#596 *கேள்வி - திருவிருந்து பந்தியில் மீதமான அப்பத்தையும், திராட்சை
ரசத்தையும் என்ன செய்ய வேண்டும்?* விளக்கம் தாருங்கள்
திருவிருந்து எடுப்பவர்கள் அப்பத்திலும் திராட்சரசத்திலும் பங்கெடுப்பவர்கள் கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூறுவது மட்டுமல்லாமல் மற்ற சகோதர சகோதரிகளுடனும் தங்களுடைய ஐக்கியத்தை வெளிப்படுத்துகிறார்கள் – 1கொரி. 10:16-17
மேலும், அப்பம் கர்த்தருடைய சரீரமாகவும்,
திராட்சரசம் கர்த்தருடைய இரத்தமாகவோ மாறுவதல்ல !!
அப்பம் – கிறிஸ்துவின் சரீரத்தின் *நினைவுகூறுதலாகவும்*,
திராட்சரசம் – கிறிஸ்துவின் இரத்தத்திற்கு *நினைவுகூறுதலாகவும்* இருக்கிறது – 1கொரி. 11:24-25
அப்பம், ரசத்திற்காக ஜெபித்து அதில் பங்கெடுத்தப்பின்,
அது பரிசுத்தமாக்கப்பட்டதென்ற கவலையில் மீந்திருப்பதை என்ன செய்வதென்ற கேள்வி எழுகிறது.
நாம் கூடியிருந்து ஆசீர்வதித்த / ஜெபித்த அந்த ஆசீர்வாதத்திற்குரிய பாத்திரமானது *அதன் நோக்கம் முடிந்ததும்* மீதமுள்ளதை,
ஊழியரோ அல்லது பந்தியில் பங்கெடுத்தவர்களோ மீந்திருக்கும் அந்த *ஆகாரத்தை வீணாக்காமல்* சாப்பிடுவது நல்லது. யோ. 6:12
மற்றவர் முன்னிலையிலும்,
பிள்ளைகளின் பிற்கால இரட்சிப்பையும் மனதில் கொண்டு,
தவறான உதாரணத்தை ஏற்படுத்தாமல் இருக்க,
கர்த்தருடைய பந்தி *முடிந்த பின்னர்* அதை பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுப்பதை தவிர்க்கலாம் – பிலி. 1:11, 2கொரி. 6:3
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய வேலைக்காரன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
----*----*----*----*----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக