#589 - *தேவன் ஆதாமை உருவாக்கும் போது ஆதாமிற்கு என்ன வயது?*
*பதில்*
ஆதாமை
ஒரு பிள்ளையாகவோ குழந்தையாகவோ உருவாக்காமல் ஆணும் பெண்ணுமாக உருவாக்கினார் என்று
வேதம் சொல்கிறது (ஆதி. 1:27)
பூமியில்
ஆதி மனுஷன் என்று சொல்லப்பட்ட ஆதாம் உருவாக்கப்படுகிறார். அவ்வாறு உருவாக்கப்பட்ட
போது நம்முடைய சரீர வளர்ச்சிக்கு ஒப்பாக ஆதாமுக்கு எந்த வயது என்று நீங்கள்
குறிப்பாக கேட்பதாக இருந்தால் – வேதம் அதை சொல்லவில்லை.
ஆதாம்
உருவாக்கப்பட்ட பின், ஏதேன் தோட்டத்தில் தேவன் அவனை கொண்டுவந்து விட்டு வேலை செய்யும்படி
கட்டளையிடுகிறார். ஆதி. 2:15
மற்றும்
தேவன் அவரிடத்தில் மற்ற மிருகங்களை கொண்டுவந்து என்ன பெயர் இடுவான் என்று ஆதாமிடத்தில்
முடிவெடுக்க விட்டார். ஆதி. 2:19
மேலும்
ஏவாளை கண்ட மாத்திரத்தில் இவள் என் எலும்பிலும் என் சதையிலும் உருவானவள் என்று அடையாளம்
கண்டுகொள்ளும் அளவு அவருக்கு புத்தி இருந்தது - ஆதி. 2:23
ஒரு
ஆண் என்று அழைக்கப்படுவது நியாயபிரமாணத்தின்படி 30 வயது மதிக்கப்படுகிறது. (எண்.
4:3) இதை வைத்துப் பார்க்கும் போது ஆதாம் உருவாக்கப்பட்டபோது அவருக்கு (முதல்) 1வயது
என்பது பூமியின் கணக்கு.
*நம்
புரிதலுக்காக மாத்திரமே*
: நம்மில் ஒருவர் சுமார் 30 வயது நிரம்பினவரின் அளவில் அவர் சரீர வளர்ச்சி இருந்திருக்கலாம்.
உருவாக்கப்பட்ட
நாளிலிருந்து ஆதாம் *வாழ்ந்த* வயது - 930 (ஆதி. 5:5)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக