிந்து கொள்ள
!!
… ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும்
தவறாதிருக்கிறான் – சங். 15:4
இங்கு கடன் என்ற
வார்த்தை பாவத்தை / மீறுதலை குறிக்கிறது.
நம்மிடம் தவறாக
நடந்தவர்களை நாம் மன்னிக்க வேண்டும்.
தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும்,
உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்;
புனிதனுக்கு நீர் புனிதராகவும்,
மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர். – சங். 18:25-26
நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால்,
பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார்
என்றார். மாற்கு 11:26
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக