செவ்வாய், 1 அக்டோபர், 2019

#521 - புதிய ஏற்பாட்டு காலத்தில் ஒருவன் பாவம் செய்தால் எந்த வகையில் இந்த உலகத்தில் தண்டிக்கப்படுவான்?

#521 -*பழைய ஏற்பாட்டு காலத்தில் பாவம் செய்தவனுக்கு மரண தண்டனை போன்றவை கொடுக்கப்பட்ட பட்சத்தில் இப்போது இருக்கும் புதிய ஏற்பாட்டு காலத்தில் ஒருவன் பாவம் செய்தால் எந்த வகையில் இந்த உலகத்தில் தண்டிக்கப்படுவான்?*

*பதில்*
இதை புரிந்து கொள்ள நான் ஆரம்பத்திலிருந்து சுருக்கமாக எழுத வேண்டும். பொறுமையாய் படிக்கவும்.

நாம் பாவம் செய்யும் போதெல்லாம், பாவத்தின் விளைவாக ஏற்படும் பின் விளைவுகள் நிச்சயம் உள்ளன. அந்த விளைவுகளில் ஆன்மீக மற்றும் உடல் ரீதியானவையும் உண்டு.

ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது அவர்கள் உடல் மற்றும் ஆன்மீக விளைவுகளை அனுபவித்தார்கள் (ஆதியாகமம் 3).

அவர்கள் செய்த பாவத்தின் முதல் முடிவு அவர்களின் நிர்வாணத்தைப் பற்றிய விழிப்புணர்வு. அவர்கள் தங்கள் அப்பாவித்தனத்தை இழந்தனர். ஒளிந்துக் கொண்டனர்  (ஆதி. 3:7)

என்ன நடந்தது என்பதை தேவன் அறிந்திருந்தார், ஆனால் ஆதாமும் ஏவாளும் தங்கள் பாவத்தைப் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். (ஆதி. 3:11)

மக்கள் தவறு செய்யும் போது, ​​பாவத்திற்கு இரண்டு பதில்கள் உள்ளன. ஒன்று அவர்கள் செய்த பாவத்தை ஒப்புக்கொள்வது அல்லது அதை மறைக்க முயற்சி செய்வது.

நாம் தவறு செய்கிறோம் என்பதை தேவன் அறிவார். ஆனால் நம்முடைய தவறுகளை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார் (1 யோவான் 1: 8-10).

நாம் தவறு செய்தோம் என்பதை ஒப்புக்கொள்ளும் வரை நம்மால் அந்த தவறை சரி செய்ய முடியாது.

துரதிர்ஷ்டவசமாக, ஆதாமும் ஏவாளும் தங்கள் பாவத்தை மறைக்க முயன்றனர். என்ன நடந்தது என்று தேவன் ஆதாமிடம் கேட்டபோது, ​​ஆதாம் ஏவாளின் மீதும், ஏவாள் சர்ப்பம் மீதும் பழியை போட முயற்சித்து மறைமுகமாக தேவன் மீதும் குற்றம் சாட்ட முயன்றனர். (ஆதி. 3:12-13)

தேவன் அவர்களின் பாவங்களுக்கான தண்டனையை தந்தார்.

சர்ப்பம் தன் வயிற்றில் ஊறி செல்ல வேண்டும். கூடுதலாக சர்ப்பத்திற்கும் ஸ்திரீக்கும் இடையேயான இயற்கையான பகையை உண்டுபண்ணினார். இன்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும், குறிப்பாக பெண்கள் மத்தியில் சர்ப்பத்தை குறித்த இயல்பான பகை / வெறுப்பு உள்ளது. (ஆதி. 3:15)

பொதுவாக, சர்ப்பத்திற்கும் மக்களுக்கும் இடையே இயற்கையான வெறுப்பு இருக்கிறதை நாம் உணர முடியும்.

மேலும் முக்கியமாக 15ம் வசனத்தில், சர்ப்பத்தின் வழித்தோன்றலுக்கும் ஸ்திரீயின் வழித்தோன்றலுக்கும் இடையே பகை இருக்கும் என்ற எதிர்கால நிகழ்வைப் பற்றி ஒரு தீர்க்கதரிசனம் உள்ளது.

ஸ்திரீயின் வழித்தோன்றல் இயேசு. பூமிக்குரிய தந்தை இல்லாமல் இயேசு ஒரு ஸ்திரீக்குப் பிறந்தார்.

சிலுவை மரணத்தின் மூலம் சாத்தான் இயேசுவை நசுக்கினான். இது ஒரு சிறிய காயம் மட்டுமே. ஏனென்றால் தேவன் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார்.

இயேசு மரணத்தை வென்றதால், சாத்தானின் ஆதாரயுக்தியான மரணம் அழிக்கப்பட்டது (எபிரெயர் 2: 14-15, 1 கொரிந்தியர் 15: 20-28)

ஆதாம் மற்றும் ஏவாளின் பாவத்தின் மற்றொரு விளைவு மரணம் என்பதை கவனியுங்கள்.

ஆதாம் ஏவாள் பாவம் செய்த அந்த நேரம் வரை, எந்த மரணமும் இல்லை. எல்லா உயிரினங்களும் *தாவரங்களை சாப்பிட்டன* (ஆதியாகமம் 1:30). ஆதாமும் ஏவாளும் ஜீவவிருட்சத்தின் கனியை சாப்பிட தடை இல்லாததால் எப்போதும் வாழ்ந்திருக்க வாய்ப்பு இருந்தது (ஆதியாகமம் 3:22).

அவர்கள் செய்த பாவத்தால், சரீர (உலக) மரணத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினர். சாத்தானுக்கு அவர்களுக்கும் அவர்களுடைய சந்ததியினருக்கும் எதிராகப் பயன்படுத்த ஒரு வலிமையான ஆயுதத்தைக் கொடுத்தார்கள்.

தடைசெய்யப்பட்ட பழத்தை அவர்கள் சாப்பிட்ட நாளில் அவர்கள் நிச்சயமாக மரிப்பார்கள் என்று தேவன் சொன்னார். (ஆதியாகமம் 2: 17)

ஆதாமும் ஏவாளும் பழத்தை சாப்பிட்ட உடனேயே ஆன்மீக மரணம் அடைந்தார்கள் (ஏசாயா 59: 2). அதே வேளையில் உடல் ரீதியாக மரிக்கத் தொடங்கினர்.  அவர்களுக்கு மட்டுமல்ல. அவர்களுடைய பாவம் முழு சிருஷ்டிக்கும் மரணத்தைக் கொடுத்தது (ரோமர் 8: 18-23).

அந்தப் ஸ்திரீயும் (ஏவாளும்) தனது பாவத்திற்காக தண்டனையைப் பெற்றார்.

அந்த மனிதனும் (ஆதாமும்) செய்த பாவத்திற்காக தண்டிக்கப்பட்டார்.

சர்ப்பத்தையும் ஸ்திரீயையும் போலவே, ஆணின் தண்டனையும் ஆதாமை மட்டும் பாதிக்காமல் எல்லா மனிதர்களுக்கும் அது கடந்து சென்றது.

பாவத்தின் விளைவு - உடல் ரீதியாக பாவத்தை பொறுத்து மாறுபடுகிறது. ஆனால், ஆத்தும விளைவு ஒன்றே."பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் 6:23).

பாவத்தின் ஆன்மீக விளைவுகளுக்கான தீர்வும் ஒன்றே, எந்த பாவமாக இருந்தாலும், "தேவனுடைய பரிசு (கிருபை வரமோ) நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் உண்டான நித்திய ஜீவன்" (ரோமர் 6:23).

நம்முடைய பாவங்களிலிருந்து பெற்ற இரட்சிப்பு பாவத்தின் மூலமாக வரும் உடல் ரீதியான விளைவுகளை அகற்றாது.

உதாரணத்திற்கு அதிகமாக குடித்து கல்லீரலை வீணாக்கினால் அதன் பலன் அவருக்கு உண்டாகிறது.

பாலியல் பாவங்களைச் செய்து நோயுற்றால் அல்லது கர்ப்பமாகிவிட்டால், அந்த விளைவுகள் அப்படியே இருக்கும்.

(கிறிஸ்தவன்) தான் செய்த பாவத்தை உணர்ந்து அதை அறிக்கையிட்டு மனந்திரும்பி அந்த பாவத்தை விட்டு விட்ட பட்சத்தில் தேவனிடத்தில் இரக்கம் பெற்று ஒப்புரவாகிறார். (நீதி. 28:13)

*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – Kaniyakulam Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

* YouTube Channel https://www.youtube.com/joelsilsbee (Subscribe பண்ணவும்)

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக