செவ்வாய், 12 நவம்பர், 2019

#610 - ஜெபம் என்றால் என்ன? படைப்பாளராகிய தேவனும் பரிசுத்தமான மனுஷன் மட்டுமா உறவாடும் நேரம்? அப்படி என்றால் மற்ற கிறிஸ்தவர்களின் நிலை என்னமாய் முடியும்?

#610 - *ஜெபம் என்றால் என்ன? படைப்பாளராகிய தேவனும் பரிசுத்தமான மனுஷன் மட்டுமா உறவாடும் நேரம்?* அப்படி என்றால் மற்ற கிறிஸ்தவர்களின் நிலை என்னமாய் முடியும்?

*பதில்*
ஜெபம் என்பது இயற்கையானதாக இருக்க வேண்டிய அவசியம் அல்ல.

சீஷர்கள் ஜெபிக்க கற்றுக்கொடுக்கும்படி இயேசுவிடம் கேட்டார்களே - லூக். 11: 1-4

மற்றவர்கள் ஜெபிப்பதை கேட்டும் பழகியும் இருப்பதால் நாமும் அவற்றைப் பின்பற்றுகிறோம்.

ஆனால் சில நேரங்களில் உண்மையறியாமல் மற்றவர் செய்யும் தவற்றை நாமும் பின்பற்றிவிடுவதற்கு இந்த முறை காலப்போக்கில் ஏதுவாகி விடுகிறது.

*ஜெபம் என்பது என்ன என்று* 1 தீமோ. 2: 1-3 ல் தெளிவாக காணமுடியும்.

1. வேண்டுதல் - ஒரு தேவை தொடர்பான கோரிக்கை

2. ஜெபம் – தொழுகை

3. பரிந்துரை - ஒரு நேர்காணல், ஒரு கோரிக்கை

4. நன்றி செலுத்துதல் - நன்றி

*பிலிப்பியர் 4: 6ல் நாம் காண்பது*: (நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்)

1. ஜெபம் வணங்கும்படி

2. வேண்டுதல் - ஒரு கோரிக்கை வைக்க

3. நன்றி செலுத்த

தேவனைப் பின்பற்றுபவர்கள் படைப்பாளருடன் பேசுவதற்கான முதன்மை வழி இது. யாக்கோபு 4: 2.

இயேசுவின் பெயரில் (கட்டளையின்படி) கேட்கவேண்டும் - யோவான் 16:23-24

மற்றவர்களுக்காக விண்ணப்பிக்க வேண்டும் - 2 கொரி. 1:11

நாம் மற்றவர்களுடன் செய்த தவற்றிற்கான மன்னிப்பைக் கேட்டு பின்னர் தேவனிடம் ஜெபிக்க வேண்டும் - யாக்கோபு 5:16

தேவனை வாழ்த்தி ஜெபிக்க வேண்டும் 1 சாமு. 2: 1-10, சங். 66: 19-20

அவர் நமக்கு செய்த காரியங்களுக்காக நன்றி சொல்லி ஜெபிக்க வேண்டும் 1தெச. 5:18

ஒற்றுமையை பெற ஜெபிக்க வேண்டும் - யாக்கோபு 4: 8-10

நம்பிக்கையுடன் அணுகவும் - எபே. 3:12

*படைப்பாளராகிய தேவனும், பரிசுத்தமான மனுஷன் மட்டுமா உறவாடும் நேரம்*?

தேவன் எப்போதும் நம் இருதயத்தில் வாசமாக இருக்கிறார் – 1கொரி. 3:16

ஜெபிக்கும் போது மாத்திரமல்ல – அவர் வார்த்தையின் படி நடக்கும் ஒவ்வொருவரும் அவருடைய வழிநடத்துதலும் பெலனும் தன் கூடவே இருப்பதை உணரமுடிகிறது. 1 யோ. 2:14, 24, யோ. 14:20, ரோ. 8:9-11

*அப்படி என்றால் மற்ற கிறிஸ்தவர்களின் நிலை என்னமாய் முடியும்*?

வேலை பழுவால் ஜெபத்தை தள்ளினால் – தேவனிடத்தில் முன்னுரிமையை இழக்க நேரிடும் - அப். 6:4

நீங்கள் ஜெபிக்காவிட்டால், பரிசுத்தத்திலிருந்து பிரிக்கப்படுவது நிச்சயம். தேவனுடைய தொடர்பு துண்டிக்கப்படும் போது பிசாசு இலகுவாக ஆளுகையை பற்றிக்கொள்வான். லூக்கா 11:25-26

1சாமு. 12:23 நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் *கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்*; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன்.

ஜெபிக்காவிட்டால் தேவ பிரசன்னத்தை இழந்து விடுகிறார்கள் – யோ. 15:7

ஜெபிக்காவிட்டால் – தேவ சித்தப்படி ஒன்றும் கிடைக்காது – யாக். 4:2

தேவனை அறியும் அறிவை விட்டு தூரம் போய் ஜீவனை இழக்க நேரிடும் – 1சாமு. 2:12

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக