செவ்வாய், 1 அக்டோபர், 2019

கர்த்தருடைய பந்தியில் வைக்கப்பட்டு இருக்கும் அப்பமும் திராட்சை ரசமும் உண்மையில் கிறிஸ்துவின் இரத்தமாகவும் சரீரமாகவும் மாறுகிறதா?

பகுதி: 61 ஆவியோடும் சத்தியத்தோடும் தொழுது கொள்ளுதல் (கர்த்தருடைய பந்தி)

கர்த்தருடைய பந்தியில் வைக்கப்பட்டு இருக்கும் அப்பமும்  திராட்சை ரசமும் உண்மையில் கிறிஸ்துவின் இரத்தமாகவும் சரீரமாகவும் மாறுகிறதா?

தேவனை ஆவியோடும் சத்தியத்தோடும் தொழுது கொள்ளுதல் என்கிற சத்தியத்தில் கர்த்தருடைய பந்தியை பற்றி கற்றுக் கொண்டு வருகிறோம்

முதல் நூற்றாண்டுக்கு பின்பு வந்த பிரிவினை கூட்டங்களில்  கர்த்தருடைய பந்தியை  குறித்து பல விதமான கள்ள போதனைகள் எழும்பியது

கர்த்தருடைய பந்தியில் வைக்கப்படும் அப்பதில் இயேசு எங்கே இருக்கிறார் என்று அநேகர் ஒவ்வொரு விதமாக போதித்தார்கள்

1)ஒருவர் இயேசு கிறிஸ்து அப்பத்துக்கு மேலே இருக்கிறார் என்றார்

2)இன்னொருவர் இல்லையில்லை இயேசு கிறிஸ்து அப்பத்துக்கு கீழே இருக்கிறார் என்றார்

3)மற்றொருவர் அப்படியில்லை  இயேசு கிறிஸ்து அப்பத்துக்கு நடுவில் இருக்கிறார் என்றார்

4)ஒரு பிரிவினை சபை நீங்கள் கர்த்தருடைய அப்பத்தை புசிக்கும் போது உங்கள் தொண்டைக்கு கீழே போகும் போது உண்மையில் கிறிஸ்துவின் சரீரமாக மாறி விடுகிறது  என்றார்கள்

5)மேலும் அவர்கள் கர்த்தருடைய பாத்திரத்தில் பானம் பண்ணும் போது திராட்ச ரசம் நீங்கள் பருகும் போது உங்கள்  தொண்டைக்கு கீழே போகும் போது உண்மையில் கிறிஸ்துவின் இரத்தமாக மாறி விடும் என்றார்கள்

6)இன்னும் சில பிரிவினை கூட்டங்கள் கர்த்தருடைய பந்தியின் அப்பத்தை நீங்கள் கையில் வாங்கி புசிப்பதற்கு பாத்திரவான்கள் அல்ல ஆகையால் நீங்கள் வாயை திறந்தால் நாங்களே அப்பத்தை  நாக்கில்  வைத்து விடுவோம் என்று சொல்லி நாக்கில் வைத்து விடுகிறார்கள்

7) இன்னொரு விஷயம் என்னவென்றால் அவர்கள் அப்பத்தை நாக்கில் வைக்கும் போது அது கிறிஸ்துவின் உண்மையான சரீரம் பல்லில் படக்  கூடாது பட்டால் அசுத்தமாகிவிடும் அதனால் பல்லில் படாமல் விழுங்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார்கள்

8)இதே போல இன்னொரு பிரிவினை கூட்டம் நீங்கள் கர்த்தருடைய பந்தியின் திராட்ச ரசத்தை பங்கு பெறுவதற்கு பாத்திரவான்கள் அல்ல ஆகையால் ஊழியக்காரராகிய நாங்கள் தான் பங்கு பெற வேண்டும் என்று சொல்லி விசுவாசிகளுக்கு  அதை கொடுப்பதில்லை

9)ஒரு வேளை விசுவாசிகள் திராட்ச ரசத்தில் பங்கு பெற வேண்டும் வற்புறுத்தி கேட்கும் போது அப்பத்தை  திராட்ச ரசத்தில் முக்கி கொடுக்கிறார்கள்

10) இன்னும் சிலர் கர்த்தருடைய பந்தி பரிசுத்தமானது ஆகையால் இதில் எல்லாம் அடிக்கடி பங்கு பெற கூடாது என்கிறார்கள்

11)கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறுவதற்கு வெள்ளை உடை அணிந்து வர வேண்டும் என்கிறார்கள்

12) இதே போல அநேக கள்ள போதனைகள் எழும்பியது இன்னமும் எழும்பிக் கொண்டு தான்  இருக்கிறது

அவர்கள் சொல்லுவதை போல அப்பம் கிறிஸ்துவின் உண்மையான சரீரமாகவும் திராட்சை ரசம் கிறிஸ்துவின் உண்மையான இரத்தமாகவும் மாறுகிறதா?

கர்த்தருடைய பந்தியை குறித்து நாம் பார்ப்பதற்கு முன்பு நாம் இரத்தத்தை புசிக்கலாமா? என்ற சத்தியத்தை நாம் கற்றுக் கொண்டு வருவோம்

நாம் இன்றைக்கு மிருகங்களுடைய இரத்தத்தை புசிக்கலாமா?

தேவன் ஆதாமையும் ஏவாளையும்  சிருஷ்டித்த பிற்பாடு அவர்கள் என்ன புசிக்க  வேண்டும் என்று கட்டளையிட்டு இருந்தார்?

ஆதாமுடைய காலகட்டத்தில் இருந்து நோவாவுடைய கால கட்டம் வரை மனிதர்கள் காய்க் கனிகளை தான் புசிக்க  வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருந்தார்
Gen 1:29 பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;

சகல மிருக ஜீவன்களும் ஆகாயத்து சகல பறவைகளும் பூமியின் மேல் ஊரும் பிராணிகள் எல்லாம் பசுமையான சகல பூண்டுகளையும் தேவன் ஆகாரமாக கொடுத்து இருந்தார்
Gen 1:30 பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.

நோவாவின் ஜலப்பிரளயத்திற்கு பின்பு தேவன் மாமிச  உணவுகளை நோவாவின் காலகட்டத்தில் புசிக்கும் படி  அனுமதி கொடுத்தார்

மனிதர்கள் காய் கனிகளோடு கூட   மாமிச  உணவுகளையும் கொடுத்தார்
Gen 9:2 உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன.
Gen 9:3 நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்தது போல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.

ஆனால் தேவன் மிருகங்களின் இரத்தத்தை மாத்திரம் புசிக்கக்கூடாது என்று நோவாவின் காலத்தில் கட்டளையிட்டார்
Gen 9:4 மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.

இரத்தத்தை புசிப்பது என்பதும்  இரத்தத்தை குடிப்பது என்பதும் இரண்டும் ஒன்றா?
இல்லை புசிப்பது என்பது வேறு குடிப்பது என்பது வேறு

 இரத்தத்தை  உணவாக வறுவல்  பண்ணி சாப்பிடுவது தான் புசிப்பது

இங்கே தேவன் இரத்தம் என்று சொல்லும் போது மாம்ச கண்களால் பார்க்க கூடிய உண்மையான இரத்தத்தை பற்றி பேசுகிறார் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள்

மோசேயின் மூலமாக நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்ட போது  இஸ்ரவேல் ஜனங்கள் இரத்தத்தோடு கொழுப்பையும் புசிக்கக்கூடாது என்று தேவன் கட்டளையிட்டார்
Lev 3:17 கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் புசிக்கலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்கள் எங்கும் உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்று சொல் என்றார்.
Lev 17:10 இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் இரத்தம் என்னப்பட்டதைப் புசித்தால், இரத்தத்தைப் புசித்த அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அவனை அறுப்புண்டுபோகப் பண்ணுவேன்.
லேவி  7:26 உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது புசிக்கலாகாது.
லேவி 7:27 எவ்வித இரத்தத்தையாகிலும் புசிக்கிற எவனும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல் என்றார்.

ஏன் இரத்தத்தை புசிக்க வேண்டாம்  என்று கட்டளையிட்டார் என்றால் அதற்கான பதிலையும் அவரே தருகிறார்
Lev 17:11 மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.
Lev 17:12 அதினிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்கவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் புசிக்கவேண்டாம் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
Deu 12:16 இரத்தத்தை மாத்திரம் புசிக்க வேண்டாம்; அதைத் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும்.

மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது மேலும் ஆத்துமாவிற்காக பாவநிவர்த்தி செய்கிறது இரத்தமாய் இருக்கிறபடியால் அதை புசிக்க வேண்டாம் என்று தேவன் கட்டளையிட்டார்

லேவியராகமம் 11ம் அதிகாரத்தில் இஸ்ரவேலர்கள் எதை புசிக்க வேண்டும் எதை புசிக்கக்கூடாது என்று தேவன் அநேக கட்டளைகளை இதை தெளிவாக கொடுத்து இருக்கிறார்
Lev 11:2 நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் புசிக்கத்தக்க ஜீவ ஜந்துக்கள் யாதெனில்:
Lev 11:9 ஜலத்திலிருக்கிறவைகளில் நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்: கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.
Lev 11:13 பறவைகளில் நீங்கள் புசியாமல் அருவருக்கவேண்டியவைகள் யாதெனில்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,

ஆனால் தேவன் கிறிஸ்துவின் பிரமாணத்தில்  சில உணவு பொருள்களை தவிர எது வேண்டுமானாலும்  புசிக்கலாம்  ஆனால் இரத்தத்தை மாத்திரம் ஒரு போதும் புசிக்க கூடாது

புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் பிரமாணத்தில்  தேவன் என்ன சாப்பிட வேண்டும் என்றும் எதை சாப்பிடக்கூடாது என்று கட்டளையிட்டு இருக்கிறார்
Act 15:19 ஆதலால் புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாதென்றும்,
Act 15:20 விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன்.

இன்றைக்கு  ஒட்டுமொத்த கிறிஸ்தவ  உலகிற்கு மாம்ச பிரகாரமான  ஆகாரத்தை   புசிப்பதற்கு   தேவன் கொடுத்த கட்டளை இது தான்
1) விக்கிரகங்களுக்கு படைத்த அசுசியானவைகளையும் சாப்பிடக்கூடாது
2) நெருக்குண்டு செத்ததை சாப்பிடக் கூடாது
3) இரத்தத்தை சாப்பிடக்கூடாது

உலகத்தில் வாழக்கூடிய எல்லா கிறிஸ்தவர்களுக்கும் கீழே உள்ள கட்டளை  யாவரும் உரியது அதற்கு எல்லாரும்  கீழ்ப்படிய வேண்டும்
Act 15:27 அந்தப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்மொழியாக உங்களுக்கு அறிவிப்பார்கள்.
Act 15:28 எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே.
Act 15:29 அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள்.
Act 15:30 அவர்கள் அனுப்பிவிடப்பட்டு, அந்தியோகியாவுக்கு வந்து, சபையைக் கூடிவரச்செய்து, நிருபத்தை ஒப்புவித்தார்கள்.
Act 15:31 அதை அவர்கள் வாசித்து, அதனாலுண்டாகிய ஆறுதலுக்காகச் சந்தோஷப்பட்டார்கள்.

நாம் இப்போது பூமிக்குரிய வகையில் எதை புசிக்க வேண்டும் எதை புசிக்க கூடாது என்று  வேத வாக்கியத்தில் இருந்து கற்றுக் கொண்டோம்

கர்த்தருக்கு சித்தமானால் கர்த்தருடைய பந்தியில் கிறிஸ்துவின் ஆவிக்குரிய மாம்சத்தை குறித்தும் ஆவிக்குரிய  இரத்தத்தை குறித்தும்  கற்றுக் கொள்வோம்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் எங்களோடு தேவனை ஆவியோடும் சத்தியத்தோடும்  தொழுது கொள்ள அன்போடு அழைக்கிறோம்

Bro:Ariyel barnabas
Surampatti, Erode
CHURCH Of CHRIST
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக