வியாழன், 14 நவம்பர், 2019

#614 *கேள்வி* தேவன் ஏன் பிசாசை அழிக்கவில்லை?

#614 *கேள்வி* தேவன் ஏன் பிசாசை அழிக்கவில்லை?

*பதில்*
சிரமங்களை சமாளிக்கும்போது மக்கள் வளர்கிறார்கள்.

பயிற்சியாளர்கள் விளையாட்டு வீரர்களை ஓடவும், எடையை தூக்கவும், மற்ற கடினமான செயல்களைச் செய்யவும் தூண்டும் போது வீரர்கள் தங்கள் உண்மையான போட்டிகளில் இலகுவாக அதை மேற்கொண்டு ஜெயிக்கிறார்கள்.

அது போல சோதனைகளையும் நெருக்கங்களையும் போராட்டங்களையும் எதிர்கொள்வதன் மூலம் தேவன் நம்மை வளரத் தூண்டுகிறார். ஆமோஸ் 9:9, யாக். 1:12

ஆனால் பாவம் செய்ய தூண்டும் படியான சோதனைகளை தேவன் ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார் - ஏனெனில் அது அவருடைய இயல்புக்கு எதிரானது. பாவத்தில் விழுவதும் சிக்குவதும் மனிதனின் சொந்த இச்சைகளினால் யாக். 1:13-14

எனவே தேவன் நிர்ணயிக்கும் வரம்புகளுக்குள் மக்களுக்கு வாழ்க்கையை கடினமாக்க சாத்தானையும் அவனுடைய கூட்டாளிகளையும் அனுமதிக்கிறார். யோபு 2:6, லூக்கா 22:31,

"மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்- 1 கொரி. 10:13.

எகிப்தில் இஸ்ரேல் ஜனங்கள் அடிமைத்தனத்தில் இருந்தபோது இதை விளக்குவதை நாம் காணலாம்.

இஸ்ரவேலரின் வாழ்க்கையை கடினமாக்கிய ஒரு பொல்லாத பார்வோன் எழுவதற்கு தேவன் அனுமதித்தார்.

இஸ்ரவேலரை விடுவிப்பதற்காக தேவனிடம் வேண்டுகோள் விடுத்த போது  அதை அவர் அனுமதித்திருந்தாலும், மோசேயின் மூலமாக இஸ்ரவேலர் அனைவரும் எகிப்தை விட்டு வெளியேறினாலும் தேவன் தனது வல்லமையை நிரூபிக்க பார்வோனின் பிடிவாதத்தையும் பயன்படுத்தினார்.

சாத்தானின் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டதே, அது நிச்சயம். வெளி. 20:10, 2,3, வெளி. 14:10; மத். 25:41, 46

ஆனால் இதற்கிடையில், மக்கள் பாவத்தை விட்டுவிட்டு தேவனைப் பின்பற்ற விரும்புவதற்காக தேவன் சாத்தானைப் பயன்படுத்துகிறார்.

சாத்தானின் செயல்களும் மக்களுக்கு ஒரு தேர்வைத் தருகின்றன.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக