#595 - *விக்கிரகம் என்பது ஒன்றுமில்லை என்றால் அதை
வணங்குபவர்கள் எப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர்களாய் இருக்கிறார்கள்? அதற்கு படைக்கப்பட்ட உணவுகளை ஒரு கிறிஸ்தவன்(ள்)
உண்பது தவறா?
*பதில்*
நீங்கள்
குறிப்பிடுகிற வசனம் 1கொரி. 8:4ல் வருகிறது.
ஒன்றுமில்லை
என்றால் –
ஒரு பிரயோஜனமுமில்லை.
அதன்
மீது எவ்வளவு நம்பிக்கை வைத்தாலும் நமக்கு எந்த பலனுமில்லை.
அதற்கு
எந்த வல்லமையுமில்லை. தானாக எதையும் தனக்கே செய்து கொள்ளமுடியாத பட்சத்தில் அதை
ஒரு பொருட்டாக நம்பி வணங்கினால் வணங்குபவர்களுக்கு என்ன நன்மை பயக்கும் என்கிறார்.
இயேசு
என்று ஒரு பொம்மையை செய்து அதை விக்கிரகமாக்கி அதற்கு மாலையை போட்டு ஊது பத்தி கொளுத்து
விழுந்து வணங்குறவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். கடவுள் படத்திலோ கல்லிலோ
கிடையாது என்பதை.
மேலும்
கடவுள் என்று நம்பி எந்த வகையான சொரூபத்தையும் வணங்க கூடாது என்று எச்சரிக்கை
வேதத்தில் உள்ளது.
மேலே வானத்திலும்,
கீழே பூமியிலும், பூமியின்
கீழ்த் தண்ணீரிலும் *உண்டாயிருக்கிறவைகளுக்கு
ஒப்பான* ஒரு
சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; நீ அவைகளை *நமஸ்கரிக்கவும்
சேவிக்கவும்*
வேண்டாம்; உன்
தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப்
பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம்
நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். யாத். 20:4-5
அதை
வணங்குபவர்களும் அதை போலவே ஒன்றுமில்லாதிருக்கிறார்கள். அதே வேளையில் கடவுளின் கோபத்திற்கும்
ஆளாகிறார்கள் !!
சொந்த
அப்பா உயிரோடு நம் பக்கத்தில் நின்று கொண்டிருக்க அவர் ஃபோட்டோவை பார்த்து அப்பா
அப்பா என்று படத்தை பார்த்து பேசிகொண்டும் படத்திற்கு மரியாதை செய்து கொண்டும் இருந்தால்
பக்கத்தில் நிற்கும் அப்பா உங்களை சும்மா விடுவாரா !!??
விக்கிரகத்திற்கு
எந்த சக்தியும் இல்லாததால் - விக்கிரகத்திற்கு படைக்கப்பட்டவைளை கிறிஸ்தவன் சாப்பிடுவதால்
அவனுக்கு எந்த நன்மையோ எந்த தீமையோ ஏற்படாது !!
ஆகாரதம் வயிற்று பசியை தான் போக்கும் – ஆத்துமாவோ ஆவியோ ஆகாரத்தினால்
திருப்தியாகாது –
1கொரி. 8:7-8
எந்த
ஒரு கிறிஸ்தவனும் தனக்காக அல்ல பிறனுக்கான விசுவாசத்தை வளர்ப்பதில்
ஜாக்கிரதையுள்ளவனாக இருக்க வேண்டியது அவசியம் – ஆகவே கீழே கொடுக்கப்பட்ட
வசனத்தை கவனிக்கவும்:
போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால்
நமக்கு ஒரு மேன்மையுமில்லை,
புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை.
ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம்
எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள்.
எப்படியெனில்,
அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற
அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத்
துணிவுகொள்ளுமல்லவா?
பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக்
கிறிஸ்து மரித்தாரே.
இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள
அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள். 1கொரி. 8:8-12
கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிப் புசியுங்கள்; மனச்சாட்சியினிமித்தம்
நீங்கள் ஒன்றையும் விசாரிக்கவேண்டியதில்லை.
பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.
அன்றியும் அவிசுவாசிகளில் ஒருவன் உங்களை விருந்துக்கு
அழைக்கும்போது, போக
உங்களுக்கு மனதிருந்தால்,
மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல், உங்கள் முன் வைக்கப்படுகிற எதையும் புசியுங்கள்.
ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன்
உங்களுக்குச் சொன்னால்,
அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள்; பூமியும் அதின்
நிறைவும் கர்த்தருடையது.
உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய
மனச்சாட்சியைக்குறித்தே சொல்லுகிறேன். என் சுயாதீனம் மற்றொருவனுடைய
மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படவேண்டுவதென்ன?
மேலும் நான் அதை ஸ்தோத்திரிப்புடனே அநுபவித்தால், ஸ்தோத்திரித்து
அநுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூஷிக்கப்படுவானேன்?
ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச்
செய்தாலும், எல்லாவற்றையும்
தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.
நான் என் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய
பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள்
இரட்சிக்கப்படும்படிக்கு,
எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல;
நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும்,
தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள் 1கொரி. 10:25-33
மேற்சொன்ன
இந்த காரியங்களினால் –
கிறிஸ்தவர்கள் விக்கிரகத்திற்கு படைக்கப்பட்டவைகளினின்று விலகியிருக்கவேண்டும் – அப். 15:20
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக