வெள்ளி, 27 செப்டம்பர், 2019

#511 - எல்லா வாரமும் ஏன் கர்த்தருடைய பந்தியை எடுக்க வேண்டும்?

#511 - *எல்லா வாரமும் ஏன் கர்த்தருடைய பந்தியை எடுக்க வேண்டும்?*

*பதில்*

கர்த்தருடைய பந்தியை - மாதந்தோறும் / காலாண்டுகளில் ஒரு முறை / ஆண்டிற்கு ஒரு முறை / அல்லது எப்போதும் எடுக்காமலே இருப்பவர்களும் உண்டு.

நமக்காக கிறிஸ்து மரித்ததை எப்போதும் நினைவில் வைக்க அவர்கள் தயங்குகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

அடிக்கடி எடுத்துக்கொண்டால் அதன் பொருளும் அர்த்தமும் அதன் மரியாதையும் குறைந்து விடும் என்று சாக்கு சொல்வார்கள்.

ஆனால் உண்மையில் அது நேர்மாறானது.

பங்கேற்க வேண்டாம் அல்லது அதைப் பற்றி சிந்திக்க வேண்டாம் என்று முடிவு எடுக்கும் போது கர்த்தருடைய மரணத்தின் நினைவு கூர்தலையே இழந்துவிடுகிறார்கள் என்பதை அறியவேண்டும்.

அடிக்கடி ஜெபித்தால் ஜெபமானது அதன் அர்த்தத்தை அல்லது மரியாதையை இழக்கும் ஆகவே மாதத்திற்கு ஒருமுறை அல்லது 6மாதத்திற்கு ஒருமுறை அல்லது வருஷத்திற்கு ஒரு முறை ஜெபித்தால் போதும் என்றால் அதை ஏற்றுக்கொள்வார்களா?  

இயேசு கிறிஸ்து லூக்கா 22: 19 ல் "என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். நம்முடைய கர்த்தருடைய மரணத்தை தவறாமல் நினைவில் வைத்துக் கொள்வதில் நாம் அக்கறை கொள்கிறோமா?

கர்த்தருடைய இந்த நினைவு கூறுதலை 1 கொரிந்தியர் 11: 20 ல் "கர்த்தருடைய இராபோஜனம்" என்றும் 1 கொரிந்தியர் 10: 21 ல் "கர்த்தருடைய மேஜை" என்றும் அழைக்கப்படுகிறது. 1 கொரிந்தியர் 10: 16 ல் இது "அப்பம் பிட்குதல்" மற்றும் "ஐக்கியம்" என்று குறிப்பிடப்படுகிறது.

முதல் நூற்றாண்டில் சபையானது கர்த்தருடைய இராப்போஜனத்தைக் கடைப்பிடிக்க வாரத்தின் முதல் நாளில் கூடியது - அப்போஸ்தலர்
20: 7

பழைய ஏற்பாட்டின் கீழ் வாழ்ந்த யூதர்கள், ஓய்வு நாளை, அதாவது வாரத்தின் ஏழாம் நாளை – பரிசுத்தமாக வைத்திருக்கும்படி தேவன் கட்டளையிடப்பட்டபோது ​​அவர்கள் ஆண்டின் எல்லா ஓய்வு நாளையும் புனிதமாக வைத்திருந்தார்கள்.

அது போல வாரத்தின் முதல் நாளில் கடைபிடித்த கர்த்தருடைய பந்தியின் மாதிரியை எல்லா வாரத்தின் முதல் நாளிலும் கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக