சனி, 26 அக்டோபர், 2019

#586 *கேள்வி* கிறிஸ்தவர்கள் வட்டிக்கு கடன் வாங்கலாமா?

#586 *கேள்வி* : கிறிஸ்தவர்கள் வட்டிக்கு கடன் வாங்கலாமா? கிறிஸ்தவர்கள் வட்டிக்கு கடன் கொடுக்கலாமா? எது பாவம்

*பதில்*
சில நேரங்களில் நாம் விஷயங்களை தெளிவாகக் உணர்ந்து கொள்ள அல்லது உங்களது சூழ்நிலையை சரியாக புரிந்துக் கொள்ள முடியாது.

ஏனென்றால் ஒரு "வெளிப்படையான" அல்லது பொதுவான தீர்வையே இங்கு நாம் காணமுடியும்.

முதலில், தற்போது வாங்கக்கூடிய திராணியை தாண்டி வாழ முயற்சிக்கிறீர்கள் என்பதை கடன் வாங்கும் முயற்சி தெரிவிக்கிறது.

ரோமர் 13-ல் பவுல் அரசாங்கங்களைப் பற்றியும் அவற்றுக்கான நமது கடமைகளைப் பற்றியும் பேசுகிறார்.

தங்களது செயல்பாட்டு செலவிற்கென வரியை (அல்லது தண்டத்தை)  வசூலிக்க அவர்களுக்கு உரிமை உண்டு.  கிறிஸ்தவர்களுக்கு தங்கள் வரிகளை செலுத்த வேண்டிய கடப்பாடும் உள்ளது.

ஆனால் இந்த கலந்துரையாடலில், பவுல் தான் விவாதிக்கும் கொள்கைகளை மற்ற சூழ்நிலைகளுக்கு பொதுமைப்படுத்துகிறார். "ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதைத் தவிர வேறு யாருக்கும் கடன் பட வேண்டாம் என்று”.

*பொதுவாக, கடனை வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஏன்?*
நீங்கள் கடன் வாங்கியிருந்து அதை செலுத்த முடியாமல் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் என்னவாகும்? துன்மார்க்கன் கடன் வாங்கி செலுத்தாமற் போகிறான் என்று சங்கீதத்தில் வாசிக்கிறோமே. சங். 37:21.

நம்முடைய தற்போதைய வருமான மட்டத்தில் தேவன் நியமித்திருக்கும் ஓட்டத்தில் ஓடுவது நல்லது.

சேமித்து சிலவு செய்யவும் வேலையை துவங்கவும் நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம் - இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம்பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப்பாராமலிருப்பானோ? லூக்கா 14:30

நம்முடைய எதிர்காலம் உறுதி செய்யப்படவில்லை என்று வேதம் சொல்கிறதே !!

"மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது?  கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே." யாக். 4:13-14.

இவர்களெல்லாரும் அவன்பேரில் ஒரு பழமொழியையும், அவனுக்கு விரோதமான வசைச்சொல்லையும் வசனித்து, தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக்கொள்ளுகிறவனுக்கு ஐயோ என்றும், அது எந்தமட்டும் நிற்கும் என்றும், அவன் தன்மேல் களிமண் சுமையையல்லவா சுமத்திக்கொள்ளுகிறான் என்றும் சொல்லுவார்கள். உன்னைக் கடிப்பவர்கள் சடிதியாய் எழும்புவதும், உன்னை அலைக்கழிப்பவர்கள் விழிப்பதுமில்லையோ? நீ அவர்களுக்குச் சூறையாகாயோ? ஆபகூக் 2:6-7

கடன் வாங்காமல் – இருப்பதில் வாழ்வது கிறிஸ்தவனுக்கு மேன்மை !!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

----*----*----*----*----*-----

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக