வியாழன், 26 செப்டம்பர், 2019

#509 - கிறிஸ்துவின் சபையார் வாரா வாரம் கர்த்தருடைய பந்தி எடுக்கிறார்கள். அப்படி எடுத்தால் தான் பரலோகம் போகமுடியுமா?

#509 - *கிறிஸ்துவின் சபையார் வாரா வாரம் கர்த்தருடைய பந்தி எடுக்கிறார்கள். அப்படி எடுத்தால் தான் பரலோகம் போகமுடியுமா?* மற்ற சபையார் மாதத்திற்கு ஒரு முறையும் சிலர் வருடத்திற்கு ஒரு முறையும் எடுக்கிறார்களே? அவர்கள் பரலோம் போகமாட்டார்களா?

*பதில்*
*உதா*: பரீட்சைக்கு முன்னர் Question Paperலீக் ஆனது என்று அறிந்தால் மற்ற எல்லாவற்றையும் விட்டு விட்டு எப்படியாவது அந்த கேள்வி தாளின் ஒவ்வொரு கேள்வியையும் கவனமாய் படித்து தன்னை தயார் படுத்திக்கொள்வதை சிறு வயதிலிருந்தே அநுபவித்த ஒன்று !! அந்த கேள்வி தாள் பொய் என்பதை பரீட்சை எழுதியபின் அறிந்து வேதனைபட்ட எத்தனை மாணவர்களை பார்த்திருப்போம் !!

நியாயத்தீர்ப்பானது எதன் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது என்று வேதம் நமக்கு சொல்லியிருக்கிறது. (யோ 12:48)

அவருடைய வசனத்தை வைத்தும் நம் கிரியையை வைத்தும்  நியாயந்தீர்க்கப்படுவோம் என்கிறது வேதம் (வெளி 20:12)

கிறிஸ்துவின் சபையார் என்பவர் மாத்திரம் அல்ல – எந்த சபையாரும் தங்கள் நடவடிக்கைகளில் ஒவ்வொரு காரியத்தையும் வேதத்தின் படி ஒப்பிட்டு அதன்படி நடக்கும் போது நாம் பிழைத்துக்கொள்வோம் (1கொரி 11:31)

அனைத்தையும் சரியாக செய்கிறோம் என்று 5 படிகளை மாத்திரம் பிடித்துக்கொண்டு அன்பையும் ஐக்கியத்தையும் விட்டு பரிசேயரைப் போல வாழ்ந்தால் – பெயரின் நிமித்தம் பரலோகத்திற்குள் தேவன் அனுமதிப்பார் என்று நம்பதில் நிச்சயம் ஏமாற்றமாகிவிடும்.

வாரத்தின் முதல் நாளில் கர்த்தருடைய பந்தியில் பங்கு பெற்றார்கள் அப்போஸ்தலரும் ஆதி கிறிஸ்தவர்களும் (அப் 20:7)

மாதத்தில் ஒரு முறை கூடினார்கள் என்று எந்த வேத ஆதாரமும் இல்லை – ஆனால் வாரத்தின் முதல் நாளில் கூடி அப்பம் பிட்டார்கள் என்ற ஆதாரம் உள்ளது.

வாரந்தோறும் என்று சொல்லப்படவில்லை என்ற ஒரு கேள்வி எழலாம் ?

இஸ்ரவேலருக்கு கட்டளை கொடுத்தபோது ஓய்வு நாளை ஆசரிப்பாயாக என்று தான் சொன்னார். எல்லா சனிக்கிழமையையும் ஆசரித்தார்கள் !! யாத் 20:10

ஓய்வு நாள் தோறும் என்று சொல்லப்படவில்லை ஆகவே மாதத்திற்கு ஒரு ஓய்வு நாள் என்று அவர்கள் எடுத்துக்கொண்டார்களா? கல்லெறிந்து கொல்லப்பட்டிருப்பார்கள் – யாத் 31:14

ஆகவே வாரத்தின் முதல் நாள் ஒவ்வொரு வாரத்திலும் வருகிறதாகையைல் எல்லா வாரத்தின் முதல் நாளிலும் கர்த்தருடைய பந்தியில் பங்கெடுக்க வேண்டும்.

வேதத்தின் சத்தியத்தின் படி நாம் வாழும்படி நாம் போதிக்கப்பட்டடிருக்கிறோம்.

எந்த அளவு தேறியிருக்கிறோமோ அந்த அளவில் கடைபிடித்து வாழுவது அவசியம் (பிலி 3:16)

அதிகம் பெற்றவனுக்கு அதிக கணக்கு !! (லூக்கா 12:48)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக