#584 - *ராகேல் ஏன் சிலையை திருடினாள்?*
1.ஆதியாகமம் 31: 19 - ராகேல் தன் தகப்பனுடைய
சொரூபங்களை திருடிக் கொண்டாள்.
2. ஆதியாகமம்31:30 -என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டு போகிறாய் என்று கேட்டான்.
3. ஆதியாகமம் 31:32 -ராகேல் அவைகளை திருடி கொண்டு வந்ததை யாக்கோபு அறியாதிருந்தான்.
ஏன் ராகேல் தன் தகப்பனுடைய தெய்வங்கள் திருடி எடுத்துக்கொண்டு
வருகிறாள்? விளக்கவும்
*பதில்*
டேராஃபீம்
என்று சொல்லப்பட்ட இந்த எபிரேய வார்த்தையை தமிழில் “சுரூபங்கள்” என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
டெராஃபிம்
என்ற எபிரேய வார்த்தையை பெரும்பாலும் "வீட்டு சிலை" அல்லது வீட்டு பொம்மை
என்று மொழிபெயர்க்கப்படுகிறது. ஆனால் கோஹ்லர்-பாம்கார்ட்னர் போன்ற சில
மொழிபெயர்ப்பாளர்கள், இது ஒரு படம் என்று சொல்வது சிறப்பான மொழிபெயர்ப்பாக கருதுகின்றனர்.
இந்த
வார்த்தை ஒரு மனிதனின் அல்லது சிலைகளின் மார்பளவுக்கும் பொருந்தும் என்பது வாதம்.
நியூ
கிங் ஜேம்ஸ் ஆங்கில வேதாகம மொழி பதிப்பு இந்த வார்த்தையை மொழிபெயர்க்க மிகவும்
நடுநிலை அணுகுமுறையாக "படம்" என்று குறிப்பிடுவதை காணலாம்.
இந்த
டெராஃபீம் என்று சொல்லப்படும் பொம்மை அல்லது சிலைகளை அல்லது சொரூபங்களை தெய்வங்களாக
அல்ல மாறாக மூடநம்பிக்கையின் வழக்கமாக கொண்டது என்று வேத ஆராய்ச்சியாளர்கள்
குறிப்பிடுகின்றனர்.
ஒரு
சாரார் கூற்றுப்படி தன் தகப்பனார் விக்கிரக வழிபாட்டிலிருந்து விடுபடும்படி இந்த
சிலைகளை ராகேல் எடுத்து வந்திருக்கலாம் என்றும் RS ஜார்ச்சி என்ற வல்லுனரம் கிட்டத்தட்ட
அதே காரணத்தைத் தருகிறார்.
வேறு
சிலர் ராகேலின் தகப்பன் தன் வீட்டின் நோய்களை குணமாக்குகிறது என்ற ஒரு மூட
நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் ஆகவே அதை ராகேல் திருடி வந்ததாகவும் சொல்கிறார்கள்.
எப்படியாயினும்
– ஏன் என்ற
விளக்கமோ அல்லது அந்த செயலின் நோக்கத்தை புரியும் வண்ணம் வேறு பதிவோ வேதத்தில் என்னால்
காணமுடியவில்லை.
லாபான்
ஒரு அரேமியன் அல்லது சிரியராக இருந்தார் என்பதை நாம் அறிவோம். தெய்வத்தின்
அடையாளமாக ஆரம்ப காலத்திலிருந்தே அவர்கள் மத்தியில் நெருப்பு கருதப்படுகிறது; செராஃபிம் என்ற
சொல் שרף சராப்பில் இருந்து எரிய வேண்டும் என்பதால், லாபனின்
டெராஃபிம் ஒளிரும் வடிவங்கள், எரிந்த பித்தளை
போன்றவற்றால் தயாரிக்கப்பட்டது என்று கருதப்படுகிறது.
யாக்கோபு
தன்னிடத்தில் தேவன் சொன்னதை அறிந்து ஏற்றுக்கொண்ட ராகேல் – தன் தகப்பனையும் தன்
வீட்டையும் விட்டு வெளியேறும் தீர்மானம் எடுத்த ஒரு பெண் என்பதால் – ஜீவனுள்ள தேவன் மீது அவளுடைய
விசுவாசம் இருந்தது என்பதை நாம் அறிகிறோம்.
அவள்
மறைத்து எடுத்து வந்த சொரூபங்கள் தான் விரும்பின வெறும் பொம்மைகளாகவும் இருந்திருக்கலாம்.
மகள்களும் மருமகனும் ஆடு மாடுகளோடு சொல்லிக்கொள்ளாமல் வீட்டை காலிசெய்து
விட்டார்கள் என்ற தகவல் அறிந்ததும் கோபத்தில் தன் வீட்டில் வேறு எவையெல்லாம்
எடுத்து சென்றிருப்பார்கள் என்று தன் வீட்டை சோதித்து பார்த்திருப்பார் லாபான் – அப்போது ராகேல் பிரியப்பட்ட
அந்த சொரூபங்கள் தன் பணத்தில் வாங்கியதாயிற்றே அதை எப்படி யாக்கோபு கொண்டு போகமுடியும்
என்று எந்த மனிதருக்கும் வரும் வழக்கமான கோபம் என்றே நான் கருதுகிறேன். வசனங்களை
கவனிக்கவும் :
ஆதி.
31:30 - இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள வாஞ்சையினால்
நீ புறப்பட்டுப்போகிறதானால் போகலாம்,
என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டு போகிறாய் என்று கேட்டான்.
ஆதி.
31:43 அப்பொழுது லாபான் யாக்கோபுக்குப் பிரதியுத்தரமாக: இந்தக் குமாரத்திகள்
என் குமாரத்திகள், இந்தப்
பிள்ளைகள் என் பிள்ளைகள்,
இந்த மந்தை என் மந்தை;
நீ காண்கிற யாவும் என்னுடையவைகள்;
என் குமாரத்திகளாகிய இவர்களையும்,
இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் இன்று நான் என்ன செய்யக்கூடும்?
ஆதி.
31:49-50
அல்லாமலும் அவன்: நாம் ஒருவரை ஒருவர் விட்டு மறைந்தபின், நீ என்
குமாரத்திகளைத் துயரப்படுத்தி,
அவர்களையல்லாமல் வேறே ஸ்திரீகளை விவாகம்பண்ணினாயானால், கர்த்தர்
எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர்; நம்முடனே
ஒருவரும் இல்லை;
பார், தேவனே
எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னபடியால், அது மிஸ்பா என்னும் பேர்பெற்றது.
இந்த
விளக்கம் நான் யூகித்த கருத்துக்களே – அதற்கு வேதத்தில் இடமில்லை.
ஏன்
ராகேல் இந்த சொரூபத்தை திருடினாள் என்ற விரிவுரையை எங்கும் வேதத்தில் என்னால் ஊர்ஜீதப்படுத்தமுடியாததால்
– என்னுடைய இந்த கருத்துக்கு
எந்த முக்கியத்துவமும் கொடுக்க வேண்டாம்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக