வெள்ளி, 15 நவம்பர், 2019

#617 - மனைவியானவர் தன் கணவனுக்கு எவ்வாறு கீழ்படிய வேண்டும்? வேதவசனம் இதை குறித்து என்ன சொல்கிறது?

#617  - *மனைவியானவர் தன் கணவனுக்கு எவ்வாறு கீழ்படிய வேண்டும்?*
வேதவசனம் இதை குறித்து என்ன சொல்கிறது?

*பதில்*
இந்த காலத்தில் இப்படி ஒரு கேள்வியை கேட்கும்படிக்கு உங்கள் மனநிலமையை தேவன் கொடுத்தமைக்கு அவருக்கு என் துதிகளும் ஸ்தோத்திரங்களும்.

ஆண்களுக்கு சமமாக பெண்களும் வளர வேண்டும் என்று அரசாங்கம் தன் முயற்சியை கையில் எடுத்து 33 சதவீதமாவது ஆண்களுக்கு இணையாக எல்லா துறைகளிலும் பெண்கள் வளர வேண்டும் என்று முனைந்து வருகிறது.

*தேவனுடைய பார்வையில்* :
1-ஆண்களும் பெண்களும் சமம் -ஆதி. 2:21

2-இருவரும் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டவர்கள் ஆதி. 1:26

3-இரட்சிப்பின் திட்டத்தில் இருவரும் சமம்-கலா. 3:28

4-இருவரும் பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிக்கிறவர்கள்-1பேதுரு 3:7

ஆனால்
சபை நிர்வாகம் அல்லது குடும்ப நிர்வாகம் என்று வரும்போது *ஆண்/பெண் வித்தியாசத்தை தேவன் நியமித்திருக்கிறார்*.

1- இருபாலருக்கும் வித்தியாசமான உடைகள் உபா. 22:5

2- இருபாலரின் சிகையலங்காரத்தின் வித்தியாசம் 1கொரி. 11:14-15

3- ஆராதனை ஒழுங்கு முறையில் வித்தியாசம் 1கொரி. 11:4-5

4- ஆண்/பெண் குழந்தை பிறப்பின் சுத்திகரிப்பில் வித்தியாசம் லேவி. 12:2-8

5- தீர்மானிக்கப்பட்ட பொருத்தனைகளிலிருந்து விடுபடுதலில் வித்தியாசம் லேவி. 27:2-4

6- பொருத்தனை பண்ணிக்கொண்ட கைம்பெண்ணாக இருந்தாலும் / திருமணம் ஆனவராக அல்லது ஆகாதவராக இருந்தாலும் ஆண் சார்ந்த முடிவு எடுப்பது எண். 30:1-13

இப்படி அநேக வித்தியாசங்களை காண முடிகிறது.

*மனைவியானவள்*:
-தன் கணவன் தேவனுடைய வார்த்தையை மீறாமல் இருக்கும்பொருட்டு துணையாக இருக்க வேண்டும் ஆதி. 2:17-18

-ஆசை முழுவதும் தன் கணவன் மீதே இருக்க வேண்டும் ஆதி. 3:16

-எப்போதும் அவனுக்கு துணையாக இருக்க வேண்டும் ஆதி. 2:18

-தன் அம்மா அப்பா சகோதர சகோதரிகள் தன் வீட்டாரை விட, தன் கணவனுக்கே சகலமுமாக சகலவற்றாகவும் இருக்க வேண்டும் ஆதி. 2:23-24

-தன் கணவனின் எந்த துக்கத்தையும் போக்கக்கூடியவள் மணைவி -ஆதி. 24:67

-கணவனின் வேலை பழுவை கூட மறக்கவைக்க கூடிய திராணி மனைவிக்கு உண்டு -ஆதி. 29:30

-தேவனின் திட்டத்திற்கு எதிராக நில்லாமல் தன் கணவனிடம் வாழ்ந்து செழிக்கும் எப்படிப்பட்ட மனைவியையும் கணவன் நேசித்து விடுவான் -ஆதி. 29:31-33, 1:28, 1தீமோ. 5:14, 1தீமோ. 2:15

-அழகில் ஒரு நாளும் கர்வம் கொண்டுவிட கூடாது. தகுதியையே இழக்க நேரிடலாம் எஸ்தர் 1:10-22

-தன் கணவனின் மூடத்தனத்தை அறிந்தவள் தன் வீட்டை பாதுகாக்கிறாள் -1சாமு. 25:3

-சாமர்த்தியமான/அறிவுள்ள மனைவி வீட்டையே மாளிகையாக மாற்றக்கூடியவள் -நீதி. 31:13-27

-நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கவேண்டும். 1தீமோ. 3:11

-உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; உங்கள் போதனை அல்ல அவருக்கு சகலத்திலும் கீழ்படிதலே அவருடைய மூர்க்கத்தை மாற்றி கிறிஸ்துவிற்குள் கொண்டுவந்து விடும். 1பேதுரு 3:1-2

-குய்யோ முய்யோ என்று சண்டை எதற்கெடுத்தாலும் போடாமல் சாந்தமும் அமைதலுமாய் எப்போதும் தங்களை அலங்காரித்துக்கொள்ளுங்கள் 1பேதுரு 3:4

-கிறிஸ்தவள் என்று சொல்லிக்கொண்டு எப்போதும் வேதமும் ஜெபமுமாக வாழ விரும்புவது எப்படியோ அதற்கு கொஞ்சமும் குறையாமல் 100 சதவீதம் இணையாக உங்கள் சொந்தப் புருஷருக்குக்கீழ்ப்படியுங்கள். எபே. 5:22

தேவனுக்கு கீழ்படிதலும் கணவனுக்கு கீழ்படிதலும் ஒப்பிடப்பட்டிருப்பதை கவனியுங்கள். கணவனுக்கு கீழ்படியவில்லை என்றால் நீங்கள் ஜெபிப்பதும் வேதம் வாசிப்பதும் பிரயோஜனமற்றவையாகிவிடும் !!  எபே. 5:24

-கணவனுக்காகவே நீங்கள் சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள் -1கொரி. 11:9

-தன் கணவனிடத்தில் அன்பும் பண்பும் காண்பித்து பயபக்தியாக இருக்கவேண்டும் -எபே. 5:33

*பல வருடங்கள்* முன்பு, மற்றவர் இருக்கும் போது சமமாக தன் கணவன் அருகில் உட்காருவதை தவிர்த்து அவரது காலடியில் உட்கார்ந்திருக்கும் கலாச்சாரம் நம்முடையது.  தற்போது மாமனார் முன்பாகவே கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஹாயாக உட்காரும் அளவிற்கு சீர் கெட்டு போனது என்று நினைக்கும் போது வேதனையளிக்கிறது.

கணவன் தான் மனைவிக்கு தலை தலை சொல்லுக்கு கீழ்படிய வேண்டும் -எபே. 5:23

தலையே வேண்டாம் என்ற காரணமோ பலர் திருமணம் செய்ய மறுக்கிறார்கள் அது தேவனுடைய திட்டத்திற்கும் சித்தத்திற்கும் எதிரானது -1தீமோ. 2:15

வேதத்தையே காரணமாக்கி கணவனுக்கு (ஆண்களுக்கு) பிரசங்கம் செய்ய மேடையேறுவது வேதத்திற்கு விரோதமானது 1கொரி. 14:35

கிறிஸ்து நம் அனைவருக்கும் ஆண்டவர் என்பது உண்மையானால் மனைவிக்கு கணவன் ஆண்டவர் என்று அறிந்து கீழ்படியவேண்டும் -எபே. 5:22

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக