ஞாயிறு, 10 நவம்பர், 2019

#602 - யாத். 15:25 கர்த்தர் காண்பித்த மரம் எது?

#602 - *யாத். 15:25 மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று. … கர்த்தர் காண்பித்த மரம் எது?*

*பதில்*
இது எந்த மரம் என்று சொல்லப்படவில்லை.

மரத்தை வெட்டி தண்ணீரில் போட்டவுடன் மரத்தின் தன்மையானது தண்ணீரை மதுரமாக மாற்றியது என்று நாம் நிணைத்து விடகூடாது.

தேவன் சொன்ன கட்டளைக்கு மோசே கீழ்படிந்ததின் விளைவை தான் அங்கு நாம் உணர வேண்டும் கசப்பை மதுரமாக்கியது அந்த மரமல்ல ஆனால் தேவன் அந்த தண்ணீரின் குணத்தை மாற்றினார். அடுத்து உள்ள 26வசனத்தை படித்தால் நான் சொன்ன இந்த கருத்து உறுதியாகும் !!

கசப்பான நீரைக் குணப்படுத்துவதற்கு காரணமாக இருந்த இந்த மரம், நம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட மீட்பரின் சிலுவையின் அடையாளமாக இருந்தது என்று ஒப்பிடமுடியும்.

பாதிக்கப்பட்ட இயற்கையை குணப்படுத்துவதற்கான வழிமுறையாக எப்படி ஒரு மரம் பயன்பட்டதோ நம் வாழ்க்கையின் தீமைகளும் கசப்புகளும் சிலுவை மரத்தில் தொங்கிய கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்படியும் போது சகல பாவமும் கசப்பும் நீக்கப்பட்டு பரிசுத்தமாகிறோம் 1பேது 2:24

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
   
Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

-------------------------*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக