சனி, 2 நவம்பர், 2019

#597 - 10 கட்டளை உலக மக்களுக்கா? யூதர்களுக்கா?

#597 - *10 கட்டளை உலக மக்களுக்கா? யூதர்களுக்கா?*

*பதில்*
இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது.  ரோ. 9:4

உபா. 4:13 நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் *உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய* தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.

உபா. 10:4 முன்னே சபைகூடிவந்த நாளில் கர்த்தர் மலையில் அக்கினி நடுவிலிருந்து *உங்களுக்கு விளம்பின பத்துக்கற்பனைகளையும்* அவர் முன் எழுதியிருந்த பிரகாரம் அந்தப் பலகைகளில் எழுதி, அவைகளை என்னிடத்தில் தந்தார்.

உபா. 9:9 கர்த்தர் *உங்களோடே பண்ணின உடன்படிக்கைப்* பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்ளும்படி நான் மலையில் ஏறினபோது, நாற்பதுநாள் இரவும் பகலும் மலையில் தங்கி அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தேன்.

யாத். 20:2 *உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து* புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.

உபா. 5:3 அந்த உடன்படிக்கையைக் கர்த்தர் நம்முடைய பிதாக்களுடன் பண்ணாமல், இந்நாளில் இங்கே *உயிரோடிருக்கிற நம்மெல்லாரோடும்* பண்ணினார்.  (இஸ்ரவேலரோடு)

யூதர்கள் என்பவர்கள் இஸ்ரவேலரின் ஒரு பகுதி கோத்திரத்தார் மட்டுமே.

10 கட்டளைகள் உலக மக்களை கட்டுப்படுத்தாது.
10 கட்டளையை முழுவதுமாக உள்ளடக்கி கிறிஸ்து தன் ஜனங்களுக்கு புதிய ஏற்பாட்டில் கொடுத்திருக்கிறார்

மத். 22:36-40  போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான்.

இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;

இது முதலாம் பிரதான கற்பனை.

இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.

இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.

*நாம் கிறிஸ்துவிற்கு செவிசாய்க்க வேண்டும்*
அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேசகுமாரன், *இவருக்குச் செவிகொடுங்கள்* என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. மாற்கு 9:7

அதற்கு *இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்*. யோ. 14:6

10 கட்டளையல்ல கிறிஸ்துவின் கட்டளையை நாம் பின்பற்ற வேண்டும்

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக