வெள்ளி, 18 அக்டோபர், 2019

#561 - சிலர் ஜெபிக்கும் போது இயேசப்பா என்று சொல்லி ஜெபிக்கிறார்கள், வேதத்தின் படி இப்படி ஜெபிக்கலாமா?

#561 - *சிலர் ஜெபிக்கும் போது இயேசப்பா என்று சொல்லி ஜெபிக்கிறார்கள், வேதத்தின்படி இப்படி ஜெபிக்கலாமா?*

*பதில்*
தேவனே என்று பொதுவாக ஜெபத்தில் உச்சரித்தாலும் ஜெபமானது பிதாவை நோக்கி ஏறெடுக்கப்படவேண்டும் என்று கிறிஸ்து நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார். மத். 6:9

அதேனென்றால் பிதாவானவரே சகலத்திற்கும் சகலமாயிருக்கும்படி கிறிஸ்துவானவர் பிதாவானவருக்கு தன்னை கீழ்படுத்தினார் 1கொரி. 15:28

வெகு குறைவாக ஒரு சில இடத்தை தவிர மற்ற எல்லா ஜெபங்களும் பிதாவை நோக்கியே ஏறெடுக்கப்பட்டது (அப். 7:59)

இயேசுவானவர் நமக்கு அப்பா அல்ல... அவர் நமக்கு மூத்த சகோதரன் எபி. 2:11-12

நம் வீட்டில் செல்லமாக சிறு பிள்ளைகளை என்னப்பெத்த ராசா என்று சொல்வதுண்டு. அல்லது மூத்த சகோதரரை அல்லது தலைச்சன் பிள்ளையை அப்பாவாக பாவிப்பவர்கள் உண்டு. ஆனால் அவர்கள் யாரும் உண்மையான அப்பா என்று எப்படி சொல்லவதற்கில்லையோ, *நாம் ஜெபிக்கும் போது இயேசப்பா என்று சொல்வது அவரவர் சொந்த விருப்பத்தை வெளிப்படுத்தலாமேயன்றி முறையானது அல்ல*.

பெற்றெடுத்த தகப்பன் நின்று கொண்டிருக்கும் போது அவர் அருகாமையில் நின்றுகொண்டிருப்பவரை அப்பா என்று கூப்பிட்டால் உண்மையான அப்பாவின் மனம் கோபப்படுமா அல்லது அதை ஏற்றுக்கொள்ளுமா என்பது நடைமுறையிலேயே நாம் படிக்கும் பாடம். 
 
*ஆகவே, நம் அனைவருக்கும் பிதாவாயிருக்கிற சர்வ வல்லமையுள்ள அப்பாவை கனப்படுத்தாமல், அவரது குமாரனானவரும் நமது மூத்த அண்ணனும் உலக இரட்சகருமான இயேசு கிறிஸ்துவை இயேசப்பா என்று உச்சரிப்பது முறையானது அல்ல*.

கிறிஸ்துவானவர் பிதாவின் வலதுபாரிசத்தில் இருக்கிறார் !! 1பேதுரு 3:22, எபி. 10:12, எபி. 1:13, அப். 7:56

கர்த்தர், ஆண்டவர் என்ற பதங்கள் இயேசுவை குறிக்கிறது (அப். 2:36, பிலி. 2:11)

ஜெபம் தேவனை நோக்கி அதாவது பிதாவை நோக்கி கிறிஸ்துவின் வழியாக பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு ஏறெடுக்கப்பட வேண்டும் (யோ. 14:6)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229    

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக