புதன், 25 செப்டம்பர், 2019

#506 - இஸ்ரவேலின் முதல் இராஜா சவுல். இவர் செய்த தவறுகள் (அல்லது பாவங்கள்) எத்தனை?

#506 - *இஸ்ரவேலின் முதல் இராஜா சவுல். இவர் செய்த தவறுகள் (அல்லது பாவங்கள்) எத்தனை?*

*பதில்*
மனுஷன் செய்த பாவங்கள் எத்தனை என்று தேவனை தவிர யாரும் எண்ண முடியாது. அவரே அதை தன் முதுகுக்கு பின்னால் எறிந்து போட விரும்புகிறவர் (ஏசா. 38:17)

*குறிப்பான சிலவற்றை கீழே பட்டியலிடுகிறேன்*:

1)ஆசாரியனாகிய சாமுவேல் செய்ய வேண்டிய வேலையை சவுல் செய்தது.

1சாமு. 13:8-13 அவன் தனக்குச் சாமுவேல் குறித்தகாலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான்; … அப்பொழுது சவுல்: ... சர்வாங்க தகனபலியைச் செலுத்தினான்.  ... சாமுவேல் வந்தார்; …  நீர் செய்தது என்ன என்று சாமுவேல் கேட்டதற்கு, சவுல்: ஜனங்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும், குறித்த நாட்களின் திட்டத்திலே நீர் வராததையும், … கண்டபடியினாலே,  .... துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான். சாமுவேல் சவுலைப் பார்த்து: புத்தியீனமாய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; மற்றப்படி கர்த்தர் இஸ்ரவேலின்மேல் உம்முடைய ராஜ்யபாரத்தை என்றைக்கும் ஸ்திரப்படுத்துவார்.

2)எல்லாவற்றையும் அழிக்க சொன்ன வார்த்தையை மீறியது
1சாமு. 15:22-23 அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.

3) கிபியோனியரை கொன்ற கணக்கு 2 சாமுவேல் 21-1 
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக