வெள்ளி, 25 அக்டோபர், 2019

#576 - கிறிஸ்துவை அறிந்து கொள்ளும் முன் பவுலின் வாழ்க்கை, கல்வி குடும்பப் பின்னணி எப்படியாக இருந்தது என்று விளக்கவும். கிறிஸ்துவை பவுல் எப்படி அறிந்து கொண்டார்?

#576 - *கிறிஸ்துவை அறிந்து கொள்ளும் முன் பவுலின் வாழ்க்கை, கல்வி குடும்ப பின்னணி எப்படியாக இருந்தது என்று விளக்கவும். கிறிஸ்துவை பவுல் எப்படி அறிந்து கொண்டார்?*

*பதில்*
*1- கிறிஸ்துவை அறிந்து கொள்ளும் முன் பவுலின் வாழ்க்கை, கல்வி குடும்ப பின்னணி எப்படியாக இருந்தது என்று விளக்கவும்*.

*வாழ்க்கை, கல்வி, குடும்பப் பின்னணி* - அவர் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சு *பட்டணத்திலே* பிறந்து, எருசலேமில் கமாலியேல் என்ற பன்டிதரிடம் பிரமாணங்களை முறையே படித்தவர்.

தேவனுக்கென்று சமய பேதங்களில்  நியாயபிரமானத்தின்படி சகலவற்றிலும் யாரும் குற்றஞ்சாட்ட முடியாத அளவில் தன் வாழ்க்கையை வைராக்கியமாக வாழ்ந்தவர் – அப். 22:3, 21:39, 26:4-5

நியாயப்பிரமானத்தில் சொன்னபடி சரியாய் 8ம் நாளில் விருத்தசேதனம்  தனக்கு செய்யப்பட்டது என்பதை இவர் அறிந்து வைத்திருக்கிறார் என்றால் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்திருக்கிறார் என்பதை நாம் அறியமுடியும்.

இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன் (அதாவது தன் பிறப்பில் / கோத்திரத்தில் கலப்பு திருமணம் இல்லாமல் இவர் பிறந்தார் என்பதை வலியுறுத்துகிறார்).

நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்; நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவர். பிலி. 3:5-6, ரோ. 11:1

சில இந்தியர்கள் அமெரிக்க பாஸ்போர்ட்டையும் வைத்துக்கொண்டு இரட்டை குடியுறிமையை வைத்திருப்பது போல இந்த பவுல் இஸ்ரவேலனாக இருந்த போதும் ரோம குடியுரிமையும் பெற்றவர் – அப். 22:25-28

*2- கிறிஸ்துவை எப்படி அறிந்து கொண்டார்*?
வசனத்தை அப்படியே கீழே பதிவிடுகிறேன்.

அப். 26:13-18 - மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன்.

நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.

அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.

இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன்.

உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி, அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக