செவ்வாய், 12 நவம்பர், 2019

#612 *கேள்வி* பரிசுத்த வேதாகமத்தின் இறைவன் இந்த உலகில் மனிதனை படைத்த நோக்கம் என்ன?


#612
*கேள்வி*
பரிசுத்த வேதாகமத்தின் இறைவன்  இந்த உலகில் மனிதனை படைத்த நோக்கம் என்ன?

வேதாகமத்தின் அடிப்படையில் விளக்கம் வேண்டும் ஐயா


*பதில்*
தேவன் தம்மை போல நம்மை உருவாக்கி - நம்மை உருவாக்கியதன் நிமித்தமும் தன் சிருஷ்டிப்பின் நிமித்தமும் தேவன் ஆதியில் களிகூர்ந்தார். மகிழ்ந்தார் - ஆதி. 1:31

ஒரு தந்தை-பிள்ளை உறவை வைத்திருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார் - 2 கொரி.6:16-18

தூய்மையான இருதயத்தோடு நாம் அவரை சேவிக்க வேண்டும் என்பது நம் மீது விழுந்த கடமை - பிர 12:13;

அதை அவர் விரும்புகிறார் - யோ 4: 23- 24

நாம் சம்பாதித்தவைகளில் அநுபவிக்கும்படி கிருபையை அவர் கொடுக்கிறார் - பிர 5: 18-20

எல்லாவற்றை காட்டிலும் முதலாவது நாம் அவரை தேடவேண்டும் - மத் 6:33.

பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டும் என்று அவர் விரும்புகிறார் - ரோமர் 6

அதற்காகவே இயேசு சிலுவையில் மரித்தார்.  மனந்திரும்பி கீழ்ப்படியாவிட்டால் பாவத்தில் மரித்து என்றும் அழியாத சரீரத்தில் எப்போதும் அவியாத அக்கினியில் சதா காலமும் நரகத்தில் தள்ளப்பட வாய்ப்பு உள்ளது அப் 2:38, லூக் 3:17, வெளி 21:8

நாட்கள் முடியும் வரை உண்மையுள்ள கீழ்ப்படிதலுடன் இருந்தால் என்றென்றும் கர்த்தரிடத்தில் இருப்போம் - எபி. 5: 9; வெளி. 2:10; 21: 1-7

தேவனை எப்போதும் துதித்து வளம் வர நம்மை ஏற்படுத்தினார் - ஏசா 43:21


*Eddy Joel*, PhD
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com

* கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய:

அணைத்து கேள்வி பதிலையும் காண joelsilsbee blogspot என்று Google செய்யவும்.

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக