#628 - *இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற்றபிறகு “நகை அணியலாமா” இதை பற்றி வேதம்
என்ன சொல்லுகின்றது சற்று தெளிவாக
சொன்னால் நலமாய் இருக்கும்*
*பதில்*
இரட்சிக்கப்பட்டு
ஞானஸ்நானம் என்பது *தவறு*. ஞானஸ்நானம் எடுத்த பின்னர்
தான் இரட்சிப்பு – மாற்கு 16:16, 1 பேதுரு 3:21, அப். 2:41 & 47
நகை
அணிவதை பற்றிய பதில் (#99):
நகை அணிவதும்
அணியாமல் இருப்பதும் அவரவர் விருப்பம்.
நகை
அணியவேண்டும் என்றோ அணியகூடாது என்றோ யாரும் எவரையும் கட்டாயபடுத்துவதற்கு
வேதாகமம் இடம் கொடுக்கவில்லை.
சிலர் 1தீமோ. 2:9-10, 1பேதுரு 3:3 வசனங்களின் அடிப்படையில் பெண்கள் நகை அணியகூடாது என்கிறார்கள். அந்த
வசனத்தின்படி அவர்கள் வலியுறுத்துவதாக இருந்தால் அந்த வசனத்தில் உள்ள முதலாவது கட்டளையை
அவர்கள் ஏன் கவனிப்பதில்லை?
– அந்த வசனத்தை படித்து பார்க்கவும் -
தலைமுடியை பின்னக்கூடாது என்கிறது வசனம் !!
ஆகவே அந்த அர்த்தத்தில் இந்த 2வசனங்களும் சொல்லப்படவில்லை.
தேவன் தன் பிள்ளைகளுக்கு நகை அணிந்து
அழகு பார்த்தார் என்று வேதத்தில் பார்க்கிறோம்.
எசே. 16:11-12 உன்னை ஆபரணங்களால் அலங்கரித்து, உன் கைகளிலே கடகங்களையும், உன் கழுத்திலே சரப்பணியையும் போட்டு, உன் நெற்றியில் நெற்றிப்பட்டத்தையும், உன் காதுகளில் காதணியையும், உன் தலையின்மேல் சிங்காரமான கிரீடத்தையும் தரித்தேன் என்று
இருக்கிறது.
பிரச்சனை என்னவென்றால்
அளவுக்கு அதிகமாக நகை அணிவதும் நகை மீது அளவு கடந்த ஆசை வைப்பதும் விக்கரகத்திற்கு
ஒப்பானவை – கொலோ. 3:5
கலாசாரத்தின்படி
தகுதியானதை அணிவது தவறு என்று வேதத்தில் எங்கும் இல்லை. தான் வசதியுள்ளவன் (ள்)
என்று காண்பிப்பதற்காக நகை அணிவது – பெருமையை குறிக்கும். பெருமையுள்ளவனுக்கு தேவன் எதிர்த்து
நிற்கிறாரே !! 1பேதுரு 5:5
திருமணத்தில்
தாலி கட்டிக்கொள்வது – தமிழ் கலாச்சாரம். தாலியோடு வெளியில் ஒரு பெண் நடக்கும்
போது – எதிரே வரும் எந்த ஆண்களுக்கும் இவள் திருமணம் ஆனவள் என்று பறைசாற்றும் படி
நம் கலாச்சாரத்தில் வந்தவை.
அந்த
அடையாளத்திற்கு கூட தாலி வேண்டாம் என்று சொல்பவர்கள் – ஆடம்பரமாக தலைபின்னலும், மணமேடைகளும், விலை
உயர்ந்த வெள்ளை புடவை திருமணத்திற்கென்று உடுத்துவதும் – வேஷமாயிற்றே !!
தேவன் நம்மை
ஆசீர்வதிக்கிறவர்.
வரியராக திரிவதை
அவர் விரும்புவாரோ?
அளவாக –
அமைதியாக – சாந்தமாக – அடக்கமாக – புன்முறுவலோடு வாழ்வது – தேவனுக்கு மகிமையல்லவா?
தேவையான
பதிலளித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக