சனி, 5 அக்டோபர், 2019

#536 - மனம் இருதயம் ஆத்துமா குறித்து விளக்கம் தரமுடியுமா?

#536 - *மனம் இருதயம் ஆத்துமா குறித்து விளக்கம் தரமுடியுமா?*

*பதில்*

*மனம்* என்பது ஆங்கிலத்தில் Mind என்றும் கிரேக்கத்தில் நூஸ் என்றும் சொல்கிறார்கள்.

மனம் என்பது இன்னொரு வகையில் சொல்வோமென்றால் – எண்ணம் அல்லது புரிதல்.

ஆதி. 34:3, யாத். 14:5 எண். 23:19 போன்ற வசனங்கள் இதை நமக்கு தெளிவுபடுத்தும்.

*இருதயம்* என்பது ஆங்கிலத்தில் Heart என்றும் எபிரேயத்தில் லேபாப் என்றும் சொல்கிறார்கள்.

உள் மனிதன், மனம், விருப்பம், இதயம், ஆன்மா, புரிதல், உள் பகுதி, நடுவில், மனம், அறிவு, சிந்தனை, பிரதிபலிப்பு, நினைவகம், சாய்வு, தீர்மானம், உறுதிப்பாடு (விருப்பத்தின்), மனசாட்சி, இதயம் (தார்மீக தன்மை கொண்ட), பசியின் இருக்கையாக, உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளின் இருக்கையாக,  தைரியத்தின் இருக்கை, பேச்சின் பகுதிகள் போன்ற அர்த்தத்தில் வேதத்தின் வசனங்கள் அமைந்திருக்கிறது.

வசனத்தின் கருத்தை கொண்டு அதன் உள்அர்த்தம் வேறுபடுகிறது.
இருதயம் என்கிற வார்த்தையில் வேதத்தில் ஏறத்தாழ 251 முறை பயன்படுத்தப்படுகிறது.

*ஆத்துமா* என்பது – வாழ்க்கையை (Life) குறிக்கிறது
Hebrew : nephesh / Greek : psuche

ஆத்துமா என்கிற வார்த்தை – பிராணன் என்றும் வாழ்க்கை என்றும் வருகிறது (மத். 2:20)

லேவி. 17:11ல் அதே வார்த்தை வாழ்ககையையும் ஆத்துமாவையும் குறிப்பதை கவனிக்கவும் (ஆங்கில மொழிபெயர்ப்பு)

இந்த ஆத்துமாவே மரணத்திற்கு பின் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் புதிய சரீரம் கொடுக்கப்பட்டு நியாயதீர்ப்பில் நிற்கும் அப். 15:24, சங். 119:175

மரித்தபின் ஆவி நேரடியாக தேவனிடத்தில் திரும்பிவிடுகிறது பிர. 12:7

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக