*பதில்*
உப்பு
இடப்படாத பண்டம் கெட்டுப்போகும்.
நீண்ட
நாள் பாதுகாக்க உப்பிடப்பட வேண்டும்.
ஊறுகாய்
நல்ல உதாரணம்.
எந்த
பண்டமும் உப்பிடும் போது அதன் தன்மை நன்மை கெடாமல் இருக்கிறது. தீமை வெளியாகாமல்
பாதுகாக்கப்படுகிறது. தீய அணுக்கள் உருவாகாமல் வைக்கிறது. உறுவாக்கப்பட்ட அல்லது
சமைத்த தன்மையில் பாதுகாக்கப்படுகிறது.
இந்த
நோக்கங்களுக்காக உப்பின் தன்மையை வேதத்திலும் ஏராளமாகக் குறிப்பிடப்படுகிறது.
கிறிஸ்தவர்கள், தங்கள்
வாழ்க்கையினாலும், அறிவுறுத்தல்களாலும், தேவனுடைய வார்த்தையை சரியாக சரியான நேரத்தில் பறைசாற்றி கடைபிடித்து உலகின்
மக்களுடைய தார்மீக தவறுகளிலிருந்து பாதுகாக்க பொறுப்புள்ளவர்களாக இருக்கின்றனர்.
கிறிஸ்துவின்
நிமித்தம் துன்புறுத்தப்படலாம். எப்படியாக உப்பு கரைக்கப்பட்டாலும் கரைக்கப்பட்ட இடத்தின்
தன்மையை கெடாமல் வைத்திருக்கிறதோ அப்படியாக கிறிஸ்துவின் மக்கள் தங்களை சூழ்ந்திருக்கிறவர்களை வலியுறுத்துகிறார்கள்.
தேவனுடைய
நீதியுள்ள போதனைகளால் தங்கள் உண்மையுள்ள நடக்கைகளின் மூலம் தாங்கள் கலந்திருக்கும்
மக்களுக்கு பாதுகாவலராக இருக்கிறார்கள். பத்து நீதிமான்கள் இருந்திருந்தாலும் சோதோம்
நாட்டை காப்பாற்றியிருப்பார்கள்.
ஆதி.
18:32 - அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை
என்றார்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக