வியாழன், 14 நவம்பர், 2019

#615 - இந்நாட்களில் இன்னும் நிறைவேறாத தீர்க்கதரிசனங்கள் எவை?

#615 - *இந்நாட்களில் இன்னும் நிறைவேறாத தீர்க்கதரிசனங்கள் எவை?*

*பதில்*
கிறிஸ்துவின் வருகையும், நியாயதீர்ப்பும் தான் பாக்கி என்றே நான் எதிர்பார்க்கும் நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனம் என்றே சொல்லுவேன்.

அவர் வருகை எப்போது எந்த வேளையில் எந்த நாழிகையில் வரும் என்று யாருக்கும் தொியாது. ஆனால் வேதாகமத்தில் கிறிஸ்துவை குறித்து சொல்லப்பட்ட இந்த 2ஐ தவிர ஏறத்தாழ அனைத்து தீர்க்கதரிசனமும் நிறைவேறினதால் – நிச்சயமாக கிறிஸ்துவின் வருகை ஒரு நாளில் நடந்தே தீரும். கிட்டத்தட்ட 90 இடங்களில் வேத வசனம் கிறிஸ்துவின் வருகையை குறித்து காணமுடிகிறது.

அவருடைய வருகையில் தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினை செலுத்தப்படும்.  கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜூவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். – 2தெச. 1:7-8

அந்த வருகைக்குப்பின் – நியாயதீர்ப்பு இருக்கும்.
இரட்சிக்கப்பட்டவர்கள் பரலோகத்திற்கும், வசனத்திற்கு கீழ்படியாதவர்கள் நரகத்திலும் தள்ளப்படுவது நிச்சயம்.

மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் வெளி 1:7

நினையாத நாழிகையில் வருவதால் தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான். வெளி. 16:15

நீங்கள் வசனத்தை கேட்டு மனந்திரும்பி விசுவாசத்தை அறிக்கையிட்டு முழுகி ஞானஸ்நானம் எடுத்து வாரந்தோரும் கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூர்ந்து அப்பம் பிட்டு தேவனை ஆராதித்து கிறிஸ்துவின் போதனைபடி வாழ்கிறீர்களா?

இதில் ஏதாவது ஒன்றில் முன்னுக்கு பின் முரணாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். இயேசு கிறிஸ்து வரும் எந்த நேரமாக இருந்தாலும் நாம் சந்தோஷமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கலாம்.

 *எடி ஜோயல் சில்ஸ்பி*
 ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக