வெள்ளி, 25 அக்டோபர், 2019

#581 - மனுசன் இச்சையால் பாவத்திற்குள் ஈர்க்கப்படுவானா?

#581 - *ஒரு மனுசன் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம்  பெற்ற பிறகு மீண்டும் பாவம் செய்கிறான்.இதற்கு அர்த்தம் என்ன ஐயா இயேசு கிறிஸ்து  உங்கள் இரட்சிப்பை காத்து கொள்ளுங்கள் என்று சொன்னார். அப்பொழுது ஒரு மனுசன் இச்சையால் பாவத்திற்குள் ஈர்க்கப்படுவானா என்பது என்னுடைய கேள்வி

*பதில்*
ஒரு தவறான வாக்கியத்தை அடிக்கடி கேட்டு பழகிவிட்டால் அதுவே உண்மையாக ஆகிவிடும் என்ற பழமொழி இந்த குறிப்பிட்ட வாசகத்தில் பல கிறிஸ்தவ மதத்தினர் மூழ்கியிருப்பதை நாம் அறியலாம்.

அதாவது *இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம்* எடுப்பது என்ற வாக்கியம் !!

ஞானஸ்நானம் பெறும் வரை யாரும் இரட்சிக்கப்படுவதில்லை !!

ஒருவர் முதலாவது வசனத்தை கேட்க வேண்டும்
அதை விசுவாசிக்க வேண்டும்
மனந்திரும்ப வேண்டும்
பாவத்தை அல்ல - விசுவாசத்தை அறிக்கையிட வேண்டும் (அப் 8:37)
ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்
அப்போது அவர் இரட்சிக்கப்படுகிறார் என்கிறது வேதம் (மாற்கு 16:16)

இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் அல்ல  *ஞானஸ்நானம் பெற்று இரட்சிக்கப்படுவது* வேதத்தின் முறையில் சரியான வாக்கியம்.

ஒருவர் ஞானஸ்நானம் எடுத்தபோது – அவர் பரலோக பிரயாணத்தின் பாதையில் நிலைநிறுத்தப்படுகிறார். அந்த பாதையை அவர் பற்றிக்கொண்டு கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்து தன் மரணம் வரை அல்லது கிறிஸ்துவின் வருகை வரை நின்றால் தன் இரட்சிப்பை இழந்து விடாமல் காத்துக்கொள்கிறார். மாற்கு 13:13 – முடிவுபரியந்தம் நிலைநிற்பவன் இரட்சிக்கப்படுவான்.

ஒருவர் ஞானஸ்நானம் பெற்றவராக இருந்தாலும் - பிசாசின் சோதனைக்கு எப்போதும் கவனமாக இருத்தல் அவசியம். மரணத்திற்கு முன்பு வரை எப்படியாவது பாவத்தில் ஆழ்த்தி அந்த ஆத்துமாவை தன் பக்கம் இழுக்க சகல முயற்சியும் செய்வான்.

இச்சை என்பது மாம்சத்தின் பெலவீனம். இந்த பாவத்திற்கு விலகி ஓடவேண்டும். 2தீமோ 2:22

எண்ணங்களும் பார்வையும் பேச்சும் சுத்தமாக காத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால் தன் சொந்த செய்கையினாலேயே ஒருவன் சோதனைக்குள்ளாக விழுகிறான் என்கிறார் யாக்கோபு 1:13-16

களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம். துர்யிச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.  ரோ 13:13-14

நிச்சயமாக எந்த மனுஷனும் விசுவாசத்தினின்று விழும்படியாக பிசாசானவன் ஒவ்வொருவரையும் முயற்சிப்பான் முக்கியமாக தேவ பக்தியாய் இருக்க மனமுள்ளவர்களை அவன் தீவிரமாக முயற்சிப்பான் 2தீமோ 3:12
 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக