#635 - *மனிதனுடைய துவக்கம் வேதத்தில் காண்கிறோம். தேவனுடைய துவக்கம் எப்போது?*
*பதில்*
தேவனை
/
கடவுளை யாரும் உருவாக்க முடியாது.
ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு காரணம் இருக்கிறது என்று ஒரு விதி உள்ளது.
எனவே, காரணங்களின்
சங்கிலி ஒரு குறிப்பிட்ட விளைவுக்கு வழிவகுக்கிறது.
கடவுள்
நித்தியமானவர். கடவுளுக்கு ஆரம்பமோ முடிவோ இல்லை. நித்திய கடவுள் தான் ஆரம்ப
காரணம்.
அவர்
துவக்கமும் முடிவும் இல்லாதவர் – வெளி 1:8,
1:11, 22:13
ஆதிமுதற்கொண்டு
தலைமுறைகளை வரவழைக்கிறவர் அவர். முந்தினவராயிருக்கிற
கர்த்தராகிய அவர் தானே;
பிந்தினவர்களோடும் இருப்பவர் அவரே – ஏசா 41:4
அவருக்கு முன் ஏற்பட்ட தேவன்
இல்லை; அவருக்குப்பின் இருப்பதும் இல்லை
– ஏசா 43:10
முந்தினவரும் பிந்தினவரும்
அவரே – வெளி 2:8,
ஏசா 48:12
ஆதியும்
அந்தமும் அவரே (அவர் தான் துவக்கம்,
அவர் தான் முடிவு) வெளி 21:6
முந்தினவரும் பிந்தினவரும்
அவர் தான்; அவரைத்தவிர தேவன் வேறு இல்லை
- ஏசா 44:6
*
தேவனுக்கு துவக்கம் இருக்கும் என்றால் – யாரோ ஒருவர் அவரை உருவாக்கவேண்டும்.
அப்படி உருவாக்கப்பட வேண்டும் என்றால் அவர்
கடவுளாக எப்படி இருக்க முடியும்?
*
நம் தேவன் எல்லா அதிகாரமும் மகத்துவமும் வல்லமையும் உள்ளவர் – உபா 10:17
1நாளா 29:11 கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும்
உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்;
கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது;
தேவரீர், எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2024/08/08/volume2/
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக