திங்கள், 2 டிசம்பர், 2019

#639 - பிதாவும் குமாரனும் வெவ்வேரான கிரியை உடையவர்கள்... அது போல வெவ்வேறு மறுரூபமான சரீரம் உடையவர்களா.??

#639 - *பிதா  குமாரன் பரிசுத்தஆவி மூவரும் ஒன்றாக இருக்கிறார்கள். பிதாவும் குமாரனும் வெவ்வேரான கிரியை உடையவர்கள்... அது போல வெவ்வேறுறுரூபமாரீரம் உடையவர்களா? ஏன் என்றால் அவருடைய வலது பாரிசத்தில் இருக்கிற குமாரன் அவரை வெளிப்படுத்தினார். குமாரன் வலது பாரிசத்தில் இருக்கிறார் என்றால் வெவ்வேறான மகிமையின் சரீரம் உடையவர்களா?*

*பதில்*
மனிதன் மிருகம் பறவை என்று அனைத்தும் மண்ணினால் உண்டான சரீரத்தில் இருக்கிறோம்.  பரலோகத்தில் இந்த சரீரத்தோடு போக முடியாது.

ஆவிக்குரிய அழிவில்லாத மறுரூபமாக்கப்பட்ட சரீரமே கொடுக்கப்படும் என்று பவுலின் கடிதத்தின் மூலம் அறிகிறோம்- 1கொரி. 15:35-50.

மறுரூபமான பின்பு மோசேயையும் எலியாவையும் இயேசு இந்த உலகத்தில் இருந்த போது பார்த்தார் மாற்கு 9:2-4

மேலே எடுத்துக்கொள்ளப்பட்ட பொழுது ஏனோக்கு / எலியா / இயேசு கிறிஸ்துவின் இந்த உலக சரீரமானது மாற்றப்பட்டது என்று சொல்லப்படாவிட்டாலும் 1கொரி. 15:51-54ன் படி மாற்றப்பட்டிருக்கவேண்டும் என்பதை நம்புவது எளிதாகிறது.

பிதாவானவருக்கு ரூபமில்லை என்றும் தேவன் ஆவியாயிருக்கிறார் என்றும் வேதம் சொல்கிறது யோ. 4:24

கர்த்தர் ஆவியானவர் என்று வேதத்தில் பார்க்கிறோம் 2கொரி. 3:17

பரிசுத்த ஆவியானவர் என்ற பெயரே தெளிவாக வெளிப்படுத்துகிறது.

பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; - 1யோ. 5:7

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக