#588 - *பிலி. 1:10 தேவனுக்கு மகிமையும் துதியும்
உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி என்ற
வசனத்தை விளக்கவும்.
*பதில்*
*இயேசு
கிறிஸ்துவினால் வரும் நீதியின் கனி* என்பதை நாம் மிக மிக கவனத்தில் கொள்ள
வேண்டும்.
நாம்
கிறிஸ்துவின் காலத்தில் இருக்கிறோம்.
மோசேயின்
நியாயபிரமாண காலத்தில் அல்ல
முற்பிதாக்களின்
காலத்திலும் அல்ல.
கிறிஸ்துவை
நம் தலையாக கொண்டுள்ளோம் – எபே. 1:23,
4:15
சரீரமானது
தன் தலையின் சப்தத்திற்கு தான் கீழ்படிய வேண்டும் – மற்றவர் சப்தத்திற்கு செவி
சாய்தால் சீர்கெடும்.
மனைவி
எப்படி தன் தலையாகிய கணவனின் சொல்லிற்கு மாத்திரம்
கீழ்படியவேண்டுமோ (1கொரி. 11:3) கிறிஸ்து எப்படி தன் தலையாகிய பிதாவினுடையதை
மாத்திரம் செயல்படுத்துகிறாரோ (யோ. 15:10,
16:15) கிறிஸ்தவர்களாகிய நாமும் நம்
தலையாகிய கிறிஸ்துவின் கட்டளைக்கே கீழ்படிய வேண்டும்.
சிலுவையில்
முடித்து வைத்த 613 கட்டளைகளை பின்பற்றினால் இரட்சிப்பை இழந்து போவோம் (ரோ. 10:4, கலா. 3:10,
கலா. 5:18)
அப்படியென்றால்
– நீதியின் கனிகள் எவை :
சோதனைகளுக்குப்
பிறகு நீதியின் கனி பெறப்படுகிறது - எபிரெயர் 12:11
கிறிஸ்துவுக்குள்
வந்ததால் பழைய நடத்தையின் மாற்றம் என்பது கனிகள் - கலாத்தியர் 5: 22-23
வரம்
அல்ல - ஆவியின் கனி - எபேசியர் 5: 9
ஏராளமாக
நாம் பலனளிக்க அல்ல கனியுள்ளவராயிருக்க இவைகளில் நிலைத்திருக்க வேண்டும் - 2 பேதுரு
1: 2-8
ஏழையான
பரிசுத்தவான்களுக்கு உதவுதல் - ரோமர் 15: 26-28
நம்முடைய
நீதியின் கனியின் விளைவு - 2
கொரிந்தியர் 9: 9-10
சுவிசேஷத்தைப்
பரப்புவதற்கு உதவுதல், நீதியின் கனிகள் - பிலிப்பியர் 4: 16-18
நல்ல
செயல்களைப் பேணுதல், நீதியின் கனிகள் - தீத்து 3:14
அப்படி
செய்வது தேவனுக்கு மகிமை அளிக்கிறது - மத்தேயு 5:16
சுவிசேஷத்தின்
போதனையால் நிறைவேறும்போது அது தொடர்ந்து நீதியின் கனியாகிய பலனைத் தருகிறது -
கொலோசெயர் 1: 5-6
தேவனை
துதிப்பது நீதியின் பலனை பெற்று தருகிறது - எபிரெயர் 13:15
ஆத்துமாக்களை
கிறிஸ்துவுக்கென்று ஆயத்தப்படுத்துவது நீதியின் கனியை பெற்று தருகிறது - யோவான் 4:
35-36
தேவனுடைய
வார்த்தையை போதிப்பது / கற்பித்தல் என்பது நீதியின் கனியை உற்பத்தி செய்வதற்கான
ஒரு வழியாகும் - ரோமர் 1:13
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக