வெள்ளி, 15 நவம்பர், 2019

#616 - யார் இந்த தேவர்கள்? அவர்கள் எப்படிபட்டவர்கள்? அவர்கள் வேலை என்ன? ஏன் ஆண்டவர் அவர்களுக்கெல்லாம் பொியவர் என்று சொல்கிறார்?

 #616  - *யார் இந்த தேவர்கள்?  அவர்கள் எப்படிபட்டவர்கள்?  அவர்கள் வேலை என்ன?  ஏன் ஆண்டவர் அவர்களுக்கெல்லாம் பொியவர் என்று சொல்கிறார்?*

*
கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன் சங். 135:5.

விளக்கவும்

*பதில்*
எபிரேய வாசகம் இந்த வார்த்தையை *ஏலோஹீம்* என்று சொல்லப்பட்டிருப்பதால் - நேரடியான தமிழில் தேவன் (பன்மையை) தேவர்கள் என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

அதாவது (தேவன்) ஏலோஹீம்  என்று நீங்கள் இந்த பூமியில் எதை நினைத்து கும்பிட்டாலும் அவை எதுவும் என் தேவனுக்கு ஒப்பீடு ஆகாது என்று சொல்லப்படுகிறது !!

இந்த வாக்கியத்தில் வரும் தேவர்கள் என்பது விக்கிரகத்தையல்ல அந்த வார்த்தை நம் ஏலோஹீமை குறிக்கிறது !!

விக்கிரகத்தை குறித்து அதே பாடல் 135:15-18 வசனங்களில் காணமுடியும்.

*ஏன் நம் கர்த்தர் பொியவர்*?
*ஏன் அவரை துதிக்க வேண்டும்* என்று 7 காரணங்களை தன் பாடலில் குறிப்பிடுகிறார் புலவர்.

ஆங்கிலத்தில் இதை சுலமாக அறிந்து கொள்ளமுடிகிறது.

*FOR* The Lord is Good (v3)

*FOR* The Lord has chosen Jacob to himself, and Israel for his peculiar treasure (v4)

*FOR* I know that the LORD is great, and that our Lord is above all gods. (v5)

He causeth the vapors to ascend from the ends of the earth; he maketh lightnings *FOR* the rain; he bringeth the wind out of his treasuries. (v7)

And gave their land *FOR* a heritage, a heritage to Israel his people. (v12)

Thy name, O LORD, endureth *FOR* ever; and thy memorial, O LORD, throughout all generations. (v13)

*FOR* the LORD will judge his people, and he will repent concerning his servants. (v14)

*தமிழில்*:

1-அவர் நல்லவர் (வ3)

2-அவர் யாக்கோபையும் இஸ்ரவேலையும் தமக்காகத் தெரிந்துகொண்டமையால்(வ4)

3-பூமியின் மனிதர்கள் நினைக்கும் சகலத்திற்கும் மேலானவர் இவரே (வ5)

4- அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார். (வ7)

5-அவர்கள் தேசத்தைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார். (வ12)

6-கர்த்தாவே, உம்முடைய நாமம் என்றைக்குமுள்ளது; கர்த்தாவே, உம்முடைய பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும். (வ13)

7- தம்முடைய ஜனத்தின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார் (வ14)

ஆகவே இந்த ஏலோஹீம் (தேவன் - பன்மை) துதிக்கப்படத்தக்கவர் அல்லேலூயா !!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக