செவ்வாய், 12 நவம்பர், 2019

#609 - ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்..., ஆவியானவரே ஸ்தோத்திரம்..., இயேசுவே ஸ்தோத்திரம்..., பரலோகத்தில் இருப்பவரே ஸ்தோத்திரம், ... கர்த்தாவே ஸ்தோத்திரம்.... ,

#609 -  *ஜெபத்தினை குறித்து - உதாரனமாக ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்..., ஆவியானவரே ஸ்தோத்திரம்..., இயேசுவே ஸ்தோத்திரம்..., பரலோகத்தில் இருப்பவரே ஸ்தோத்திரம், ... கர்த்தாவே ஸ்தோத்திரம்*.... ,

ஜெபிக்கிறோம்/ துதிக்கிறோம்..... ஆவியானவரே உம்மை  துதிக்கிறோம்/ ஜெபிக்கிறோம்.... அப்பா பிதாவே உம்மை  ஜெபிக்கிறோம்/துதிக்கிறோம்.... இயேசுவே உம்மை துதிக்கிறோம்/ ஜெபிக்கிறோம் .... இன்னும் ஏராளம்

இப்படி அனேகர் அனேக முறைகளில் தேவனை நோக்கி  ஜெபிக்கின்றனர், இப்படி ஜெபிப்பது சரியா உதாரனத்துடன் விளக்கம் தாருங்கள்,


*பதில்*
வேற்று மதத்தினர் தங்கள் தெய்வங்களை வணங்கும் போது ஸ்லோகம் சொல்வது உண்டு.

பல கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட பழக்கவழக்கங்களில் சிக்குண்டு அந்த முறைகளில் சொந்த மன நிறைவு அடைந்ததால் இந்த பழக்கம் நீடிக்கிறது என்று சொல்ல முடியும். அப்படிப்பட்ட வகையை தேவன் கண்டிக்கிறார் – லேவி. 18:3, 20:23, உபா. 12:30-31.

ஜெபம் என்பது பிதாவினிடத்தில் ஏறெடுக்கப்படுகிறது.
ஆவியானவர் உதவியோடு கிறிஸ்துவின் மூலம் சமர்பிக்கப்படுகிறது.

நாம் வேலை பார்க்கும் ஸ்தலத்தில் இருக்கும் எஜமானனிடம் போய் அவர் உங்களுக்கு செய்த நன்மைக்காக தொடர்ந்து நன்றி நன்றி நன்றி நன்றி என்று நீங்கள் சொல்லிக்கொண்டேயிருந்தால் என்ன நடக்கும் ??

ஸ்தோத்திரம் என்ற வடசொல்லுக்கு நன்றி என்பது தமிழ் வார்த்தை.

திரும்ப திரும்ப சொல்லி ஜெபம் ஏறெடுக்கக்கூடாது என்றே நமக்கு கட்டளையிருக்கிறது மத். 6:7

பொது மொழி பெயர்ப்பு - மத். 6:7 அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.

எளிய மொழி பெயர்ப்பு தமிழ் வேதாகம பதிப்பில் மிக அழகாக மொழி பெயர்த்திருக்கிறார்கள். மத் 6:7 “நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது, தேவனை அறியாதவர்களைப் போல நடந்து கொள்ளாதீர்கள். பொருளற்ற வார்த்தைகளை அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள். அவ்வாறு பிரார்த்திக்காதீர்கள். பலவற்றையும் அவர்கள் சொல்வதனால் தேவன் அவர்களைக் கவனிப்பார் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

மூலபாஷையிலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டு இருக்கக்கூடாது என்று.

ஆங்கில மொழி பெயர்ப்பு இன்னும் நமக்கு ஊர்ஜீதப்படுத்துகிறது :

Mt. 6:7 (BBE Version) And in your prayer *do not make use of the same words again and again*, as the Gentiles do: for they have the idea that God will give attention to them because of the number of their words.

யாரிடத்தில் ஜெபிக்கிறோம் எப்படி ஜெபிக்கிறோம் என்ற அடிப்படையான முறையை நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

பிதாவினிடத்தில் நேரடியாக ஜெபிப்பதால் ஆண்டவரே கர்த்தாவே என்ற வார்த்தைகளை ஜெபத்தில் பயன்படுத்த முடியாது. ஏனென்றால் அந்த பதங்கள் கிறிஸ்துவை குறிக்கிறது - அப். 2:36, பிலி. 2:11, எபி. 4:14-18, கொலோ. 3:17, யோ. 14:6, 14.

ஜெபம் என்பது தேவனோடு தொடர்பு கொள்ளுவது (பிலி 4:6)

தேவனுடைய சித்தப்படி நாம் ஜெபிக்கும் போது அதை பெற்றுக்கொள்கிறோம் (மத். 7:7-11, 21:22, 1யோ. 5:14)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக