வியாழன், 26 செப்டம்பர், 2019

#508 - சணல் உடை தரிப்பது எதைக் குறிக்கிறது?

#508 - *சணல்  உடை தரிப்பது எதைக் குறிக்கிறது?*

*பதில்*
26 இடத்தில் சணல் உடையை குறித்து தமிழ் வேதாகமத்தில் காணமுடிகிறது.

சணல் உடை என்பது – சல்லடை போல மிருதுவான மெலிதான உடை (யாத். 39:28, லேவி. 6:10)

மிக மெலிதாக மிருதுவாக இருப்பதால்  - நெருப்பு பட்ட மாத்திரத்தில் இற்றுபோகும் என்ற குறிப்பு வேதத்தில் பார்க்கிறோம் (நியா. 6:9)

பழைய ஏற்பாட்டின் மோசேயின் நியாயபிரமாண முறைமையின்படி ஆசாரியர்கள் ஆராதனை செய்ய ஆசரிப்புக்கூடாரத்திற்குள் பிரவேசிக்கும் போது சணல் உடை போட வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார் (யாத். 28:41-43)

எதற்காக சணல் உடையை உடுத்த சொன்னார் என்ற விளக்கம் வேதத்தில் என்னால் நேரடியான அர்த்தம் காணமுடியவில்லை. ஆனால் சணல் உடுத்தியிவர் அனைவரும் தேவனுக்கு பிரியமானவராயும் மேன்மையானவராயும் வேதத்தில் ஆதாரமாக காணமுடிகிறது. எசே. 16:10, தானி. 10:5, வெளி. 1:13, 15:6, தானி. 12:7, எசே. 44:16-18

இப்படி சிறு சிறு காரியங்களையும் தேவன் குறிப்பாக ஏன் கொடுத்தார் என்ற நோக்கத்தை கவனிக்கும் போது – அவர் எவ்வளவு நேர்த்தியை (perfection) நம்மிடம் எதிர்பார்க்கிறார் என்று தெளிவாய் புரிகிறது.

பெலன் இருந்தும் எழுந்து நிற்க கூட சோம்பல்பட்டு உட்கார்ந்து கொண்டே காலை ஆட்டிக்கொண்டு ஜெபிக்கும் பழக்கமும், அநாயாசமாக பயமில்லாமல் கூடுகையில் குதிப்பதும் கூச்சல் போடுவதும் தேவனுக்கு பிரியமாக இருக்குமோ என்று வேதத்தின் படி நம்மை இன்னும் அதிகமாய் நிதானிக்க தூண்டுகிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக