#505 - *ஆபிரகாமின் தசமபாகத்தை குறித்து தொடர் கேள்விகள்*
*ஆபிரகாம் தசமபாகமாக பணத்தை கொடுத்தாரா?*
ஆபிரகாம்
காலத்தில் பணத்தை அடிப்படையாக கொண்டு அவருடைய செல்வாக்கு சொல்லப்படவில்லை (ஆதி. 13:5-6)
*பதில்:*
பணம்
/ தானியம் / ஆடு மாடுகள் –
எவைகளில் கொடுத்தார் என்ற குறிப்பு வேதத்தில் நான் காணவில்லை. எல்லாவற்றிலும் கொடுத்தார்
என்று வேதம் சொல்கிறது (ஆதி. 14:20)
கேள்வி-2: *ஆபிரகாம்
தேவனிடத்திலிருந்து பெற்ற செல்வத்திலிருந்து எடுத்து தசமபாகம் கொடுத்தாரா? * அதாவது ஆபிரகாமுக்கு இருந்த
பணத்தில் பொன் வெள்ளி ஆடு மாடு ஓட்டகம் இவைகளில்
இருந்து எடுத்து தசமபாகம் கொடுத்தாரா?
*பதில்-2*
ஆதி.
14:20 மற்றும் எபி. 7:4ல் தான் கொள்ளையிட்டதில் இருந்தும் கொடுத்ததாக படிக்கமுடிகிறது.
கொள்ளை
என்றால் இந்த காலத்தில் பார்ப்பது போல உள்ள மற்றவரிடமிருந்து பிடுங்கி கொள்ளையடிப்பு
அல்ல. அவர் போரிட்டு எதிரியை வென்று கிடைத்த பொருளிலும் தசமபாகம் கொடுத்தார்.
*கேள்வி-3*
ஆபிரகாம்
மாதம் மாதம் (அதாவது ஒவ்வொரு மாதமும்) தசமபாகம் கொடுத்தாரா ?
*பதில்-3*
அந்த
தகவல் குறிப்பை நான் வேதத்தில் காணவில்லை. பிரதி மாதம் பிரதி வருடம் என்று எந்த தசமபாகம்
குறித்ததான சட்டம் கொடுப்பதற்கு முன்னரே அவர் மனமுவந்து கொடுத்த காணிக்கை இது.
*கேள்வி-4*
ஆபிரகாம்
தன் உழைப்பின் பலனாக கிடைத்த செல்வத்திலிருந்து தசமபாகம் கொடுத்தாரா?
*பதில்-4*
கேள்வி
2ற்கான பதில் இதில் பொருந்தும்.
*கேள்வி-5*
ஆபிரகாம்
தாம் கொள்ளையிட்டதிலிருந்து எடுத்து தசமபாகம் கொடுத்தார்... என வேத வசனமே
சொல்லுகிறது
இதன் அடிப்படையில் நாமும் ஆபிரகாமைப்போல்
கொள்ளையிட்டு தசமபாகம் கொடுத்தால் அதை தேவன் ஏற்றுக்கொள்ளுவாரா ?
*பதில்-5*
கேள்வி
2ற்கான பதில் இதில் பொருந்தும்.
*கேள்வி-6*
யாக்கோபு
தசமபாகம் கொடுப்பதாக பொருத்தனை பண்ணினதற்கு வசனம் ஆதாரம் இருக்கு...
சரி இப்போது
கேள்வி - யாக்கோபு
தசமபாகம் கொடுத்தற்கு வசன ஆதாரம் இருக்கா இருந்தால் அதை எழுதுங்கள்...
*பதில்-6*
ஆதி.
28:18-22
*கேள்வி-7*
மல்கியா 3:10:யில்
நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து,
இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று
அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
மேற்கண்ட வசனத்தின்படி தசமபாகம் கொடுத்து ஆசீர்வாதம்
பெற்றவர்களை உங்கள் சபையில் இருந்து சில நபர்களுடைய பெயர்களை எழுதுங்கள்....
(தாங்கள்
எழுதுகிற
பெயர்களை உடைய நபர்கள்
ஆபிரகாமைவிட யாக்கோபைவிட செல்வந்தர்களா? என தெரிந்து கொள்ள கேட்கிறேன்.
*பதில்-7*
தசமபாகம்
பெறுகின்றவரிடம் இந்த கேள்வியை நீங்கள் கேட்டு அறிந்து கொள்ளலாம். புதிய ஏற்பாட்டு
சத்தியத்தில் தசமபாகம் முறை சொல்லப்படாததால் எங்கள் சபையில் நாங்கள் தசமபாகம்
வாங்குவதில்லை.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக