#648 - *முழு சுவிசேஷ சபை என்று சொல்லிக்கொள்கிறார்களே* - விளக்கவும்?*
*பதில்*
இயேசு
கிறிஸ்துவின் *மரணம் அடக்கம் உயிர்த்தெழுதல்* என்பது சுவிசேஷம் – 1கொரி. 15:1-4
இந்த
சுவிசேஷத்தை கேட்டு அதற்கு கீழ்படிபவர்கள் :
*மரணம்*
– பாவத்திற்கு மரித்து (ரோ. 6:11)
*அடக்கம்*
– தண்ணீரில் அடக்கம் பண்ணப்பட்டு (ஞானஸ்நானம் / Baptizo) – கொலோ. 2:12
*உயிர்த்தெழ* வேண்டும் – தண்ணீரிலிருந்து
வெளியே வர வேண்டும். ரோ. 6:3-4
சுவிசேஷத்திற்கு
கீழ்படிகிறோம் என்று சொல்பவர்கள் – கிறிஸ்துவின் கட்டளையில் மாத்திரம் நிலை நிற்க கடமைபட்டிருக்கிறார்கள்.
ஏனென்றால்
– *முறையாக* ஞானஸ்நானம் எடுத்தவர்கள் கிறிஸ்துவை தலையாக கொண்டுள்ளனர் – கொலோ.
1:18
ஞானஸ்நானம்
எடுத்தவர் தான் இரட்சிக்கப்பட்டவர்கள் (இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுப்பது வேதத்தில்
சொல்லப்படாத முறை) - அப். 2:38,
47
இரட்சிக்கப்பட்டவர்கள்
கிறிஸ்துவை தரித்துக்கொள்கின்றனர் – கலா. 3:27
அப்படிப்பட்டவர்களை
கிறிஸ்தவரல்லாத மற்ற ஜனங்கள் பார்க்கும் போது – சபை பிரிவை அல்ல - கிறிஸ்துவை
பார்க்க வேண்டும்.
முழுமை
என்று தாங்களே சொல்லிக்கொள்பவர்கள் – மனிதர்களின் பாரம்பரியம், தங்களுக்கு ஆதாயமான பழைய
ஏற்பாட்டில் மோசேயின் மூலம் இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டதும் கிறிஸ்துவின் சிலுவையில்
முடிவுக்கு வந்ததுமான உபதேசங்களை உதறி தள்ளி விட்டு கிறிஸ்துவின் சத்தியத்தில் மாத்திரம் இருக்கிறார்களா என்று தங்களை ஆராய்ந்தால்
– எது சரி என்று புரியும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக